Tuesday, September 27, 2022

[பத்யம் #129] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #129] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 129]

தா3ஸனெம்பு3 3லுஹு எனகி3தெ3

தா3ஸதா3ஸர சரண தா3ஸ்யத3

மீஸலின பா4க்3 என்னது3 தா3 பத3தூ4ளி

பூ4ஷணவு ஶிரமுகுட எனக3து3

ஏஸு புண்யத3ராஶி ஒத3கி3தோ

தா3ஸவம்தி3 தந்து3 என்னனு 4ன்யனெனிஸித3ரு ||129 

தாஸனெம்புவ - ஹரிதாஸன் என்னும்; பலுஹு எனகிதெ - (கர்வம்) சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது; தாஸதாஸர - ஹரிதாஸர்களின்; சரண தாஸ்யத - சரணத்தை அடைவதற்கு; மீஸலின - தனிப்பட்டதான (special); பாக்ய - அந்த பாக்கியம்; என்னது - எனக்கு கிடைத்திருக்கிறது; தாஸ பததூளி - தாஸர்களின் பாததூளியானது; பூஷணவு - ஆபரணம்; எனகது ஷிரமுகுட - எனக்கு அது தலைக்கிரீடம் ஆகும்; ஏஸு புண்யதராஷி - எவ்வளவு புண்ணியங்களின் கூட்டம்; ஒதகிதோ - வந்து சேர்ந்ததோ; என்னனு - என்னை; தாஸவம்ஷதி தந்து - ஹரிதாஸ வம்சத்தில் நான் வந்து; என்னனு - என்னை; தன்யனெனிஸிதரு - தன்யன் என்றனர். 

தன்னுடைய குருகளை வணங்கியவாறு, இந்த ஹரிதாஸ ஸாகித்யத்திற்கு தான் வந்து ஹரிதாஸன் ஆனது மிகப்பெரிய பாக்கியம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

ஹரிதாஸன் என்னும் கர்வம் / சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. ஹரிதாஸர்களின் சரணங்களின் தாஸ்யத்தை அடைவதற்கு தனிப்பட்டதான அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அத்தகைய தாஸர்களின் பாததூளியானது, எனக்கு அதுவே தலைக்கிரீடம் ஆகும். இதனால் எவ்வளவு புண்ணியங்களின் கூட்டம் எனக்கு வந்து சேர்ந்ததோ, அதனால் நான் இந்த ஹரிதாஸ வம்ஸத்தில் வந்து தன்யன் ஆனேன். 

ஸ்ரீவிஜயதாஸர், ஸ்ரீவேணுகோபால விட்டலதாஸர், ஸ்ரீவ்யாஸ விட்டலர் ஆகியோரில் வந்த ஹரிதாஸ பரம்பரையில் வந்த ஸ்ரீதந்தெமுத்து மோகன விட்டலதாஸர் (பரமப்ரிய ஸுப்பராய தாசர்) அவர்களிடமிருந்துரமாகாந்த விட்டலா என்று அங்கிதமும், ஹரிதாஸ தீக்ஷையையும் பெற்றவர் நம் ஸ்ரீதாஸர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பரம்பரையில் வந்ததை நினைத்து அது தனக்கான மிகப்பெரிய பாக்கியம் என்று இந்த பத்யத்தில் கூறி மகிழ்கிறார்.

***


Monday, September 26, 2022

[பத்யம் #128] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #128] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 128]

ப்33மாத்ர ஞானவில்லதெ3

ஶுத்34பா4வதி3 நுடி33 நுடி33ளு

மத்3 கு3ருக3ளந்த:கரணபூ1ரித கருணப3 2லவு |

உத்34விஸிப3 தரணி அருணன

உத்34ரிஸி குள்ளிரிஸதி3ர்தொ3டெ

ஒத்3து3 திமிரவ பெ3ளகுமாட3லு க்த தானஹனெ ||128 

தான் இதுவரை கூறியது அனைத்தும் தம் குருகளின் / ஸ்ரீஹரியின் கருணையே ஆகும் என்பதை இங்கு சொல்லி பக்தியுடன் வணங்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

ஷப்தமாத்ர - வெறும் சொற்களை மட்டுமே நான் கூறினேன்; ஞானவில்லதெ - அதை சொல்வதற்கான ஞானமும் எனக்கு இல்லை; ஷுத்தபாவதி - மனதில் சுத்தமான பக்தி பாவனைகளுடன்; நுடித நுடிகளு - நான் இங்கு கூறிய சொற்கள் (பத்யங்கள்); மத் குருகளந்த:கரணபூரித - நம்முடைய குருகளின் அந்தர்யாமியான ஸ்ரீஹரியின்; கருண பல பலவு - கருணையின் பலமே / அதனுடைய பலனே ஆகும்;  உத்தரிஸி குள்ளிரிஸதிர்தோடெ - அத்தகைய பாரதி ரமண முக்யபிராணாந்தர்கதனான ஸ்ரீஹரி, நம்முடைய மனதில் அமர்ந்து, நமக்கு அருள்வது (எப்படி இருக்கிறது என்றால்); உத்தவிஸிபஹ - ஒளிர்ந்து வருவதான; தரணி - சூரியன்; அருணன - கிரணங்களானது; திமிரவ - இருட்டினை; ஒத்து - அடக்கி; பெளகுமாடலு - வெளிச்சம் தருவதைப் போல; ஷக்த தானஹனெ - ஸ்ரீஹரியானவன் இருக்கிறான்.  

நம் மனதில் ஸ்ரீஹரியானவர் எப்போதும் இருந்து நமக்கு அருள்கிறார் என்பதை ஹரிகதாம்ருதஸாரத்தில் பல பத்யங்களில் ஸ்ரீஜகன்னாததாஸர் விளக்கியிருக்கிறார் என்பதை அறிகிறோம்.

***