ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
744. ஸ்ரீ பதா3ய நம:
ஸர்வதா3 க3மன ஶீலவந்தனு ‘பத3ம்’ நமஸ்தே
ஸர்வப4க்த ப4ஜகர ப3ளி ப3ந்து3 நீ ஒலிவி
ஸர்வப4க்த முமுக்ஷுக3ளிந்த3 க3ம்யனாகி3ருவி
ஸர்வர்கு3 உத்தமனு வம்ஶேஷ்டிதர கிருஷ்ண வடோ
எப்போதும் கமனத்தில் (நகர்தல்) இருப்பவனே. பதாய - உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து பக்தர்களின் அருகில் நீ வந்து தரிசனம் அளிக்கிறாய். அனைத்து பக்தர்கள், முக்தி யோக்யர்களால் நீ அறியப்படுபவனாக இருக்கிறாய். ஸர்வோத்தமனே. பக்தர்களின் இஷ்டார்த்தங்களை அருள்பவனே. கிருஷ்ணனே.
745. ஸ்ரீ அனுத்தமாய நம:
ஸர்வோத்தம நீ ‘அனுத்தம’ நமோ நமோ எம்பெ3
ஸர்வ ஶக்ராத்3யுத்தம ஶிவ ஶிவகு3த்தமவாயு
வரவாயுகு3த்தமளு ஸ்ரீரம ரமாபதியு
ஸர்வோத்தம நீனு நினகெ3 ஸம உத்தமரு இல்ல
ஸர்வோத்தமனே. அனுத்தமனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து தேவர்களில் உத்தமனான சிவன். அவருக்கு உத்தமன் வாயு. வாயுவிற்கு உத்தமள் ஸ்ரீரமாதேவி. அந்த ரமாதேவியின் பதி, நீ. ஸர்வோத்தமன். உனக்கு சமர் மற்றும் உத்தமர் என யாரும் இல்லை.
746. ஸ்ரீ லோகப3ந்து4வே நம:
ஸாது4 ஜனரனு ஸ்னேஹபாஶதி3 ப3ந்தி4ஸுவி நீ
ஸாது4 ஜனப்ரிய ‘லோகப3ந்து4வே’ நமோ நினகெ3
நீ த3யதி3 ஸ்வேச்செயிந்த3 அபரோக்ஷஞானியன்ன
வாத்ஸல்யதி3 ப3ந்தி4ஸுவி ப4க்தவஶனு நீனு
ஸாது ஜனர்களை பக்தி என்னும் பாசக்கயிற்றில் நீ கட்டுகிறாய். ஸஜ்ஜனர்களால் விரும்பப்படுபவனே. லோகபந்துவே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ உன் இஷ்டப்படியே, அபரோக்ஷ ஞானிகளை, கருணையால் கட்டிப்போடுகிறாய். பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன் நீயே.
***