Monday, August 28, 2023

#250 - 738-739-740 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

737. ஸ்ரீ ஏகாய நம:

ஸர்வத்ர ஸஞ்சரிபஏகநமோ நமோ நினகெ3

ஸர்வஸ்வாமியு ஸர்வகர்த காரயிதா ஏக நீனு

ஸர்வமுக்2 ப்ரதா4 அஸமான அஸஹாயனு

ஸர்வவேதா3ர்த்தக்கு அமிதனு விலக்ஷண  

அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கும் ஏகனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவருக்கும் ஸ்வாமியே. அனைத்தையும் செய்யும், செய்விக்கும் ஏகன் நீயே. ஸர்வோத்தமனே. உனக்கு சமம் என்று யாரும் இல்லை. அபாரமான சக்தியை கொண்டவனே. அனைத்து வேத அர்த்தங்களையும் மீறி  நிற்பவனே. ஈஷனே. 

738. ஸ்ரீ அனேகாய நம:

ஸதா3 பூஜகாதி33ளிம் யுக்தனுஅனேகநமோ

ஸுத்4யானபர அனேக 4க்தர்கெ3 அனேகரூப

நீ 3யதி3 காணிஸுவி மத்ஸ்யாதி3 3 சித்ரூப

அஜிதாத்3யனந்தரூப ஸ்ரீ ஸ்ரீமன் நாராயண 

அனைத்து பூஜைகளாலும் வணங்கப்படுபவனே. அனேகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தியானத்தினால் அறியப்படுபவனே. அனேக பக்தர்களுக்கு அனேக ரூபங்களால் நீ கருணையுடன் தரிசனம் அளிக்கிறாய். மத்ஸ்யாதி 10 ரூபங்களை எடுத்தவனே. அஜிதாதி அனந்தரூபனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஸ்ரீமன் நாராயணனே. 

739. ஸ்ரீ ஸ்த2வாய நம:

4க்தரமனக3ளிந்த3 ஹொரடு3 ஸ்தோத்ரக3ளு

4க்தப்ரிய நின்ன 3ளி ஸதா3வுண்டுஸ்த2:’ நமோ

4க்தகீ3தெ ஸ்தோத்ரக3ளு நின்ன மஹாத்ம்யா ஞான

யுதவாகி3ஹவு ஞானானந்த3தி3 பூர்ண நீனு 

பக்தர்களின் மனங்களிலிருந்து வெளிவரும் ஸ்தோத்திரங்கள், பக்தப்ரியனே உன்னிடம் எப்போதும் உண்டு. ஸ்தவனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் பாடும் ஸ்தோத்திரங்கள், உன்னுடைய மஹாத்ம்ய ஞானத்தை கொண்டிருக்கின்றன. ஞானானந்தாதி பூர்ணன் நீயே. 

***


No comments:

Post a Comment