ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
717. ஸ்ரீ யது3ஶ்ரேஷ்டாய நம:
பூஜிஸுவ ராஜரன்ன ரக்ஷிஸுவ ‘யது3ஶ்ரேஷ்ட’
நிஜஸுக2ப்ரத3 நமோ யது3பதியே ஸ்ரீகிருஷ்ண
ராஜ யுதி3ஷ்டிர பீ4மாதி3க்ருத அக்3ரபூஜெகொண்டு3
ராஜ்ய ஆளிஸி ரக்ஷிஸி யுத்3த4த3லி ஜயகொட்டி
பூஜிக்கும் அரசர்களை காக்கும் யதுஸ்ரேஷ்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உண்மையான சுகமான மோட்சத்தை அருள்பவனே. யதிபதியே ஸ்ரீகிருஷ்ணனே. யுதிஷ்டிரன், பீமன் ஆகியோர் செய்த அக்ரபூஜையை ஏற்றுக் கொண்டு, நீ அவர்களை நாட்டை ஆளச்செய்து, காத்தாய். பாண்டவர்களுக்கு போரில் வெற்றியைக் கொடுத்தாய்.
718. ஸ்ரீ ஸன்னிவாஸாய நம:
வேத3மார்க்க3 ப்ரவர்த்திஸுவ ‘ஸன்னிவாஸனே’ நமோ
வேத3வித் ஸஜ்ஜனரொளு அந்தர்க3தனாகி3 வாஸ
பத்3மஜனொளித்து ஸ்ருஷ்டி ஞானோபதே3ஶ மாள்பி
ருத்3ர த3க்ஷிணாமூர்த்தியொளித்3து3 ஶிஷ்யோபதே3ஶவு
வேதங்களால் போற்றப்படுபவனான ஸன்னிவாஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். வேதங்களை அறிந்தவர்களான ஸஜ்ஜனர்களில் அந்தர்யாமியாக இருப்பவனே. பிரம்மனில் இருந்து ஸ்ருஷ்டி காரியத்தை செய்கிறாய், ஞானோபதேசத்தை செய்கிறாய். ருத்ரரான தக்ஷிணாமூர்த்தியில் இருந்து, சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்கிறாய்.
719. ஸ்ரீ ஸுயாமுனாய நம:
அபீ4ஷ்டப்ரத3 நாம ஸ்வீகரிஸுவி ‘ஸுயாமுனா’
ஷுப4தம கதா2ஷய நமோ எம்பெ3 நினகெ3
ஶோப4ன ஸுந்த3ர ஸ்ரீகிருஷ்ண யமுனாதீரதி3
ஸுப4க்தகோ3பியர் ஸ்துதி மெச்சிதி3 காளிந்தி3பதே
அபீஷ்டங்களை நிறைவேற்றுபவன் என்னும் பெயரை பெற்றவனே. ஸுயாமுனனே உனக்கு என் நமஸ்காரங்கள். அற்புதமான சரித்திரங்களை கொண்டவனே. அழகான ஸ்ரீகிருஷ்ணனே. யமுனை நதிக்கரையில், பக்தைகளான கோபியர்களின் ஸ்துதிகளை நீ மெச்சி ஏற்றுக் கொண்டாயே. காளிந்தி நர்த்தனம் ஆடியவனே.
***
No comments:
Post a Comment