ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
675. ஸ்ரீ பி3ரம்மண்யாய நம:
’பி3ரம்மண்ய’ நீ ஸாது4 ஸ்தோத்ர மாள்பரிகீ3வி
காமித ப2ல நமோ எம்பெ3 கு3ணபூர்ண நினகெ3
ஸுமனோஹரரூப கு3ண க்ரிய வேதா3னுஸாரி
ப்ரேமதி3 ஸ்துதிஸுவர ஸுக2போ4க3 ஹேது நீனு
பிரம்மண்யனே.
உன்னை பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்பவர்களுக்கு நீ அவர்கள் விரும்பும் இஷ்டார்த்தங்களை
அளிக்கிறாய். குணபூர்ணனே. உனக்கு அழகான ரூபம் இருக்கிறது. வேதங்களுக்கு ஏற்ப நீ குண,
க்ரியைகளை செய்பவன். உன்னை பக்தியுடன் வணங்குபவர்களின் சுகபோகங்களுக்கு காரணம் நீயே.
676. ஸ்ரீ பி3ரம்மக்ருத் பி3ரம்மணே நம:
ஸ்தோத்ர மாடு3வவனிகெ3 பூ4ஷண ஒத3கு3வவ
‘பி3ரம்மக்ருத்பி3ரம்ம’ நமோ கவிகண்ட2கெ பூ4ஷண
பி3ரம்மன மாதெ லக்ஷ்மிகெ3 பூர்ண ஆனந்த3வீவனு
பி3ரம்மாக்2யவிஷ்ணு உபாஸக ப4க்தரிகெ3 ஸுக2தா3
உன்னை ஸ்தோத்திரம் செய்பவர்களுக்கு புகழினை கொடுப்பவனே. பிரம்மக்ருத் பிரம்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மனின் தாயான லட்சுமிதேவிக்கு பூர்ண ஆனந்தத்தை அளிப்பவனே. பிரம்மனின் (வாயுதேவரின்) அந்தர்யாமியான விஷ்ணுவை உபாஸனை செய்பவர்களுக்கு சுகத்தை அளிப்பவனே.
677. ஸ்ரீ பி3ரம்மணே நம:
நூதன நூதன பு3த்3தி4 பூர்ணமாள்ப ‘பி3ரம்ம’ நமோ
ப4க்தர ஆலோசன பு3த்3தி4 விஷயனாகி3 நீனு
பு3த்3தி4யோக்3யதெ இஷ்டபூர்ணமாடி3 காணிஸிகொம்பி3
வர்த்தி4ஸுவி ஞானவ ஞானாதி3 கு3ணபூர்ண பி3ரம்ம
புதியதான தொடர்ச்சியான ஞானத்தை அருளும் பிரம்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களின் புத்திக்கேற்ப செய்யும் பூஜைக்கான விஷயமாக நீ ஆகி, அவர்களுக்கு யோக்யதைக்கேற்ப புத்தியை பூர்ணம் ஆக்கி, நீ உன்னை காட்டிக் கொள்கிறாய். ஞானத்தை வளர்ப்பவனே. ஞானாதி, குணபூர்ணனே. பிரம்மனே.
**
No comments:
Post a Comment