Saturday, August 19, 2023

#244 - 720-721-722 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

720. ஸ்ரீ பூ4தாவாஸாய நம:

ஸர்வபூ4தரக்ஷகனுபூ4தாவாஸநமோ எம்பெ3

ஸர்வப்ராணிக3ளொளகி3ருவ அந்தர்யாமி நீனு

ஸ்ரீவரனெ நீ ப்3ரம்மபுர ஹ்ருத்புண்டரீக வேஶ்ம

யோமத3லி வாஸமாள்பி அன்வேஷ்டிதவ்ய நீனு 

அனைத்து (சராசர) பூதங்களையும் காப்பவனே. பூதாவாஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து பிராணிகளிலும் நீ அந்தர்யாமியாக இருக்கிறாய். ஸ்ரீவரனே. பிரம்மபுரியில் வசிக்கிறாய். இதய குகையில் (மாளிகையில்) வசிக்கிறாய். (ஞானத்தால் தேடி) அறியப்படுபவனே. 

721. ஸ்ரீ வாஸுதே3வாய நம:

து3ப்4வாதி3 ஆச்சா2தி3கனு வ்யாபகனு ஆகி3 நீ

ஸர்வப4க்தாபீ4ஷ்ட ப்ராபகவாஸுதே3நமஸ்தே

வாய்வந்தர்யாமி ஸர்வப்ராணி அந்தஸ்த2னாகி3ருவி

தே3 நீ லீலானந்த3 சேஷ்டாவந்த ஜ்யோதிர்மயனு 

இருட்டாக (கருப்பாக) இருந்து அனைத்தையும் சூழ்ந்திருப்பவனே. வ்யாபகனே. பக்தர்களின் அனைத்து இஷ்டங்களையும் நிறைவேற்றுபவன். வாஸுதேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். பாரதிரமண முக்யப்ராணானந்தர்கதனாக, அனைத்து ப்ராணிகளிலும் அந்தர்யாமியாக இருந்து, தேவனே, நீ உன் லீலைகளால், அனைத்து செயல்களையும் செய்கிறாய். ஒளிமயமானவனே. 

722. ஸ்ரீ ஸர்வாஸு நிலயாய நம:

பி3ரம்மாதி33 இந்த்3ரிய லயஸ்தா2னனாகி3ருவி

மஹாமஹிமெயனுஸர்வாஸு நிலயனேநமஸ்தே

பி3ரம்மாதி3 ஸர்வஜீவர ப்ராணாலம்ப3 நாகி3ருவி

மஹாப்ரளயதி3 ஸர்வரன்ன நின்னொளிட்டு கொம்பி3 

பிரம்மாதி அனைத்து ஜீவர்களின் இந்திரியங்கள் சென்று லயம் அடையும் இடமாக இருப்பவனே. மகாமகிமனே. ஸர்வாஸு நிலயனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாதி அனைத்து ஜீவர்களின் ப்ராணங்களை காப்பவனாக நீ இருக்கிறாய். மஹா ப்ரளய காலத்தில் அனைத்து ஜீவர்களையும் நீ உனக்குள் வைத்துக் கொள்கிறாய்.

***



No comments:

Post a Comment