Thursday, August 4, 2022

[பத்யம் #84] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #84] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #84]

மீரத3லெ விதி4க3ளனு நித்3ரா

ஹார வர்ஜிஸி வ்ரதகெ3ய்து3 ஶ

ரீர த3ண்டி3ஸி பா3ஹ்ய தனுமன ஶுத்3தி4 ஸாத4னதி3 |

வாரிஜாக்‌ஷன கருண ஜயஸுத

தா4ருணியொளீரீதி1 இருவவ

தீ4ரக்ஞானிக3ளிந்த3 கரெஸுவ பாலகனு எந்து3 ||84 

விதிகளனு மீரதலெ - விதி / விதிமீறல்களை பின்பற்றியவாறு; நித்ரா ஹார வர்ஜிஸி - தூக்கம் / ஆகாரங்களை தவிர்த்து; வ்ரதகெய்து - விரதங்களை செய்து; ஷரீர தண்டிஸி - இந்த தேகத்தினை வருத்திக் கொண்டு; பாஹ்ய தனுமன - புற தேக, மனதின்; ஷுத்தி ஸாதனதி - சுத்தங்களை செய்தவாறு; வாரிஜாக்‌ஷன - ஸ்ரீஹரியின்; கருண ஜயஸுத - கருணையை ஜெயித்தவாறு; தாருணியொளு - பூமியில்; ஈ ரீதி - இப்படியாக; இருவவ - இருப்பவன்; பாலகனு எந்து - சிறுவன் என்று; தீர ஞானிகளிந்த - கற்றறிந்த ஞானிகளால்; கரெஸுவ - அழைக்கப்படுகிறான். 

ஸாதனைக்கான படியில், குழந்தை நிலையிலிருந்து அடுத்த படிக்கு முன்னேறியிருப்பவர்களை பாலகன் என்று அழைக்கின்றனர். அது என்ன என்றால்: 

விதி  மற்றும் விதிமீறல்களை பின்பற்றியவாறு, தூக்கம் ஆகாரங்களை தவிர்த்து, கடுமையான விரதங்களை செய்து, இந்த தேகத்தினை வருத்திக் கொண்டு, புற தேக மற்றும் மனதினை ஷுத்தி செய்தவாறு, ஸ்ரீஹரியின் கருணையை ஜெயித்தவாறு, இந்த பூமியில் இருப்பவன், ‘பாலகன்’ என்று ஞானிகள் கூறுகின்றனர். 

சந்தியாவந்தனம், ஏகாதசி உபவாசம், ஸ்ரீகோகுலாஷ்டமி விரதங்கள் மற்றும் பிற விரதங்களை விதிப்படி செய்து, புற தேக மற்றும் மனதினையும் சுத்தம் செய்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நிலையில் ‘பாலகன்’ என்று அறியப்படுகிறார்கள் என்று ஸ்ரீதாஸர் கூறுகிறார்.

***

Wednesday, August 3, 2022

[பத்யம் #83] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #83] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #83]

அஸுவ த4ரிஸுத மனுஜ தே3ஹதி3

ஶ்வஸன மத லாஞ்சனவ ரக்‌ஷிஸி

பி3ஸஜனாப4கெ3 அதி4க ஸமரின்னில்லவெந்தெம்ப3 |

ஹஸனதீ3 ஸாமான்ய ஞானதி3

நிஶி ஹக3லு வஸுதெ4யலி களெவகெ3

முஸுகி1த3ரு வ்ருத்3தா4ப்ய அவனது3 ஶைஶவாவஸ்தெ2 ||83 

அஸுவ தரிஸுத - இந்த வாழ்க்கையில்; மனுஜ தேஹதி - மனித தேகத்தில் இருந்து கொண்டு; ஷ்வஸன மத - வாயுதேவரின் மதத்தின்; லாஞ்சனவ - குறியீடுகளை (கோபிசந்தன, முத்திரைகளை); ரக்‌ஷிஸி - தரித்துக் கொண்டு; பிஸஜனாபகெ - ஸ்ரீபத்மனாபனுக்கு; அதிக ஸமரின்னில்ல - அதிகமோ, சமமானவரோ இல்லை; எந்தெம்ப - என்று சொல்லும்; ஹஸனத - சிறந்ததான - ஈ ஸாமான்ய ஞானதி - இத்தகைய சாமான்ய ஞானத்துடன்; நிஷி ஹகலு - இரவும் பகலும்; வஸுதெயலி - இந்த உலகில்; களெவகெ - காலத்தைக் கழிப்பவர்களுக்கு; அவனது - அவனுடைய; வ்ருத்தாப்ய - வயது (நிலை);  ஷைஷவாவஸ்தெ - குழந்தை (மழலை) நிலை என்று; முஸுகிதரு - கூறினார்கள். 

இந்த வாழ்க்கையில், மனித தேகத்தில் இருந்துகொண்டு, வாயுதேவரின் மதத்தின் குறியீடுகளை (கோபிசந்தன முத்திரைகளை) தரித்துக் கொண்டு, ஸ்ரீபத்மனாபனுக்கு அதிகமோ, ஸமமானவரோ இல்லை என்று சொல்லும் சிறந்ததான இந்த சாமான்ய ஞானத்துடன், இரவும் பகலும், இந்த உலகில், காலத்தை கழிப்பவர்களுக்கு, அவனுடைய வயது / நிலை (ஸாதன சரீரத்தின் வயது), குழந்தை (மழலை) நிலை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

கோபிசந்தன முத்திரைகளை தரித்து, ஹரி ஸர்வோத்தமா வாயு ஜீவோத்தமா என்று கூறிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள், ஸாதனைக்கான படியில் குழந்தை  நிலையில் இருக்கின்றனர் என்று ஸ்ரீதாஸர் கூறுகிறார்.

***