Thursday, June 9, 2022

[பத்யம் #32] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #32] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #32]

ராஷிதத்வத3 கோஷவெனிபுது3

வ்யாஸராயரு மான்ய மாடி33

தா3ஸருபனிஷதெ3ம்ப3 க்2யாதிய பத3ஸுளாதி33ளு |

வ்யாஸசிஷ்யர பா4ஷ்ய ஸம்மத

ஸ்ரீஷனுக்3ரஹ மோக்‌ஷ ஸாத4

அதிஸுவ அதி4காரிவர்க்க3கெ மார்க்கvதா3யகவு ||32 

வ்யாஸராயரு - ஸ்ரீவ்யாஸராயர்; மான்ய மாடித  - ஆசிர்வாதம் செய்து அருளிய; பதஸுளாதிகளு - தாஸரின் பத, பத்யங்கள்; தாஸருபனிஷதெம்ப க்யாதிய - புரந்தர உபநிஷத் என்னும் பெயரைப் பெற்றது. ராஷிதத்வத - தத்வங்களின் கூட்டத்தின்;  கோஷவெனிபுது - அகராதி எனப்படுகிறது; வ்யாஸசிஷ்யர பாஷ்ய ஸம்மத - ஸ்ரீவேதவ்யாஸரின் சிஷ்யரான ஸ்ரீமத்வாசார்யரின் பாஷ்யத்திற்கு சம்மதமானது; ஸ்ரீஷனுக்ரஹ - ஸ்ரீஹரியின் அருளைப் பெற்றுத் தரக்கூடியது; மோக் ஸாதன - மோட்சத்தைப் பெற்றுத் தரக்கூடியது; அதிஸுவ அதிகாரி வர்க்ககெ - இதனை விரும்பும் தக்க மக்களுக்கு; மார்க்கதாயகவு - மோட்சத்திற்கான வழியை காட்டக்கூடியது (இந்த புரந்தரதாசரின் பத பத்யங்கள்). 

ஸ்ரீபுரந்தரதாஸரின் கிருதிகளின் சிறப்பினை இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீபுரந்தரதாஸரின் கிருதிகளை ஸ்ரீவ்யாஸராஜர் ஆசிர்வாதம் செய்து, அருளி, அவற்றைபுரந்தர உபநிஷத் என்று பெயர் சூட்டி கௌரவித்தார். அதனை தத்வங்களின் கோஷ (அகராதி) என்று அழைத்தார். இவை ஸ்ரீவேதவ்யாஸரின் சிஷ்யரான ஸ்ரீமத்வாசார்யரின் பாஷ்யத்திற்கு சம்மதமானது; இவை ஸ்ரீஹரியின் அருளைப் பெற்றுத் தரக்கூடியது, மோட்சத்தை தரக்கூடியது என்று புகழ்ந்து ஆசிர்வதித்தார். 

நீதியெல்லவனரிது நிகம வேத்யன நித்ய

மாதுமாதிகு பிடதெ வர்ணிஸுதலி

கீத நர்த்தனதிந்த ஸ்ரீகிருஷ்ணன பூஜிஸுவ

பூதாத்ம புரந்தர தாஸரிவரய்யா ||

(தாஸரெந்தரெ புரந்தர தாஸரய்யா) 

ஸ்ரீமத்வாசார்யரின் சித்தாந்த தத்வ ரகசியங்களை நன்றாக அறிந்து, அவற்றினை தன்னுடைய பத, பத்யங்கள் மூலமாக வெளிக் கொண்டு வருகிறார். ஹரி ஸர்வோத்தமத்வத்தினை நிறுவிய ஸ்ரீமதாசார்யரின் கருத்தினையே இவரும் முன்மொழிவதால், இவரது கிருதிகள், தத்வங்களின் அகராதி எனப்படுகிறது. ஹரிதாஸ ஸாகித்யமானது, ஸ்ரீஹரியின் அருளை / மோட்சத்தையே தரக்கூடியது என்று புகழ்ந்து ஆசிர்வதித்தார். 

ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீபுரந்தரதாஸரின் கிருதிகளை ஆசார்ய தத்வங்களின் கோஷ என்று கூறியதைப் போலவே, பின்னர், ஸ்ரீஸ்ரீத விட்டலர், ஸ்ரீஜகன்னாத தாசரின் ஹரிகதாம்ருதஸாரத்தை, ஸ்ரீவாதிராஜரின் கோஷ என்று, அவருடைய பல-ஸ்ருதியில் கூறினார். 

கேஷவன குணமணிகளனு ப்ரா

ணேஷ கர்ப்பிஸி வாதிராஜர

கோஷகொப்புவ ஹரிகதாம்ருதசார பேளிதரு ||13

***


No comments:

Post a Comment