ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
690. ஸ்ரீ மஹாயக்ஞாய நம:
நியோஜிஸுவி தேஜஸ்வி அஶ்வக3ள ‘மஹாயக்ஞ
ஹயரூப நீகொண்டி3 உஷாதி3 ஸர்வ ஆஶ்ரயனு
ஹயரூபி பி3ரம்மாஶ்வமேத4 யக்ஞ அத்4யக்ஷனு
ஹயாதி3 சதுராஶ்வவ நியமிபுதே3னரிது3
தேஜஸ்வியே. குதிரைகளின் சக்தியை நீயே அருள்கிறாய். மஹாயக்ஞனே. நீ குதிரை ரூபத்தை ஏற்றிருக்கிறாய். அனைவருக்கும் நீயே கதியாக இருக்கிறாய். குதிரை ரூபியே. பிரம்ம அஸ்வமேத யக்ஞத்தில் நீயே தலைவன். குதிரை முதலான அனைத்தையும் நீயே நியமிக்கிறாய்.
691. ஸ்ரீ மஹாஹவிஷே நம:
மஹாமந்த்ர ப்ரவ்ருத்தி ஆஶ்ரய ஞான ‘மஹாஹவி’
அஹர்னிஶி நமோ ஸாது4 பூஜாராத4ன விஷய
மஹான் ரஸரூப நீ மந்த்ர ஹவிஸ் நைவேத்4யஸ்த2னு
ஆ ஹவிஷ்யாதி3க3 ஸ்வாக்2ய ரஸக்3ரஹிஸி ஸந்தெயிபி
மஹா மந்திரங்களினால் போற்றப்படுபவனே, அவற்றின் ஆஸ்ரயனே. மஹாஹவிஷே, இரவும் பகலுமாக நான் உன்னை வணங்குகிறேன். ஸஜ்ஜனர்கள் செய்வதான பூஜா, ஆராதனை ஆகியவற்றின் விஷயனே. மகாமகிமனே. மந்திரன், ஹவிஸ், நைவேத்யம் ஆகியவற்றில் இருப்பவனே. ரஸ ரூபனே. அந்த ஹவிஸ் ஆகியவற்றின் ஸ்வாக்ய ரஸத்தினை நீ ஏற்றுக்கொண்டு, பக்தர்களை காக்கிறாய்.
692. ஸ்ரீ ஸ்தவ்யாய நம:
ப4க்தரன்ன வாத்ஸல்யதி3ந்த3 ஸ்பர்ஶமாள்ப ‘ஸ்தவ்ய’
ஆத3ரதி3 நமோ ஹனுமன ப4க்திஸ்துதி ஸேவெ
கெ3து3ரில்லவெந்து3 மெச்சி மோக்ஷ ஸாலது3 என்னுத
இத்தி நின்னன்ன நீனே ஆலிங்க3னவ மாடி3 ராம
பக்தர்களை மிகவும் வாஞ்சையுடன் ஸ்பர்சனம் செய்பவனே. ஸ்தவ்யனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஹனுமனின் பக்தி, ஸ்துதி, சேவைகளுக்கு மெச்சி அதற்கு மோட்சம் கொடுத்தால் கூட போதாது என்று நீ உன்னை அவனுக்கு, ஆலிங்கனம் செய்து கொடுத்தாய். ஹே ஸ்ரீராமனே.
***
No comments:
Post a Comment