Friday, June 17, 2022

[பத்யம் #37] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #37] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #37]

உத3த்தமத3 ஈ மார்க்க3ஸத்வரு

சித்ததொ3ளு நெலெகொ3ளிஸி நிர்மல

வ்ருத்தி1யொளு ஆஸக்தராக3லு தா3ஸ்ய நிஜபா4வ |

வ்யக்தவாயிது ப்ருத்வியொளு ம

த்துத்தமரு பி3த்த1ரிஸி நிலிஸலு

ஆர்த்தி2யிந்த3லி தா3ஸகூட13 பெ1ஸரு இத3காய்து ||37 

மார்க்கஸத்வரு - இந்த வழியை பின்பற்றியவர்கள்; உதத்தமத - மேற்கூறிய விஷயங்களை; சித்ததொளு நெலெகொளிஸி - தங்களின் சித்தத்தில் நிறுத்தியவாறு; நிர்மல வ்ருத்தியொளு ஆஸக்தராகலு - தூய்மையான வாழ்க்கை முறையில் ஈடுபட; தாஸ்ய நிஜபாவ - ஹரிதாஸ சாகித்யத்தின் உண்மையான அர்த்தம்; ப்ருத்வியொளு - இந்த உலகில்; வ்யக்தவாயிது - வெளிப்படத் துவங்கியது; மத்துத்தமரு - மேலும் இதே வழியில் வந்த உத்தமர்கள்; பித்தரிஸி நிலிஸலு - நன்கு இதனை விளக்கியவாறு பின்பற்ற; தாஸகூட - தாஸகூட என்று; இதகெ - இதற்கு; ஆர்த்தியிந்தலி - மிகவும் சிறப்பாக; பெஸரு ஆய்து - பேர் வந்தது. 

பகவந்தனின் நாமஸ்மரணையை செய்தவாறு, பரம வைராக்யஸாலிகளாக ஹரிதாஸர்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று அவனது மகிமைகளை பாடியவாறு, மக்களிடையே பக்தி மார்க்கத்தை பரப்பினர். இதனால் ஹரிதாஸ ஸாகித்யத்தின் உண்மையான நோக்கம் / அர்த்தம் மக்களுக்கு புரியத் துவங்கியது. இந்த மார்க்கத்திற்குதாஸகூட என்ற பெயரும் வந்தது.

தாஸ சதுஷ்டயர்களான ஸ்ரீபுரந்தரதாஸர், ஸ்ரீவிஜயதாஸர், ஸ்ரீகோபாலதாஸர் மற்றும் ஸ்ரீஜகன்னாததாஸர் மற்றும் அனேக பல தாஸர்களின் வாழ்க்கை வரலாற்றினை படித்தால் அவர்களது ஞான, பக்தி, வைராக்கியங்கள் எப்படிப்பட்டது என்பது புரிய வரும். தாச தீக்ஷை பெறுவதற்கு முன் / பின் என அவர்களில் நடந்த மாற்றத்தினை பார்த்தால், ஹரிதாஸ ஸாகித்யத்தின் மகிமை / சிறப்பு தெரிய வரும். 

ஒன்பது கோடி மதிப்புள்ள சொத்தினை கிருஷ்ணார்ப்பணம் என்று கூறிய ஸ்ரீனிவாஸ நாயகர் (பின்பு ஸ்ரீபுரந்தரதாஸர்); குரு கேட்டார் என்பதற்காக தனது 40 ஆண்டு கால ஆயுளையே தானம் செய்த ஸ்ரீகோபாலதாஸர்; என பல உதாரணங்களை சொல்லலாம். 

வைராக்3 மார்க்க3 கேளு தா3ரித்3ர்ய மார்க்க3 கேளு

ஸ்ரீராமன பாத3 ஆராதி4ஸுவத3க்கெ

..

நீரு ஒளகெ3 இன்னு கமலவித்த3ந்தெ

காரணனாகி3 கார்ய வில்லதி3ரலிரபே3கு

மாரஜனக நம்ம கோபாலவிட்டலனு

தோரி கொட்ட வைராக்3யவனெ தோருவெ ||1 

என்று தனதுவைராக்ய ஸுளாதியில் ஸ்ரீகோபாலதாஸர், வைராக்கியம் என்றால் என்ன, எப்படி அதனைப் பெறுவது என்பதை விளக்கியிருக்கிறார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகளில், தாமரை இலை தண்ணீரினைப் போல, சம்சாரத்தில் இருந்தாலும், ஒரு சன்யாசியைப் போல இருந்து, கம்ஸாரியை நினைக்க வேண்டும் என்கிறார். 

இத்தகைய ஹரிதாஸர்களின் நடவடிக்கைகளை / ஞான பக்தி வைராக்கியங்களை பார்த்து, மக்களிடையே ஹரிதாஸ ஸாகித்யத்தின் மீது மதிப்பு வரத் துவங்கியது என்பதையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர்.

**


No comments:

Post a Comment