ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
741. ஸ்ரீ கிம் நம:
மாத4வனெ நீ ப்ரஶ்ன விஷயனு ‘கிம்’ நமோ எம்பெ3
நிர்தோ3ஷ கு3ணபூர்ண விஷ்ணு ஜிக்ஞாஸிதவ்யனு ‘கிம்’
அந்தராகாஶே ‘கிம்’ வித்3யதே நாம ‘கிம்’ மஹிம
எந்து3 ஹீகெ3 ப்ரஶ்னெ விஷயனு அன்வேஷ்டவ்யனு ‘கிம்’
மாதவனே, நீ கேள்விக்குறிய விஷயனாக இருக்கிறாய். கிம் - உனக்கு என் நமஸ்காரங்கள். நிர்தோஷனே. குணபூர்ணனே. விஷ்ணுவே. ஞானத்தால் அறியப்படுபவனே. அந்தராகாஷத்தில் இருப்பவனே. ஸர்வக்ஞனே. ஆகையால் கிம் என்று அழைக்கப்படுபவனே. இவ்வாறு கேள்விக்குறிய விஷயனாக இருப்பவனே. தேடி அறியப்பட வேண்டியவனே.
742. ஸ்ரீயதே3 நம:
பூர்ண ஸுகு3ர்ணாணவ ஸ்வரூப ‘விஶேஷயத்’ நமோ
பூர்ணஞான ஸ்வரூப நீ ஞான விஷயனாகி3ஹி
‘யதன்வேஷ்டவ்ய ஶ்ருதி யாவான ஹம் யத்பா4வம் யத்3ரூ
ப கு3ண கர்மக’ எந்து3 ஸ்ரீ பா4க3வத உக்தியு
நற்குணங்கள் அனைத்தையும் முழுமையாக கொண்டவனே. விசேஷயதே உனக்கு என் நமஸ்காரங்கள். நீ பூர்ணஞான ஸ்வரூபனாக இருக்கிறாய். ஞானத்திற்கான விஷயனாக இருக்கிறாய். பாகவத வசனமான - யதன்வேஷட்வ்ய ஸ்ருதி - உன்னையே புகழ்கிறது.
743. ஸ்ரீ ததே3 நம:
ஸுக2பு3த்3தி4 விஸ்தார மாள்ப ‘தத்’ நமோ நமோ எம்பெ3
ஸுகா2த்3யஶேஷ கு3ணதா4ம ப்ரணவதத் அவ
ஏகாத்மா விஷ்ணு ஸத் நித்யனு ஸர்வகர்தாஸ்வாமி
ஸுக2மோக்ஷப்ரத3 அன்வேஷ்டவ்ய ஜிக்ஞாஸிதவ்ய ஸ்ரீஶ
நற்புத்தியை மேம்படுத்துபவனே. ததே உனக்கு என் நமஸ்காரங்கள். சுகாதி அனேக குணங்களின் இருப்பிடமே. ப்ரணவ மந்திரனே. ஏகாத்மனே விஷ்ணுவே. நித்யனே. அனைத்தையும் செய்பவனே. ஸ்வாமியே. நித்யசுகமான மோட்சத்தை அருள்பவனே. தேடி அறியப்பட வேண்டியவனே. ஆராய்ந்து (படித்து) அறியப்பட வேண்டியவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment