ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
684. ஸ்ரீ மஹாக்ரமாய நம:
மஹாஶக்திரூப நீனு ‘மஹாக்ரம’ நமோ எம்பெ3
மஹாஞான க்ரியா இச்சா ஶக்திவுள்ளவனு நீனு
மஹாதே3வ அனன்ய பாட2 ஶாஶ்வத ஸ்ரமத3ல்லி
மஹேஶ ஞானேச்சா ஶக்தியிம் த்வத்3பு4த்தி4ஸ்த2 இஹுது3
மஹாஸக்தி ரூபனே. நீயே மஹாக்ரமன். உனக்கு என் நமஸ்காரங்கள். மஹா ஞான, க்ரியா, இச்சா சக்தி உள்ளவன் நீ. மகாதேவனே. நிரந்தரமாக பாடத்தை படித்தால், உன்னுடைய ஞான இச்சா சக்தியானது, நம் அறிவுக்கு புலப்படுகிறது.
685. ஸ்ரீ மஹாகர்மணே நம:
ஸூர்ய ஸ்தா2பனாதி3 கர்மவான் ‘மஹாகர்மணே’ நமோ
தோயஜாக்ஷனெ நீனு ப்ரக்ருதி க்ஷோப4ண தத்வ ஸ்ருஷ்டி
தோயஜஜாண்ட3 ஸ்ருஷ்டிஸி மார்த்தாண்டா3தி3 ஸ்தா2பிஸிதி3
ஸ்ருஷ்ட்யாதி3 மஹாகர்த்ரு ஜக3ன்னாத2 ஸ்ரீபதே பாஹி
சூரியனையே ஸ்தாபனம் செய்தவனே மஹாகர்மணே உனக்கு என் நமஸ்காரங்கள். தாமரைக் கண்ணனே. ப்ரக்ருதி, தத்வ, பிரம்மாண்ட ஆகியவற்றை நீ ஸ்ருஷ்டித்து, ஸ்தாபனை செய்தாய். ஸ்ருஷ்ட்யாதி அஷ்ட கர்த்ருத்வங்களையும் செய்யும் மஹா கர்த்ருவே. ஜகன்னாதனே. ஸ்ரீபதியே. என்னை அருள்வாயாக.
686. ஸ்ரீ மஹாதேஜஸே நம:
மஹாப3லரூப ‘மஹாதேஜ’ நமோ நமோ எம்பெ3
மஹிஸ்ரீகு3த்தம தேஜானந்த3 ப3லஞான ரூப
மஹிஸ்ரீ தேஜஸ்ஸபி4மானிஸ்த2 ததா2 ஜல வாயு
மஹருத்3ர ப்ருத்2வி அபி4மானிகு3த்தம ப3ல த்ரிவ்ருத்
மஹாபலரூபியே. மஹாதேஜனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியைவிட உத்தமனே. தேஜானந்த பலஞான ரூபனே. லட்சுமிதேவி, பிரம்ம, வாயு, ருத்ர, ப்ருத்வி அபிமானி ஆகியோர் அனைவரையும்விட உத்தமனே. த்ரிகுணங்களின் காரியங்களையும் நடத்துபவனே.
***
No comments:
Post a Comment