ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
714. ஸ்ரீ ஸத்பூ4தயே நம:
தே3வதெக3ளிகு3 அக3ம்யவாகி3ருவ ஐஶ்வர்ய
தே3வதே3வோத்தம நினகெ3 இருவ ‘ஸத்பூ4தியே’
ஸர்வதா3 நமோ நினகெ3 மஹைஶ்வர்யபூர்ண ஸ்வாமி
ஸர்வரிகு3 தத்தத்யோக்3ய ஐஶ்வர்ய நியமேன ஈவி
தேவதைகளுக்கும்கூட புலப்படாதவனாக இருக்கும் செல்வமே. தேவதேவோத்தமனே. ஸத்பூதியே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான செல்வங்களைக் கொண்டவனான ஸ்வாமியே. அனைவருக்கும் அவரவர்களின் யோக்யதைக்கேற்ப செல்வங்களை நீ அருள்கிறாய்.
715. ஸ்ரீ ஸத்பராயணாய நம:
தே3வதெக3ளிகெ3 உத்தம ஆனந்த3 ஆஶ்ரயனு
தே3வதே3வோத்தம ‘ஸத்பராயணனெ’ நமோ எம்பெ3
தே3வதாதி3 ஸஜ்ஜனரிகெ3 முக்2ய ஆஶ்ரயனு
தே3வதா ப்ரவர வாயு அனுயாயிகெ3 ஆஶ்ரயனு
தேவதைகளுக்கு உத்தமமான ஆனந்தத்தை அருள்பவனே. தேவதேவோத்தமனே. ஸத்பராயணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தேவதாதி அனைத்து ஸஜ்ஜனர்களுக்கும் நீயே கதியாக இருக்கிறாய். தேவதைகள் வணங்குபவரான வாயுதேவருக்கு நீயே கதி.
716. ஸ்ரீ ஶூரஸேனாய நம:
ஞானயுத்3த4க்கெ ப3ருவ ஶத்ருப3ந்த4ன மாடு3வி
நீனு ‘ஶூரஸேன’ நமோ எம்பெ3 பூ4பா4ர ஹரண
ஸுக்3ஞானி பாண்ட3வ ரக்ஷக விபரீத ஞானி
து3ர்யோத4னாதி3க3ள நிரோதி4ஸி அளிஸிதி3யோ
ஞானத்தை அடையும் வழியில் வரும் எதிரிகளை நீ அழிக்கிறாய். ஸூரஸேனனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூமியின் பாரத்தை குறைப்பவனே. ஞானியே. பாண்டவர்களை காப்பவனே. தவறான ஞானத்தைக் கொண்டவர்களான துரியோதனாதிகளை கொன்று அவர்களை அழித்தாய்.
***
No comments:
Post a Comment