Saturday, June 25, 2022

[பத்யம் #45] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #45] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #45]

4ரெயொளீதெர பா3 3யஸுவ

நரனு தன்னய ஜனும ஸார்த்த2

பரியனரஸுத பரமகு3ப்தன தெரதி3 சரிஸுதலி |

து3ருளஜன ஸஹவாஸ தூ3ரி

கரிஸி ஸத்கு3ருக்ருபெய 3யஸுத

நிருத ஹரிஸேவெயலி காலவ களெது3 பா3ளுவுது3 ||45

தரெயொளீதெர - இந்த பூமியில் இப்படியாக; பாள பயஸுவ - வாழ விரும்பும்; நரனு - மனிதன்; தன்னய ஜனும - தன் பிறவியை; ஸார்த்தக - அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ளும்; பரியனரஸுத - வழியை தேடியவாறு; பரமகுப்தன தெரதி - ஒற்றனைப் போல (மிகவும் ரகசியமாக / தனிமையில்); சரிஸுதலி - நடமாடியவாறு; துருளஜன - கெட்டவர்களின்; ஸஹவாஸ - நட்பினை; தூரி கரிஸி - விலக்கி; ஸத்குரு க்ருபெய - ஒரு நல்ல குருவின் அருளை; பயஸுத - விரும்பியவாறு; நிருத ஹரிஸேவெயலி - நிரந்தரமாக ஹரி ஸேவையில்; காலவ களெது - காலத்தை கழித்தவாறு; பாளுவுது - வாழ வேண்டும்.

ஸ்ரீஹரியின் பாதங்களை வணங்குபவனான, ஸ்ரீஹரி பக்தர்களின் பாத சேவையை செய்ய விரும்புபவனான மனிதன், தன் பிறவியை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ளும் வழியை தேடியவாறு, மிகவும் ரகசியமாக / தனிமையில் நடமாடியவாறு, கெட்டவர்களின் நட்பினை விலக்கி, ஒரு நல்ல குருவின் அருளை விரும்பியவாறு, நிரந்தரமாக ஹரி ஸேவையில் தன் காலத்தை கழித்தவாறு வாழ வேண்டும்.

 ஸங்கவாகலி ஸாது ஸங்கவாகலி

ஸங்கதிந்த லிங்க தேக பங்கவாகலி

-- என்று ஸஜ்ஜனர்களின் சங்கத்தை விரும்பி, அதன் மூலம் மோட்சத்தையே அடைய வேண்டும் என்கிறார் ஸ்ரீபிரஸன்ன வெங்கடதாஸர்.

 ஸ்ரீஷனெ 3தி எந்து3 பே3ஸரத3லெ 3ந்த3

க்லேஷக3ளுணபே3கு 3ந்தா33லு

தே3 கால கு3ணபரிபூர்ண ஹரி இரெ

கா4ஸி எல்லிதோ3 எந்து3 நலியபே3கு

(#4 ஹரிதாஸ லட்சண ஸுளாதி)

 என்று ஸ்ரீவிஜயதாஸர், ஸ்ரீஹரியின் மகிமைகளையே, பக்தர்களையே தேடிச் சென்று அவற்றை / அவர்களை அடைய வேண்டும் என்று இந்த ஸுளாதியில் விளக்கியுள்ளார்.

 பி3கித3 1ண்ட2தி3ம் த்3ருக்1பா4ஷ்பக1ளிம் நகெ3மொக3தி3ம் ரோமக3ளொகெ3து3

மிகெ3 ஸந்தோ1ஷதி3ம் நெகெ3தா3டுத1 நான்மொக3னய்யன கு3 பொ13ளி ஹிக்கு3வுதே3 ||11||

 சிறந்த பகவத் பக்தர்களுடன் நெருக்கமாக இருப்பதே, நாம் செய்யக்கூடிய சாதனைகளின் முக்கிய குறிக்கோள். பகவத் பக்தர்களில், பக்வ பக்தர், பக்வ கல்பர் மற்றும் பக்வ பிரதிநிதிகள் (சாதகர்கள்) என்று மூன்று வகைகள் உண்டு. பக்வ பக்தர்களின் லட்சணங்களை இந்த நுடியில் விவரித்திருக்கிறார் ஸ்ரீஜகன்னாததாஸர்.

பக்வகல்பர் என்றால் பக்குவத்திற்கு அருகில் இருப்பவர் (இன்னும் அதை அடையாதவர்). அவர்களிடமும் சில நேரங்களில் மேற்கண்ட சுபாவங்கள் காணப்படலாம். ஆனால், இந்த லட்சணங்கள் இல்லாதவர்கள் (அதாவது அழுவது, சிரிப்பது, ஆடுவது போன்றவை செய்யாதவர்கள்), பக்தர்கள் இல்லை என்று மட்டும் சொல்லக்கூடாது. வெட்கத்தை விட்டு, ஸ்ரீஹரி நாமகீர்த்தனையை சொல்லி, மகிழ்ச்சியுடன் நடனமாடும் மனோபாவமானது, சிறந்த பக்தியின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.


***


No comments:

Post a Comment