ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
988. ஸ்ரீ ஸாமகா3யனாய நம:
ஸாமகா3யன மாடு3வ அதி4காரிக3ளிகெ3 ஆஶ்ரய
‘ஸாமகா3யன’ நமோ ஸுவர்ண ஜ்யோதி கமல உத்தம
ஆனந்த3மய ஸர்வ ப்ரேரக ஞானரூபி நின்ன
ப்ரத2மஜ ப்3ரம்மதே3வனு முக்2ய அதி4காரி ப்ரிய
ஸாம காயனம் செய்யும் அதிகாரிகளுக்கு ஆஸ்ரயனே. ஸாமகாயனனே உனக்கு என் நமஸ்காரங்கள். தங்கமயமான ஜோதிரூபமான கமலோத்தமனே. ஆனந்தமயனே. ஸர்வ ப்ரேரகனே. ஞானரூபியே. உன் முதல் ஜீவனான பிரம்மதேவன், முக்கிய அதிகாரி ஆகிறான். ப்ரியனே.
989. ஸ்ரீ தே3வகி நந்த3னாய நம:
ஸோமரஸ ரஸரூப ஆனந்த3 அனுப4வவான்
ரமாபதே ‘தே3வகி நந்த3னனே’ நமோ நினகெ3
பூ4மியலி தே3வகிகெ3 ப்ரியானந்த3 ஸுதனாகி3
ஸுமனஸ ஸஜ்ஜனரன்னு ரக்ஷிஸிதி3 ஸ்ரீகிருஷ்ண
ஸோமரஸத்தைப் போன்றதான, ஆனந்த அனுபவத்தை கொண்டவனே. ரமாபதியே. தேவகி நந்தனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பூமியில் தேவகிக்கு ப்ரியமான மகனாகி, ஸஜ்ஜனர்களை காத்தாயே, ஸ்ரீகிருஷ்ணனே.
990. ஸ்ரீ ஸ்ரஷ்டே நம:
ப4க்தரிகெ3 ஞான உத்பாத3கனு ‘ஸ்ரஷ்டா’ நமஸ்தே
ஜக3த்ஸ்ரஷ்டா நீ ப4க்தரிகெ3 தே3ஹவித்து ஶ்ரவண
மொத3லாத3 ஸாத4ன மாடி3ஸி த்4யான ப2லவீவி
ஸுதா1ரக விக்3ஞானாக்2ய அபரோக்ஷ நீ கொடு3வி
பக்தர்களுக்கு ஞானத்தை அளிப்பவனே. ஸ்ரஷ்டனே உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை படைத்தவனே. நீ பக்தர்களுக்கு தேகத்தை அளித்து, ஸ்ரவண முதலான ஸாதனங்களை செய்வித்து, த்யான பலன்களை அளிக்கிறாய். விக்ஞானமான அபரோக்ஷத்தை நீ அளிக்கிறாய்.
***
No comments:
Post a Comment