Wednesday, June 15, 2022

[பத்யம் #35] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #35] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #35]

ஸ்ரீஷ ஸ்ரீஹரி சித்த ஸம்மத

ஆ ஸமீரன கரதி3 ஸ்தாபித

நாஷவில்லத3 க்ரமதி3 ஆர்யரு நடெ3ஸுதை11ந்த3 |

க்லேஷ களெயுத தா3ஸ பா4வவ

வ்யாஸரிந்த3லி தா3ஸவர்யரு

தே3ஷதொ3ளு பஸரிஸித3ரல்லதெv பொஸது1 ஒந்தி3ல்ல ||35 

ஸ்ரீஷ ஸ்ரீஹரி - ஸ்ரீஹரியின்; சித்த ஸம்மத - சம்மதத்தைப் பெற்ற; ஸமீரன கரதி ஸ்தாபித - வாயுதேவரின் அவதாரரான ஸ்ரீமத்வர் மூலமாக நிறுவப்பட்ட த்வைத மதத்தை; நாஷவில்லத க்ரமதி - அழிந்து விடாமல்; ஆர்யரு நடெஸுதைதந்த - நமது குருகள் பின்பற்றி வந்தனர். இத்தகைய ஸித்தாந்தத்தை; க்லேஷ களெயுத - அனைத்து துன்பங்களையும் போக்கக்கூடிய; தாஸ பாவவ - ஹரிதாஸ சாகித்யத்தை; வ்யாஸரிந்தலி - வ்யாஸராஜரிடமிருந்து உபதேசம் பெற்று; தாஸவர்யரு - ஸ்ரீபுரந்தரதாஸர்; தேஷதொளு பஸரிஸிதரு - இந்த தேசத்தில் பரப்பினார்; அல்லதெ - தவிர; பொஸது ஒந்தில்ல - புதியதாக அவர் எதையும் பரப்பவில்லை. 

ஹரிதாஸ ஸாகித்யம் என்று ஸ்ரீபுரந்தரதாஸர் எதை இந்த உலகில் பரப்பினாரோ, அது ஸ்ரீமதாசார்யரால் நிறுவப்பட்ட ஸித்தாந்தத்தின் தத்வங்களே ஆகும். அதையே ஸ்ரீவ்யாஸராஜரிடமிருந்து உபதேசம் பெற்று, பத பத்யங்களாக நமக்குக் கொடுத்தார் என்கிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீஹரியின் சம்மதத்தைப் பெற்ற, வாயுதேவரின் அவதாரரான ஸ்ரீமத்வர் மூலமாக நிறுவப்பட்ட த்வைத மதத்தை, அழிந்து விடாமல் நமது குருகள் பின்பற்றி வந்தனர். இத்தகைய ஸித்தாந்தத்தை, அனைத்து துன்பங்களையும் போக்கக்கூடிய ஹரிதாஸ ஸாகித்யத்தை வ்யாஸராஜரிடமிருந்து உபதேசம் பெற்று, ஸ்ரீபுரந்தரதாஸர் இந்த தேசத்தில் பரப்பினார். தவிர, அவர் புதியதாக எதையும் பரப்பவில்லை. 

வந்திபெ புரந்தரதாஸர பாத என்னும் தேவரநாமாவில், ஸ்ரீ ஸ்ரீஷ கோபாலதாஸர் இவ்வாறு பாடியிருக்கிறார். 

ஒத3கி33 ஞானகvளோடிvஸி மத்தெ

ஸத3மல ஞானவ பாலிஸி

பது3மனாப4 கதெ கேளிஸி | நித்ய

முத3தி3 பாலிபன த்4யானிஸி ||1 

தவறான ஞானத்தை ஓட்டி, யதார்த்த ஞானத்தை புகட்டி, பதுபனாபனின் மகிமைகளை நமக்கு உபதேசித்த ஸ்ரீபுரந்தரதாஸரின் பாதங்களை நான் வணங்குகிறேன் - என்று போற்றியிருக்கிறார்.

****



No comments:

Post a Comment