Monday, August 14, 2023

#240 - 708-709-710 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

708. ஸ்ரீ வஸவே நம:

3க்ஷிணாவதி யஜமான பா43தி3 வாஸவஸு

தோ3ஷதூ3 நமோ நினகெ3 ஶ்வ கோ33 பால

க்ஷீரார்ணவவாஸ ஸ்ரீலட்சுமி நாராயணனே நீனு

க்ஷோணி கோ3குலத3ல்லி வாஸமாடி3தி3 ஸ்ரீகிருஷ்ண 

யாகங்களில் நீ எஜமான பாகத்தில் வசிப்பவனாக இருக்கிறாய். வஸவே உனக்கு என் நமஸ்காரங்கள். தோஷதூரனே. குதிரை, பசு ஆகியவற்றை காப்பவனே. பாற்கடலில் வசிப்பவனே. ஸ்ரீலட்சுமி நாராயணனே. நீயே கோகுலத்தில் வசித்த கிருஷ்ணனாக இருக்கிறாய். 

709. ஸ்ரீ வஸுமனஸே நம:

அஸுரர பௌருஷ்ய அபஹார மாடு3 மன

வஸுமனாநமோ எம்பெ3 அஸுராடவி தா3வாக்3னி

வஸுதே3 ப்ரிய ஸுதனெ பீ4ஷ்மாதி3 வஸுத்4யேய

பா4ஸிப ஸௌந்த3ர்ய ஸுஹ்ருத3 ஸுதீ3ப்தஞானரூப 

அசுரர்களின் சக்தியை அபகரிப்பவனே. வஸுமனஸே உனக்கு என் நமஸ்காரங்கள். அசுரர்களுக்கு அக்னியைப் போன்றவனே. வஸுதேவனின் ப்ரியமான மகனே. பீஷ்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவனே. ஒளிர்வதான அழகினைக் கொண்டவனே. கருணை கொண்ட இதயத்தை கொண்டவனே. ஒளிர்வதான ஞான மயமானவனே. 

710. ஸ்ரீ ஹவிஷே நம:

உபஜீவ்யஹவிநமோ 4க்தரக்ஷக போஷக

கோ3 ஶோதா மனெயல்லி வாஸமாடி3 தை3த்யர

உபடள நிரோதி4ஸி கம்ஸ கரெயலு ஹோகி3

குவலயபீடா3 கம்ஸாதி33 கொந்து3 ஸஜ்ஜனர காய்தி3 

அனைவரிலும் வ்யாப்தனே. ஹவிஷே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. கோப, யசோதா தம்பதியினரின் வீட்டில் வசித்து, தைத்யர்களை கொன்று, கம்சன் அழைத்தபோது அங்கு சென்று, குவலயபீட மற்றும் கம்சர்களை கொன்று, ஸஜ்ஜனர்களை காத்தவனே. 

***


No comments:

Post a Comment