ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
693. ஸ்ரீ ஸ்தவப்ரியாய நம:
ப4க்தர்கள த்ருப்திமாள்ப ‘ஸ்தவப்ரிய’ நமோ எம்பெ3
ப4க்தக்ருத ஸ்தவனாதி ஸேவெ மெச்சி ஸ்வீகரிஸி
ப4க்த இஹ தாபதி3 குந்தி3 குந்தா3க3தெ3 கருண
ஸுதா4மளெக3ரெது த்ருப்தி ஸாத4ன கெ3ய்ஸுவி
பக்தர்களை திருப்திப்படுத்தும் ஸ்தவப்ரியனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்வதான ஸ்தவன ஆகியவற்றின் சேவைகளை மெச்சி, அவற்றை ஏற்றுக் கொண்டு, பக்தர்கள் இந்த சம்சாரத்தில் எவ்வித கஷ்டங்களும் படாமல் அவர்களை கருணையுடன், அமிர்த மழையை பொழிந்து திருப்தி செய்வாய். அவர்கள் மூலம் சாதனைகளை செய்விக்கிறாய்.
694. ஸ்ரீ ஸ்தோத்ராய நம:
பாபக3ளிகெ3 அத4:பாத மாள்ப ‘ஸ்தோத்ரம்’ நமஸ்தே
பாபக3ளு நானாவித4 அவுக3ளலி முக்2யவு
ஸ்ரீபப4க்த த்3வேஷவு ப4க்தக்ருத் ஸ்தோத்ர நியாமக
ஸ்ரீ புருஷோத்தம ஸ்தோத்ராஹ்வயனலி நவத்3வேஷ
பாவங்களை அழிப்பவனே. ஸ்தோத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பாவங்கள் என்பது பற்பல விதங்கள். அவற்றில் முக்கியமானவை - பகவந்தனின் பக்தர்கள் மேல் காட்டும் த்வேஷம் ஆகும். பக்தர்கள் செய்யும் ஸ்தோத்ரங்களின் நியாமகனே. ஸ்ரீபுருஷோத்தமனே. ஸ்தோத்ரம் செய்யப்படுபவனில் (பகவந்தனில்) செய்யும் நவவித த்வேஷமும் பாவம் ஆகும்.
695. ஸ்ரீ ஸ்துதிஸ்தோத்ரே நம:
ப4க்தர்க3ள வாக்2யதி3ந்த3 ஸ்துதிஸல்படு3வவனு
‘ஸ்துதிஸ்தோத்ரா’ நமோ எம்பெ3 ப4க்தரொளு நீனு நிந்து
ஸ்தோத்ரக3ள மாடி3 மாடி3ஸுவி ஸர்வகர்த்தா
ப4க்தாந்தர்யாமி ப4க்தாபி4ஷ்டப்ரத3 வாயுஸ்த2 ஸ்ரீஶ
பக்தர்களின் செய்யும் ஸ்தோத்திரங்களால் வணங்கப்படுபவனே. ஸ்துதிஸ்தோத்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் நீ நின்று, ஸ்தோத்ரங்களை செய்து, செய்விக்கிறாய். ஸர்வகர்த்தனே. பக்தர்களின் அந்தர்யாமியாக இருப்பவனே. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. வாயுதேவரில் நிலைத்திருப்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment