ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
723. ஸ்ரீ அனலாய நம:
ஶத்ருக3ள த3ஹனக்கெ ப்ரவ்ருத்த நீனு ‘அனல’
ஸதா3 நமோ நமோ எம்பெ3 அக்னியந்தர்யாமி நீனு
உத வாயு தேஜஸ் லக்ஷ்மி ருத்3ர ப்ருதி2வீ அந்தஸ்த2
த்ரிவ்ருத் ஸ்ருஷ்டிகர்த நீனு ப4க்தேஷ்டதா3த உதா3ர
எதிரிகளை அழிப்பதற்கு நீயே காரணனாக இருக்கிறாய். அனலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அக்னியின் அந்தர்யாமியாக நீயே இருக்கிறாய். பிரம்ம வாயு தேஜஸ் லட்சுமி, ருத்ர, ப்ருத்வி, என அனைத்து ஜீவர்களிலும் இருப்பதான மூன்று குணங்களின் காரியங்களையும் நீயே செய்கிறாய். அதனை படைத்தவனும் நீயே. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. கருணைக்கடலே.
724. ஸ்ரீ த3ர்பக்4னே நம:
ப4க்தாஹங்கார நாஶமாள்ப ‘த3ர்பஹ’ நமோ எம்பெ3
ப4க்த ஜயவிஜயர த3ர்பனாஶ மாடி3தி3யோ
ப4க்தராத3ரு அஸுரராத3ரு ஸர்வர த3ர்ப
ப்ரத்3வம்ஸ மாடு3வியோ உருபராக்ரம ஸர்வக்3ஞ
பக்தர்களின் கர்வத்தினை அழிப்பவனே. தர்பஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களான ஜய விஜயர்களின் கர்வத்தினை அடக்கியவனே. பக்தர்களோ, அசுரர்களோ அனைவரின் கர்வத்தினை அழிப்பவனே. வீரனே. ஸர்வக்ஞனே.
725. ஸ்ரீ த3ர்பதா3ய நம:
த3ர்பகொடு3வியோ நீனு ‘த3ர்பத3னே’ நமோ
ஹ்ருஷிகேஶனே மனோல்ஹாத3கர ஸுஹ்ருத்தமனே
து3ஷ்டஜன அயோக்3யரிகெ3 க3ர்வவனு கொடு3வி
ஹர்ஷக குஸுமபா3ண த3ர்பன்ன இத்தி ஜக3க்கெ
பெருமையை கொடுப்பவனே. தர்பதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஹ்ருஷிகேஷனே. மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பவனே. தூய்மையான இதயத்தை கொண்டவனே. துஷ்டர்களுக்கு, அயோக்யர்களுக்கு கர்வத்தை கொடுப்பவனே. மகிழ்ச்சி என்னும் பூ தொடுத்த அம்பினை, கர்வத்தினை உலகிற்கு கொடுத்தவனே.
***
No comments:
Post a Comment