Friday, June 24, 2022

[பத்யம் #44] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #44] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #44]

ஹரிக்ருபெயொளொத3கி3ருவ மானுஷ

வரத1னுவ தா பொந்தி3 அத3ரொளு

பரிபரிய ஸத்கர்ம ப2லரூபத3லி ப3ருவந்த2

மரத1மத1 ஸௌபாக்4ய படெ3தி3ரெ

ஹரிய சரணாப்3ஜவனு ஸேவிஸி

பரம ப4க்தர பாத3தூ3ளிய ஶிரதி34ரிஸுவுது3 ||44 

ஹரிக்ருபெயொளு - ஸ்ரீஹரியின் கருணையால்; ஒதகிருவ - கிடைத்திருக்கும்; மானுஷ வர தனுவ - இந்த மனித, சிறந்த, தேகத்தினை; தா பொந்தி - தான் பெற்று; அதரொளு - அதன் மூலமாக; பரிபரிய ஸத்கர்ம பலரூபதலி பருவந்த - பற்பல ஸத்கர்மங்கள், பல ரூபமாக வரக்கூடிய; மரதமத - மத்வ மத; ஸௌபாக்ய படெதிரெ - ஸௌபாக்கியத்தை பெற்றிருக்கும்போது; ஹரிய சரணாப்ஜவனு - ஸ்ரீஹரியின் பாத கமலங்களை; ஸேவிஸி - வணங்கி; பரம பக்தர - ஸ்ரீஹரியின் அத்யந்த பக்தர்களின்; பாததூளிய - பாததூளிகளை; ஷிரதி - தலையில்; தரிஸுவுது - தரிக்க வேண்டும். 

ஸ்ரீஹரியின் கருணையால் கிடைத்திருக்கும் இந்த மனித தேகத்தினை நாம் பெற்று, அதன் மூலமாக பற்பல ஸத்கர்மங்களை செய்யக்கூடிய மத்வ மதம் என்னும் ஸௌபாக்கியத்தை பெற்றிருக்கும்போது, (இந்த சந்தர்ப்பத்தை வீண் அடிக்காமல்), ஸ்ரீஹரியின் பாத கமலங்களை வணங்கி, ஸ்ரீஹரியின் அத்யந்த பக்தர்களின் பாததூளிகளை தலையில் தரிக்க வேண்டும். 

இந்தப் பிறவி எவ்வளவு சிறப்பானது என்பதைப் பற்றி பல ஹரிதாஸ கிருதிகள் இருக்கின்றன. 

மானவ ஜென்ம தொட்டது - இத

ஹானி மாடலு பேடி ஹுச்சப்பகளிரா

என்று ஸ்ரீபுரந்தரதாஸர் இத்தகைய சிறப்பு வாய்ந்த பிறவியை, வீண் அடிக்காதீர்கள் என்று கூறுகிறார். 

ஸாதன ஷரீரவிது நீ தயதி கொட்டது

ஸாதாரணவல்ல ஸாது ப்ரியனே

என்று ஸ்ரீஜகன்னாததாஸர் இந்த சரீரம், சாதாரணமானது அல்ல, ஸாதனைகளை செய்வதற்காக வந்திருக்கும் சரீரம் என்கிறார். 

அப்படிப்பட்ட திவ்ய சரீரம் வந்திருக்கும்போது, நாம் செய்ய வேண்டியது, ஸ்ரீஹரியின் பாதங்களை வணங்கி, ஸ்ரீஹரி பக்தர்களின் பாததூளிகளை தலையில் தரிக்க வேண்டும், என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர். 

பத்மனாபனே நிம்ம ஷுத்த ஸ்ரீபாததி | பித்து பேடுவெனய்ய நிர்தரிஸி த்ருடவ | அப்திஷயனனே என்னபத்த துர்பணெயன்னு | தித்தி பொரெ பேகனே முத்து ஸ்ரீராம || -- என தாஸ ராயரின் அனுபவ கடலில் மூழ்கி, அவருடைய வாக்குகளில் பகவானின் பாத கமலங்களை பற்றி சிந்திப்போம். 

ஸ்ரீஹரியின் பாத மகிமைகளை விளக்குவதான, ஸ்ரீஹரி பக்தர்களின் பாத சேவையின் மகிமையை விளக்குவதான, பல ஹரிதாஸர்களின் கிருதிகளும் உள்ளன. 

ஹரிதா3ஸனாகு3 ஸஞ்சரிஸு ஸந்தோஷத3ல்லி

கு3ருஹிரியர பாத3க்கெருகு3திரு பி33தெ3

(ஸுளாதி #3 ஸதாசார ஸுளாதி) 

பண்டனாகி பாகில காயுவே நா

வைகுண்ட ஸ்ரீ ஹரிய தாஸர மனெய

(கனகதாஸர்)

****


No comments:

Post a Comment