Wednesday, June 29, 2022

[பத்யம் #49] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #49] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #49]

இத3கனந்தர இருதிஹுது33ஹு

வித3வித33 ஸாத4னத3 மார்க்க3வு

முதvதி3 ஜீவர மூலயோக்3யதெக3ளனு அனுஸரிஸி

மத33னெனிஸதெ3 ஸாரி கு3ருக3

பதெ3பதெ3கெ3 ஸேவெயலி மெச்சிஸி

ஹத3வரிது1 ஸ்வீகரிஸு தா3ஸ்யத3 பி3ருதி3னங்கிதவ ||49 

இதனகந்தர - இதன் பிறகு; ஜீவர மூலயோக்யதெகளனு அனுஸரிஸி - அந்த ஜீவனின் மூலயோக்யதைகளுக்கேற்ப; பஹு விதவிதத - பலவிதமான; ஸாதனத மார்க்கவு - ஸாதனை மார்க்கங்கள்; இருதிஹுது - இருக்கின்றன; முததி - மகிழ்ச்சியுடன்; மதடனெனிஸதெ - அஞ்ஞானியாக இருக்காமல்; ஸாரி - சென்று; குருகள பதெபதெகெ - குருகளின் ஒவ்வொரு தேவைக்கேற்பவும்; ஸேவெயலி மெச்சிஸி - சேவைகளை செய்து அவரை மகிழ்வித்து; ஹதவிரிது - விதிகளை அறிந்து; தாஸ்யத - ஹரிதாஸ்யத்தின்; பிருதினங்கிதவ - விருதான அங்கிதத்தை (அவரிடமிருந்து); ஸ்வீகரிஸு - ஏற்றுக் கொள்; 

இதன் பிறகு, ஒரு தக்க குருவினை அடைந்து, அவரிடமிருந்து அங்கிதத்தைப் பெற வேண்டும் என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

அந்த ஜீவனின் மூலயோக்யதைகளுக்கேற்ப, பலவிதமான, ஸாதனை மார்க்கங்கள் இருக்கின்றன. அஞ்ஞானியாக இருக்காமல், குருகளின் ஒவ்வொரு தேவைக்கேற்பவும், சேவைகளை செய்து, அவரை மகிழ்வித்து, விதிகளின்படி, ஹரிதாஸ்யத்தின் விருதான அங்கிதத்தைப் பெற வேண்டும். 

குருவின் மகிமைகளையும், குருவின் சேவைக்கான பலன்களையும் முன்னர் பல உதாரணங்களுடன் பார்த்திருக்கிறோம். 

3ரிதெ3 ஜலதொளு முளுகி3 பி3ஸிலொளு

பெரளனெணிஸிதரேனு சத்கு3ரு

ஹிரியரனுசரிஸித3 மர்மவனரியதி3 நரனு ||(7-14) 

ஒரு ஸத்குருவை அணுகி, அவரின் அருளைப் பெறாமல், தீர்த்தக்ஷேத்திரங்களுக்கு செல்வதோ, விரல்களை எண்ணியவாறு பல்வேறு ஜபங்களை செய்வதோ எவ்வித பலன்களையும் தருமா? என்று கேட்கிறார் ஸ்ரீஜகன்னாததாஸர்.

***



No comments:

Post a Comment