Wednesday, June 1, 2022

[பத்யம் #25] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #25] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #25]

கு3ருவினிந்த3லெ ஞானலாப4வு

கு3ருவினிந்த3லெ ஸித்தி4ஸாத்4யவு

கு3ருகுலதி3 கு3ருஸேவெகெ3ய்வுதே3 பரம கு3ருத4ர்ம |

கு3ருவபி3ட்டன்யத்ர எரக3தெ3

கு3ருவினிம் ஸத்க்ருபெய படெ3வுது3

கு3ருவெ ஸத்க3திதா3 கு3ருவில்லத3லெ ஹரி ஒலிய ||25 

குருவினிந்தலெ - குரு மூலமாகவே; ஞானலாபவு - ஞானம் பெற முடியும்; குருவினிந்தலெ - குரு மூலமாகவே; ஸித்திஸாத்யவு - நன்மைகள் பயக்கும்; குருகுலதி - குருகுலத்தில்; குருஸேவெகெய்வுதே - குரு ஸேவையை செய்வதே; பரம குருதர்ம - மிகச்சிறந்த குரு தர்மம் ஆகும்; குருவபிட்டன்யத்ர எரகதெ - குருவை விட்டு வேறு எங்கும் செல்லாமல்; குருவினிம் - குருவிடமிருந்து; ஸத்க்ருபெய படெவுது - அவரது அருளைப் பெற வேண்டும்; குருவெ ஸத்கதிதாத - குருவே சத்கதியை தரத்தக்கவர்; குருவில்லதலெ - குரு இல்லையெனில்; ஹரி ஒலிய - ஹரி மகிழ்வதில்லை. 

குருவிடமிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய லாபங்களைப் பற்றி இங்கு விவரிக்கிறார் ஸ்ரீதாஸர். 

குரு மூலமாகவே ஞானம் பெற முடியும்; நமக்கு நன்மைகள் பயக்கும்; குருகுலத்தில், குரு ஸேவையை செய்வதே மிகச்சிறந்த தர்மம் ஆகும்; குருவை விட்டு விலகாமல், அவரது அருளைப் பெற வேண்டும்; குருவே ஸத்கதியை தரத்தக்கவர். குரு இல்லையெனில், ஹரி மகிழ்வதில்லை என்று குருவின் மகிமைகளைப் போற்றுகிறார் ஸ்ரீதாஸர். 

இத்தகைய குருவின் ஸ்தானத்தின் சிறப்புகளை ஹரிதாஸர்கள் பலரும், பல்வேறு கிருதிகளில் சொல்லியிருக்கின்றனர். 

குருகள கருணவே தாரித்ர்ய பஞ்சன

குருகள கருணவே மஹாதைஸ்வர்ய காரண

குருகள கருணவெ சகல ரோக ஹரண

குருகள கருணவெ சகல துக்க நாஷன

குருகள கருணவெ சகல சுக சாதன ||

(பாதராயண விட்டலதாஸர்) 

ஸ்மரிஸு குருகள மனவே ஸ்மரிஸு என்னும் ஸ்ரீவரதகோபால விட்டலதாஸரின் பாடல் குருவின் மகிமைகளை அற்புதமாக பட்டியலிட்டுக் காட்டுகிறது. 

குரு ஸ்மரணெயிந்த ஸகல ஆபத்து பரிஹார

குரு ஸ்மரணெயிந்த ஸம்பதவு நினகெ |

குரு ஸ்மரணெயிந்த புஷ்கள த்ரவ்யதொரகுவுது

குரு ஸ்மரணெயிந்த ஹரிவொலிது பொரெவ ||2 

குருவின் மூலமாக வந்தாலே, ஸ்ரீஹரி மகிழ்கிறான் என்று கூறி, இதே விஷயத்தை அடுத்த பத்யத்திலும் தொடர்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

***


No comments:

Post a Comment