Thursday, June 2, 2022

[பத்யம் #26] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #26] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #26]

ஹக3ரணத3 ஜக3தி3 ஸ்வார்த்த2ரு

3கெ33கெ3 வாக்சதுரதனதி3ம்

3கெயுவரு விஷயவனு மனதொ3ளு பா3ஹ்யகு3ருவெனிஸி |

மகு3ளெ நிஜகுvரு விஷயபா3ஹ்யனு

3கெ3 பரக3தி மேல்மெ சிஷ்யகெ3

ஸுக33தொ3ளு தா லப்4யனாகு3 1க்வஸமயக்கெ ||26 

ஹகரணத ஜகதி - ஏமாற்றுதல் நிறைந்த இந்த உலகில்; ஸ்வார்த்தரு - தன் சொந்த லாபத்திற்காக; மனதொளு - தங்கள் மனதில்; பாஹ்யகுருவெனிஸி - தாமே இந்த உலகின் குரு என்று நினைத்துக் கொண்டு; பகெபகெய - பல்வேறு விதமான;  வாக்சதுரதனதிம் - சுவை மிகுந்த பேச்சுக்களால்; விஷயவனு - விஷயங்களை (உபதேசங்களை); பகெயுவரு - விளக்குவார்கள்; மகுளெ - ஆனால் கேள்; நிஜகுரு - உண்மையான குருவானவர்; விஷய பாஹ்யவனு பகெவ - விஷயத்தினை மிகவும் உண்மையாக விளக்குவார்; சிஷ்யகெ - தன் சிஷ்யனுக்கு; பரகதி மேல்மெ - முக்தியின் சிறப்பினை; பகெவ - விளக்குவார்; பக்வஸமயக்கெ - சிஷ்யரின் தக்க சமயத்தில்; ஸுகமதொளு - சகஜமாக; தா லப்யனாகுவ - தான் தோன்றுவார்; 

ஒரு சிஷ்யருக்கு குருவானவர் எப்படி தோன்றுவார் என்பதை இங்கு விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

சுவை மிகுந்த பேச்சுக்களால், தாமே இந்த உலகின் குரு என்று சொல்லிக் கொண்டு, தங்களின் சொந்த லாபத்திற்காக, எதையாவது உபதேசம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் இவ்வுலகில் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான குருவானவர், யதார்த்த ஞானத்தை விளக்குபவராக இருப்பார். முக்தியின் சிறப்பினை சிஷ்யருக்கு எடுத்துச் சொல்வார். சிஷ்யனின் பக்வ காலத்தில் தான் சரியாகத் தோன்றுவார். 

ஸ்ரீனிவாஸ நாயகர், ஸ்ரீவ்யாஸராயரை, அவர் பக்குவம் அடைந்தபிறகே வந்தடைந்தார். முதன்முதலில் குரு சிஷ்யர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது, ஸ்ரீவ்யாஸராயர் கேட்டது - ‘ஏன் இவ்வளவு தாமதம் இங்கு வருவதற்கு?’. ஆனால், அந்த சந்திப்பு நிகழ்வதற்கு சிஷ்யருக்கு, தக்க காலம் வரவேண்டியிருந்தது என்பதை அறிகிறோம். 

உண்மையான குருவானவர், சிஷ்யனுக்கு யதார்த்த ஞானத்தை புரியவைத்து, முக்தியின் சிறப்பினை விளக்குவதாக இருக்கிறார். ஆனால், தற்காலத்தில் பல குருகள், வெறும் நகைச்சுவைப் பேச்சிலும், தேவையில்லாத கதைகளைச் சொல்லியும், பலரையும் ஏமாற்றி வருவதை நாமே கண்கூடாகப் பார்க்கிறோம். இதையே ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் இங்கு சிறப்பாகச் சொல்லி, குருவின் தகுதியை நமக்குப் புரிய வைக்கிறார். 

கரதலி ஜபமணி பாயலி பந்த்ரவு

அரிவெ முஸுகெ மோரெகெ ஹாகி

பர ஸதியர குண மனதலி ஸ்மரஸுத

பரம வைராக்யஷாலி எந்தெனிஸி

(உதர வைராக்யவிது) 

என்று ஸ்ரீபுரந்தரதாஸர், தற்காலத்தில் இருக்கும் பல ஏமாற்று குருகளைப் பற்றி, அவர்களின் கபட நாடகங்களைப் பற்றி அன்றே பாடிவைத்திருக்கிறார். கையில் ஜபமணி, வாயில் ஏதோவொரு மந்திரம், தலையை மூடிக்கொண்டு ஜபம் செய்வது போல இருப்பது - ஆனால், மனதில் பிற விஷயங்களைப் பற்றியே சிந்தித்திருப்பது; வெளியே மட்டும், தான் பரம வைராக்கியசாலி என்று சொல்லிக் கொள்வது - என்று இத்தகையவர்களின் வேடத்தை விளக்கியிருக்கிறார். 

ஒரு நல்ல / தக்க குருகளின் கருணை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றியும் இவ்வாறு கூறியிருக்கிறார். 

குருகருணவாகோது பரம துர்லபவய்யா

பரிபரி வ்ரதகளாசரிஸி பலவேனு

குருகருண ஒந்தல்லதெ கதி பேரெயுண்டே

ஷரீரத புத்ர மித்ர களத்ர பாந்தவரு நெரெஸலிஸுவரே

ஸத்கதிகெ ஸாதனவா

நிருததி குரு பாதவ நிஜவாகி மனதல்லி

அரிது பஜிஸலு அகிள ஸம்பதவித்து

பரிபாலிஸுவ நம்ம புரந்தரவிட்டலா 

குரு கருணையைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால், அப்படி அவரது பாதங்களை மனதில் நிறுத்தி, பஜித்து, பூஜை செய்து, அவரது கருணையைப் பெற்றால், முக்தியையே கொடுத்து அருள்கிறான் நம் புரந்தர விட்டலன் என்று பாடியிருக்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர்.

***

No comments:

Post a Comment