Tuesday, August 2, 2022

[பத்யம் #82] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #82] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #82]

ஜனிஸி போகு3 தே3 3ணிஸதெ3

ஜனுமக3 3ஹு 4ரிஸி ஸத் ஸா

4னெய கெ3ய்வுதெ3 ஸத்வஜீவிய ஸாத4னத3 ஆயு |

இனிது காலவனெணிஸி யோக்3யதெ

3னுகு3ணத3 லக்ஷணவ காணுத

அனுனயதி3 திளியுவுது3 தே3ஹிய பா3ல்ய வ்ருத்3தா4ப்ய ||82 

ஜனிஸி போகுவ தேஹ - (இந்த பிறவியில்) வந்து போகும் தேகம் பற்றி; கணிஸதெ - எண்ணாமல் (கவனிக்காமல்) ; பஹு - பற்பல; ஜனுமகள - பிறவிகளை; தரிஸி - எடுத்து; ஸத் ஸாதனெய கெய்வுதே - நல்ல ஸாதனைகளை செய்வதே; ஸத்வஜீவிய - ஸத்வ ஜீவனின்; ஸாதனத ஆயு - ஸாதன ஆயுள் ஆகும்; இனிது காலவனெனிஸி - (ஸாதன செய்வதற்கு இதுவே) சரியான காலம் என்று எண்ணி; யோக்யதெக அனுகுணத - தங்களின் யோக்யதைகேற்பதான; லக்ஷணவ காணுத - செயல்களை கண்டறிந்து (அவற்றை செய்பவர்களை); தேஹிய பால்ய வ்ருத்தாப்ய - இத்தகைய தேகம் கொண்டவர்களை, பாலகன்; அனுனயதி திளியுவுது - என்று தெளிவாக அறிய வேண்டும். 

இந்தப் பிறவியில் வந்திருக்கும் தேகத்தைப் பற்றி எண்ணாமல், பற்பல பிறவிகளை எடுத்து, நல்ல ஸாதனைகளை செய்வதே, ஸத்வ ஜீவனின் ஸாதன ஆயுள் ஆகும். அத்தகைய ஸாதனைகளை செய்வதற்கு இதுவே சரியான காலம் என்று எண்ணி, தங்களின் யோக்யதைகளுக்கு ஏற்ப, செயல்களை கண்டறிந்து, அவர்களது ஸாதன ஆயுள் (ஸாதனை சரீரத்தின் வயது) என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 

இந்த பௌதிக தேகத்தின் ஆயுள் என்ன என்பது நமக்குத் தெரியும்; இத்தகைய செயல்களை செய்தால், இவ்வளவு வயது ஆகியிருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க்கிறார் என்றால் 15-16 வயது என்றும்; மேற்படிப்பு படிக்கிறார் என்றால் 22-23 வயது என்றும்; வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்றால் 58-60 வயது என்றும் சில உதாரணங்களை சொல்லலாம். 

ஆனால், அது போல, ஸாதன ஷரீரத்திற்கும் வயது சொல்லமுடியுமா? என்றால், முடியும் என்று சொல்லி, அடுத்து வரும் பத்யங்களில், ஜீவன் எத்தகைய ஸாதனங்களை செய்தால், அவன் எந்தஸாதன வயதில் இருக்கிறான் என்பதை சொல்கிறார். பௌதிக ஷரீரத்திற்கும், ஸாதன ஷரீரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

****

Monday, August 1, 2022

[பத்யம் #81] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #81] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #81]

ஸுத்தி 3ளலுத கர்மவதை3ம்

3த்துனாலகு லக் யோனிக3

ளெத்தி ஹரி கருணிஸலு 3ருவனு மனுஜ யோனியொளு |

தெ1த்தி1 3ஹு ஜன்மக3 இத3ரொளு

4க்தி ஞானத3 க்ரமதி3 பெ1ச்சிஸி

ப்4ருத்யனாத3 ஸுயோக்3 ஜீவனு காம்ப3 பி3ம்ப3வனு ||81 

ஸுத்தி பளலுத - எங்கெங்கோ (எப்படியோ) சுற்றித் திருந்து; கர்மவஷத - கர்ம வஷத்தினால்; எம்பத்துனாலகு லக் யோனிகளெத்து - 84 லக் யோனிகளில் பிறவிகளை எடுத்து; ஹரி கருணிஸலு - கடைசியில் ஸ்ரீஹரியின் அருளால்; மனுஜ யோனியொளு பருவனு - மனித யோனியில் வருகிறான்; பஹு ஜன்மகள தெத்தி - பல பிறவிகளை எடுத்து; இதரொளு - இவற்றில்; பக்தி ஞானத - பக்தி ஞானம் ஆகியவை; க்ரமதி பெச்சிஸி - படிப்படியாக வளர்ந்து; ப்ருத்யனாத - ஸ்ரீஹரியின் சேவகனான; ஸுயோக்ய ஜீவனு - தக்க யோக்யதையைக் கொண்ட ஜீவன்; பிம்பவனு - தன் பிம்பமூர்த்தியை; காம்ப - காண்பான். 

எங்கெங்கோ எப்படியோ சுற்றித் திரிந்து, கர்ம வஷத்தினால், 84 லட்ச யோனிகளில் பிறவிகளை எடுத்து, கடைசியில் ஸ்ரீஹரியின் அருளால், இந்த மனிதப் பிறவியில் ஜீவன் வருகிறான். பல பிறவிகளை எடுத்து, இவற்றில், பக்தி ஞானம் ஆகியவற்றை படிப்படியாக வளர்த்து, ஸ்ரீஹரியின் சேவகனான தக்க யோக்யதையைக் கொண்ட இந்த ஜீவன், தம் பிம்பமூர்த்தியை காண்பான். 

ஏஸு காயங்கள களெது 84 லட்ச யோனி

ஜீவ ராஷிகள தாடி பந்த ஷரீர

தானல்ல தன்னதல்ல - ஆஷெ தரவல்ல முந்தெ பாஹோதல்ல

தாஸனாகு விசேஷனாகு 

இத்தகைய அரிதாக வந்திருப்பதான பிறவியைப் பற்றி பல ஹரிதாஸர்களும் பாடியிருகின்றனர். முன்னர் எப்படி இருந்தோம் என்றும் தெரியாது; இத்தகைய பிறவி இனி அடுத்து வருமா என்றும் தெரியாது; ஆகையால், இப்போது நீ உடனடியாக ஸ்ரீஹரியின் தாஸன் ஆகு; விசேஷமான ஞானத்தைப் பெறுபவன் ஆகு; அதன் மூலம், ஸ்ரீஹரியின் அதாவது தன் பிம்பமூர்த்தியின் தரிசனத்தைப் பெறுபவன் ஆகுவாயாக.

***