Wednesday, August 2, 2023

#228 - 672-673-674 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

672. ஸ்ரீ வீராய நம:

விஶிஷ்டனு ஸர்வரிகு3 உத்தமனு எம்பு33னு

ருக்ஸாமாதி3 வேத3வாக்3யக3ளிந்த3 3ம்ய

ஸ்ரீ நீனுவீரநமோ எம்பெ3 ஸர்வதா3 ஸமர்த்த2

விஶேஷதி3 இச்சானுரூப ஸுகி2 அப்ரதிரத2 

சிறப்பானவன். அனைவரைவிட உத்தமன் என்பதை ரிக், ஸாம முதலான வேத வாக்கியங்களால் அறியப்படுபவன். ஸ்ரீஷனே. வீரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் ஸமர்த்தனாக இருக்கிறாய். விசேஷமாக உன் இஷ்டத்திற்கேற்பவே சுகத்தை அளிக்கிறாய். அனைவரைவிட முதல்வனே. 

673. ஸ்ரீ அனந்தாய நம:

நாஶரஹிதனு நீனுஅனந்தநமோ நினகெ3

ஸ்ரீ நீ அவினாஶி எந்து3 ஶ்ருதி ஸாருதிதெ3யு

தே3 காலகு3 வஸ்து பரிச்2சே23 இல்லத3

நீனுநவித்3யதே அந்தோ யஸ்ய :’ 

அழிவு இல்லாதவனே. நீ அனந்தனாக இருக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீஷனே. நீ அழிவு இல்லாதவன் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. தேச, கால, குண, வஸ்துக்களால் எவ்வித குறைகளும் இல்லாதவன். அனைவருக்கும் நீயே ஸ்வாமி என்று வேதங்கள் சொல்கின்றன. 

674. ஸ்ரீ 4னஞ்சயாய நம:

யக்ஞாதி3 ப்ராப்திவுள்ள4னஞ்சயநமோ நினகெ3

யக்3 பூஜாதி3 4க்தி கார்யக3ளெல்லவு த்வத்பர

யக்3ஞோவைவிஷ்ணு;’ ஸர்வக்ஞனே ஸுத்4யான பூஜாதி3

யக்3ஞத3லி ப்ரீதனாகு3வி ஜயதி யக்ஞத4 

யக்ஞங்கள் மூலமாக அடையப்படுபவனே. தனஞ்சயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞ, பூஜாதி, பக்தி காரியங்கள் அனைத்தும் உன்னை நோக்கியே செய்யப்படுகின்றன. ஸர்வக்ஞனே. தியான, பூஜை மற்றும் யக்ஞங்களாலேயே நீ மகிழ்கிறாய்.

***


No comments:

Post a Comment