Sunday, August 27, 2023

#249 - 735-736-737 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

735. ஸ்ரீ ஶதமூர்த்தயே நம:

வ்ருத்ராஸுர ஹந்தாஶதமூர்த்தியேநமோ நினகே3

ஶதம் அனந்தம் மூர்த்தி நீ நனந்தரூப ஶதமூர்த்தி

ஶதஶப்3தி3 அனந்தவு நின்னய கு3ணக்ரியா

ப்ரதா3 ஶதனாடி3ஸ்த2 நாராயணாதி3 ரூபக3ள் 

வ்ருத்ராஸுரனை கொன்றவனே. ஷதமூர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஷதானந்த மூர்த்தியே. நீ அனந்தரூபம் கொண்டவன். ஷத என்றால் அனந்த என்று பொருள். உன்னுடைய குண, க்ரியைகள் அனந்தமானவை. ப்ரதான நாடிகளில் நாராயணாதி ரூபங்களால் இருப்பவனே. 

736. ஸ்ரீ ஶதானனாய நம:

3ஹுகர்மமாடு3ஶதானனநமோ நினகெ3

மஹானந்த3லீலெயிம் ஸ்ருஷ்ட்யாத்3யனந்த கர்மமாள்பி

மஹானந்த3தாரகத்வத் ஸாத4னகரத்வ

அன்உத்தமத்வதி3ந்த3ஸர்வவந்த்3யனு ஸ்வாமி 

அனேக கர்மங்களை செய்பவனே. ஷதானனனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய லீலையினால் ஸ்ருஷ்டி முதலான அனந்த கர்மங்களை செய்கிறாய். மஹா ஆனந்தத்தைக் கொண்டவன் ஆகையால் ‘ஷ; ஸாதனைகளை செய்விப்பதால் ‘அன்; ஸர்வோத்தமனாக இருப்பதால் ‘ன என்று அழைக்கப்படுகிறாய். அனைவராலும் வணங்கப்படுபவனே. ஸ்வாமியே. 

737. ஸ்ரீ ஏகாய நம:

ஸர்வத்ர ஸஞ்சரிபஏகநமோ நமோ நினகெ3

ஸர்வஸ்வாமியு ஸர்வகர்த காரயிதா ஏக நீனு

ஸர்வமுக்2 ப்ரதா4 அஸமான அஸஹாயனு

ஸர்வவேதா3ர்த்தக்கு அமிதனு விலக்ஷண  

அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கும் ஏகனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவருக்கும் ஸ்வாமியே. அனைத்தையும் செய்யும், செய்விக்கும் ஏகன் நீயே. ஸர்வோத்தமனே. உனக்கு சமம் என்று யாரும் இல்லை. அபாரமான சக்தியை கொண்டவனே. அனைத்து வேத அர்த்தங்களையும் மீறி  நிற்பவனே. ஈஷனே. 

***


No comments:

Post a Comment