ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
669. ஸ்ரீ க்ருதாக3மாய நம:
கையல்லி வஜ்ர சின்ஹவுள்ள ‘க்ருதாக3ம’ நமஸ்தே
தோயஜாக்ஷனெ நீனு புராணேதிஹாஸாதி3க3ள
த3யதி3 ரசிஸி ஆ ஸதா3க3மக3ளிம் ஹரிய
ஸ்ரீயா ரூபகு3ணக3ள ஸுலப4தி3 திளிஸிதி3
கையில் வஜ்ர சின்னத்தைக் கொண்டிருக்கும் க்ருதாகமனே உனக்கு என் நமஸ்காரங்கள். தாமரைக் கண்ணனே. புராண, இதிகாசங்களை நீ மிகவும் கருணையுடன் இயற்றி, அந்த ஸதாகமங்களின் மூலமாக ஸ்ரீஹரியின் ரூப குணங்களை மிகவும் சுலபமாக தெரிவித்தாய்.
670. ஸ்ரீ அனிர்தே3ஶ்யவபுஷே நம:
மேக4மண்ட3லத3ந்தெ வாஞ்சிதவ ஸுரிஸுவவ
அக4தூர ‘அனிர்தே3ஶ்யவபு’ நமோ நமோ எம்பெ3
ஹீகெ3ந்து3 ஸாகல்ய அரியலிகெ அஶக்யவாத3
ஸுக2ஞானதி3 பரமபூர்ண கு3ணவபு நீனு
மேக மண்டலத்தைப் போல அன்பினை பொழிபவனே. குறைகள் அற்றவனே. அனிர்தேஷ்யவபுவே உனக்கு என நமஸ்காரங்கள். உன்னை முழுமையாக அறியமுடியாத அபாரமான சுக ஞானத்தினால், நீ பரமபூர்ணனாக இருக்கிறாய்.
671. ஸ்ரீ விஷ்ணுவே நம:
விஶேஷவாகி3 அன்னகொடு3வி ப4க்தருக3ளிகெ3
‘விஷ்ணு’ நமோ அன்னவெந்த3ரெ ஆனந்த3 ஞான புஷ்டி
விஶிஷ்ட ஆதத ஸர்வஸுகு3ண பூர்ணனு ப3ல
சேஷ்டாவந்தனு ரமாபி3ரம்மேஶானாதி3க3ள்கெ3 ஸ்வாமி
உன் பக்தர்களுக்கு விசேஷமாக அன்னத்தை கொடுக்கிறாய். விஷ்ணுவே உனக்கு என் நமஸ்காரங்கள். அன்னம் என்றால், ஆனந்த ஞானம் என்று அர்த்தம். மிகச்சிறந்ததான அனைத்து குணங்களையும் பூரணமாக கொண்டவனே. அனைத்து செயல்களையும் செய்பவனே. ரமா, பிரம்ம, ருத்ரர் ஆகிய அனைவருக்கும் ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment