ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
732. ஸ்ரீ அமூர்த்திமதயே நம:
ஆயதார்த்த2 விபரீதஞான மோஹ தூ3ர மாள்பி
ஸக்ஞானப்ரத3 ‘அமூர்த்திவான்’ நமோ ஸ்ரீஶ ஸர்வக்3ஞ
ஸக்3ஞானஸுக2 ஶக்திஸ்வரூப அப்ராக்ருததே3ஹ
மாயாதே3விய ரமண ஜக3த்விலக்ஷணரூப
தவறான, சந்தேகம் உள்ள ஞான, மோகம் ஆகியவற்றை விலக்குகிறாய். யதார்த்த ஞானத்தை அருள்பவனே. அமூர்த்திமதயே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஸர்வக்ஞனே. யதார்த்த ஞான, ஸுக ஸ்வரூபனே. அப்ராக்ருத தேகத்தை கொண்டவனே. மாயா தேவியின் தலைவனே. உலகத்திலிருந்து முழுவதுமாக வேறுபட்டவனே.
733. ஸ்ரீ அனேகமூர்த்தியே நம:
அனேக ஸாமஸ்தோம ஸ்தோத்ர ஸ்துத ‘அனேகமூர்த்தி’
ஆனமோ அனேக ப்ரகாரத3லி ஸம்யக் ஸ்துத்யனே
அனேக அவதார மத்ஸ்ய கூர்ம வராஹாதி3யு
அனந்தரூபக3ள ஸ்தோம ஸ்துத ஸுக2 சின்மாத்ர
அனேக (எல்லா) ஸாமவேத ஸ்தோத்திரங்களால் துதிக்கப்படுபவனே. அனேகமூர்த்தியே. உனக்கு என் நமஸ்காரங்கள். அனேக விதங்களில் எப்போதும் வணங்கப்படுபவனே. பற்பல அவதாரங்களை எடுத்தவனே. மத்ஸ்ய, கூர்ம, வராக முதலான அனேக ரூபங்களை எடுத்தவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. சின்மய ரூபனே.
734. ஸ்ரீ அவ்யக்தாய நம:
ஸர்வ பதா3ர்த்த2ந்தர்க3த த்3ருட4ஸ்தா2யியாகி3ருவ
‘அவ்யக்த’ நமோ எம்பெ3 ‘தத3வ்யக்தமாஹஹி’ எந்து3க்த
தே3வ நின்ன காம்பு3த3கெ அஶக்ய நீ அதீந்த்3ரிய
ஸர்வயத்னக்கு அவ்யக்த, ஸ்வேச்சா த3யமாடெ3 உண்டு
அனைத்து பதார்த்தங்களில், அந்தந்த ரூபங்களில், அந்தர்யாமியாக இருப்பவனே. அவ்யக்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ததவ்யக்தமாஹஹி என்று ஸ்தோத்திரம் செய்யப்படுபவனே. ஸ்ரீஹரியே உன்னை பார்ப்பது மிகவும் அரிதான விஷயம். அதீந்த்ரியனே. எவ்வளவு முயற்சி செய்தாலும் அவற்றிற்கு அப்பாற்பட்டவனே. நீயாக கருணை கொண்டு தரிசனம் அளித்தால் உண்டு.
***
No comments:
Post a Comment