Thursday, June 30, 2022

[பத்யம் #50] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #50] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #50]

தப்தமுத்3ரெய ஹரிய அங்கித

4க்தியிம் படெ3யத3லெ நித்யதி3

உத்தமத3 ஜப ஹோம தபக3 மாடி3 2லவில்ல |

தை3த்யரவுக3 ஸெளெவரல்லதெ3

மத்தெ ஸம்ஷய ஸல்ல 4ரிபுது3

சித்தஶுத்3தி4 படெ3து3 பங்கஜனாப4னங்கிதவ ||50

தப்தமுத்ரெய - தப்த முத்திரையை; ஹரிய அங்கித - ஸ்ரீஹரியின் அங்கிதத்தை; பக்தியிம் படெயதலெ - பக்தியுடன், பெறாமல்; நித்யதி - தினம்தோறும்; உத்தமத - மிகச் சிறந்ததான; ஜப ஹோம தபகள - ஜப, ஹோம, தபங்களை; மாடி பலவில்ல - செய்து எவ்வித பலனும் இல்லை; தைத்யரவுகள - தைத்யர்கள் அவற்றை; ஸெளெவரு - இழுத்துக் கொள்வார்கள்; அல்லதெ - இதற்கு மாறாக; மத்தெ ஸம்ஷய ஸல்ல - வேறெந்த சந்தேகமும் இன்றி; சித்தஷுத்திய படெது - திடமான, தூய்மையான அறிவினைப் பெற்று; பங்கஜனாபனங்கிதவ - ஸ்ரீஹரியின் அங்கிதத்தை; தரிபுது - பெற வேண்டும்.

ஸ்ரீஹரியின் அங்கிதம் என்னும் தப்த முத்திரையை பெறாமல், தினம்தோறும் மிகச் சிறந்ததான ஜப, ஹோம, தபங்களை செய்து எவ்வித பலன்களும் இல்லை. தைத்யர்கள் அவற்றை இழுத்துக் கொள்வார்கள். இதற்கு மாறாக, எவ்வித சந்தேகமும் இன்றி, திடமான, தூய்மையான அறிவினைப் பெற்று, ஸ்ரீஹரியின் அங்கிதத்தைப் பெற வேண்டும்.

நானு நன்னது3 எம்ப3 ஜட3மதி

மானவனு தி3னதி3னதிv மாடு3

ஸ்னான ஜப தே3வார்ச்சனெயெ மொத3லாத3 கர்மக3 |

தா3னவரு ஸெளெதொ3ய்வரல்லதெ3

ஸ்ரீனிவாஸனு ஸ்வீகரிஸ

த்தானெ பக்வ கபித்த22 4க்ஷிஸித3வோலஹுது ||(10-13)

நானே அனைத்தையும் செய்தேன் என்ற கர்வத்துடன் செய்த கர்மங்களை எதையும் ஸ்ரீஹரி ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அத்தகைய கர்மங்களை தானவர்கள் இழுத்துக் கொள்கிறார்கள். அதாவது, நமக்கு எவ்வித பலன்களும் வருவதில்லை. இப்படி ஆகிவிடாமல் இருக்க, தக்க ஸாதனைகளை செய்து, மோட்ச பலன்களைப் பெறுவதற்கு ஒரு தக்க குருவை அணுகி, அங்கிதத்தை பெற வேண்டும் என்கிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாஸர்

***


Wednesday, June 29, 2022

[பத்யம் #49] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #49] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #49]

இத3கனந்தர இருதிஹுது33ஹு

வித3வித33 ஸாத4னத3 மார்க்க3வு

முதvதி3 ஜீவர மூலயோக்3யதெக3ளனு அனுஸரிஸி

மத33னெனிஸதெ3 ஸாரி கு3ருக3

பதெ3பதெ3கெ3 ஸேவெயலி மெச்சிஸி

ஹத3வரிது1 ஸ்வீகரிஸு தா3ஸ்யத3 பி3ருதி3னங்கிதவ ||49 

இதனகந்தர - இதன் பிறகு; ஜீவர மூலயோக்யதெகளனு அனுஸரிஸி - அந்த ஜீவனின் மூலயோக்யதைகளுக்கேற்ப; பஹு விதவிதத - பலவிதமான; ஸாதனத மார்க்கவு - ஸாதனை மார்க்கங்கள்; இருதிஹுது - இருக்கின்றன; முததி - மகிழ்ச்சியுடன்; மதடனெனிஸதெ - அஞ்ஞானியாக இருக்காமல்; ஸாரி - சென்று; குருகள பதெபதெகெ - குருகளின் ஒவ்வொரு தேவைக்கேற்பவும்; ஸேவெயலி மெச்சிஸி - சேவைகளை செய்து அவரை மகிழ்வித்து; ஹதவிரிது - விதிகளை அறிந்து; தாஸ்யத - ஹரிதாஸ்யத்தின்; பிருதினங்கிதவ - விருதான அங்கிதத்தை (அவரிடமிருந்து); ஸ்வீகரிஸு - ஏற்றுக் கொள்; 

இதன் பிறகு, ஒரு தக்க குருவினை அடைந்து, அவரிடமிருந்து அங்கிதத்தைப் பெற வேண்டும் என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

அந்த ஜீவனின் மூலயோக்யதைகளுக்கேற்ப, பலவிதமான, ஸாதனை மார்க்கங்கள் இருக்கின்றன. அஞ்ஞானியாக இருக்காமல், குருகளின் ஒவ்வொரு தேவைக்கேற்பவும், சேவைகளை செய்து, அவரை மகிழ்வித்து, விதிகளின்படி, ஹரிதாஸ்யத்தின் விருதான அங்கிதத்தைப் பெற வேண்டும். 

குருவின் மகிமைகளையும், குருவின் சேவைக்கான பலன்களையும் முன்னர் பல உதாரணங்களுடன் பார்த்திருக்கிறோம். 

3ரிதெ3 ஜலதொளு முளுகி3 பி3ஸிலொளு

பெரளனெணிஸிதரேனு சத்கு3ரு

ஹிரியரனுசரிஸித3 மர்மவனரியதி3 நரனு ||(7-14) 

ஒரு ஸத்குருவை அணுகி, அவரின் அருளைப் பெறாமல், தீர்த்தக்ஷேத்திரங்களுக்கு செல்வதோ, விரல்களை எண்ணியவாறு பல்வேறு ஜபங்களை செய்வதோ எவ்வித பலன்களையும் தருமா? என்று கேட்கிறார் ஸ்ரீஜகன்னாததாஸர்.

***



Tuesday, June 28, 2022

[பத்யம் #48] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #48] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #48]

லஜ்ஜெ வர்ஜிஸி முத3தி3 காலலி

கெ3ஜ்ஜெ த4ரிஸுத கரதி3 தாளவ

ஹெஜ்ஜெ நர்தனதி3ந்த3 பா3ரிஸுத்ஹரிய நாமவனு |

3ர்ஜிஸுத ஸஜ்ஜனர ஸத3னதி3

அர்ஜிஸித3னர்ப்பிஸுத தி3னதி3

அப்3ஜப4வ பிதனொலிமெ படெ3வுதெ3 தா3ஸலக்‌ஷணவு ||48

லஜ்ஜெ வர்ஜிஸி - வெட்கத்தை விட்டுவிட்டு; முததி - மகிழ்ச்சியுடன்; காலலி கெஜ்ஜெயெ தரிஸுத - காலில் சலங்கையை தரித்தவாறு; ஹெஜ்ஜெ நர்தனதிந்த - குதித்து நாட்டியமாடியவாறு; கரதி தாளவ - கையில் தாளத்தை பிடித்துக்கொண்டு; பாரிஸுத்த - வாசித்தவாறு; ஹரிய நாமவனு கர்ஜிஸுத - ஸ்ரீஹரியின் பெயரை உரக்க சொல்லியவாறு; தினதின - தினமும்; ஸஜ்ஜனர ஸதனதி - சஜ்ஜனர்களின் வீடுகளில் (சென்று); அர்ஜிஸிதனர்ப்பிஸுத - விரும்பியவற்றை வேண்டியவாறு (கோரிக்கைகளை விண்ணப்பித்தவாறு); அப்ஜபவ பிதனொலிமெ - பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரியின் தரிசனத்தை; படெவுதெ - பெறுவதே ; தாஸலக்ஷணவு - ஹரிதாஸ லட்சணம் ஆகும்.

வெட்கத்தை விட்டு, மகிழ்ச்சியுடன், காலில் சலங்கையை தரித்தவாறு, குதித்து நர்த்தனம் ஆடியவாறு, கையில் தாளத்தை பிடித்துக்கொண்டு, வாசித்தவாறு, ஸ்ரீஹரியின் பெயரை உரக்கச் சொல்லியவாறு, தினமும் ஸஜ்ஜனர்களின் வீடுகளுக்குச் சென்று, பெற்றவற்றை ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்தவாறு, பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெறுவதே ஹரிதாஸ லட்சணம் ஆகும்.

ஹரிதாஸன் என்பவன் யார் என்பதை ஸ்ரீவ்யாஸராயர் இந்தப் பாடலில் கூறுகிறார்.

க்ராஸகில்லதே போகி

பரர மனெகள பொக்கு

தாஸனெந்து துளஸி மாலெ தரிஸி

பேஸரில்லதெ அவர காடி பளலிஸுத

காஸுகளிஸுவ புருஷ ஹரிதாஸனே ||

தாஸரெந்தரெ புரந்தர தாஸரய்யா

யாயிவாரவ மாடி விப்ரரிகெ ம்ருஷ்டான்ன

ப்ரீயதலி தானொந்து கொடத லோபி

மாய ஸம்ஸாரதலி மமதெ ஹெச்சாகித்து

காயனவ மாடலவ ஹரிதாஸனே ||

தாஸரெந்தரெ புரந்தர தாஸரய்யா

மேலே உள்ள பத்யத்தில், இந்தப் பாடலில் ஸ்ரீவ்யாஸராயர் கூறியுள்ள விஷயங்களையே இங்கு ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் விளக்கியிருக்கிறார் என்பதை பார்க்கலாம். இதையே ஸ்ரீவிஜயதாஸரும் தமதுஹரிதாஸ லட்சண ஸுளாதியிலும் சொல்லியிருக்கிறார்

***