ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
678. ஸ்ரீ பி3ரம்மவிவர்த்3த4னாய நம:
பௌருஷ்ய பு3த்3தி4கெ3 ஆஶ்ரயனு ‘பி3ரம்மவிவர்த்3த4ன’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 அம்ப்3ரணீஷ ஸிந்து4ஶாயி
த4ரெயல்லி அவதரிஸி வேத3வ விபா4கி3ஸி
ஸுர நரரிகெ3 வேதா3ர்த்த2ஞானவ வர்த்3தி4ஸிதி3
பக்தர்களுக்கு பௌருஷ்ய புத்தியை அளிப்பவனே. பிரம்மவிவர்த்தனனே. உனக்கு தலை வணங்கி நமஸ்காரம் செய்கிறேன். லட்சுமிதேவியின் தலைவனே. பாற்கடலில் படுத்திருப்பவனே. பூமியில் அவதரித்து, வேதங்களை பிரித்து, தேவர்களுக்கும், நரர்களுக்கும் வேதங்களின் அர்த்தங்களை, அதன் ஞானத்தை வளர்த்தவனே.
679. ஸ்ரீ பி3ரம்மவிதே3 நம:
‘பி3ரம்மவித்’ நீ வ்யாப்தி ஹொந்தி3த3வ நமோ நமோ எம்பெ3
பி3ரம்மவேத3ஞானி ப்ரணவ ஸமஸ்த வேத3ங்க3ளிம்
மஹார்ஹ ஸ்ரீ அம்ப்3ரணீபதி வ்யாஸக்ருத் புராணாதி3
மஹா ஆக3மதி3 கீர்த்தித வ்யாப்திவந்த
பிரம்மவிதே - நீ அனைத்து இடங்களிலும் வ்யாபித்தவனாக இருக்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மவேத ஞானியே. ப்ரணவ முதலான அனைத்து வேதங்களாலும் புகழப்படுபவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் பதியே. வ்யாஸர் இயற்றிய புராணங்கள் முதலான அனைத்து ஆகங்களாலும் போற்றப்படுபவனே.
680. ஸ்ரீ பி3ராஹ்மணாய நம:
ஸ்துதிப்ராப்த ‘பி3ராஹ்மண’ நமோ த3யதி3 ஸ்வீகரிஸோ
ஈ ஸ்தோத்ராம்ருதஸார நீ ரசிஸி ப3ரெஸுவுது3
வேத3தி3ம் ஸர்வோத்தம ஸர்வகல்யாண பரிபூர்ண
நிர்தோ3ஷ கு3ணார்ணா நீ க3ம்யனாகி3ருவி விஷ்ணோ
ஸ்துதிகளால் அடையத்தக்கவனே. பிராமணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த ஸ்தோத்திரம் என்னும் அமிர்த ஸாரத்தை நீ ஏற்றுக் கொள். இதனை நீயே இயற்றச் செய்கிறாய். வேதங்களால் ஸர்வோத்தமன் என்று அறியப்படுபவனே. ஸர்வகல்யாண குணபரிபூர்ணனே. நிர்தோஷனே. குணங்களின் சாகரனே. இவ்வாறெல்லாம் வேதங்களால் நீ போற்றப்படுகிறாய்.
***
No comments:
Post a Comment