ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
696. ஸ்ரீ ரணப்ரியாய நம:
யுத்3த4 ப்ரியனாகி3ருவ ‘ரணப்ரிய நமோ’ எம்பெ3
ப4க்தரக்ஷணெ த4ர்ம ஸம்ஸ்தாபனெகெ3 ஆகா3க3
க்ஷிதியல்லி அவதரிஸி ஹிரண்யகாதி3க3ளன்னு
யுத்3த4தி3 நிரோத4 மாடி3 லோகக்கெ க்ஷேமவன்னித்தி
யுத்த ப்ரியனே. ரணப்ரியனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. தர்மத்தை நிலை நாட்டுபவனே. அவ்வப்போது பூமியில் அவதரித்து, ஹிரண்யக முதலான அசுரர்களை போரில் வென்று, உலகிற்கு நலன் அளிக்கிறாய்.
697. ஸ்ரீ பூர்ணாய நம:
பூர்ண மாடு3வி ஆத்3த3ரிந்த3 ‘பூர்ணனே’ நமோ எம்பெ3
கு3ணபூர்ண நாது3த3ரிந்த3 ‘பூர்ண’ எந்து3 எனிஸுவி
பூர்ணஸுக2 ஸ்வதந்த்ர ஸர்வவ்யாபி நிர்தோ3ஷ பூ4மன்
நின்னய பூர்ணத்வ லக்ஷண ஸம எல்லூனு இல்ல
எதையும் பூர்ணமாக ஆக்குகிறாய். பூர்ணனே. உனக்கு என் நமஸ்காரங்கள். குணபூர்ணன் ஆகையால், நீ பூர்ணன். பூர்ண சுகத்தை கொண்டவன். ஸ்வதந்த்ரனே. ஸர்வவ்யாபியே. நிர்தோஷனே. உலகில் நிறைந்திருப்பவனே. உன்னுடைய பூர்ணத்வ லட்சணத்திற்கு சமம் எங்கும் இல்லை.
698. ஸ்ரீ பூரயித்ரே நம:
ப4க்தஸாத4ன பூர்த்திமாடு3வி ‘பூரயிதா’ நமோ
தத்தத் யோக்3யதானுஸாரவாகி3 பூர்த்திமாடு3வியோ
அந்து3 த3க்ஷக்ருத யக்3ஞ பூர்த்திமாடி3ஸிதி3 நீனு
வதா3ன்ய ப3லிராஜ யக்ஞ பூர்த்திமாடி3ஸிதி3
பக்தர்களின்
சாதனைகளை பூர்ணம் ஆக்குபவனே. பூரயித்ரே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பக்தர்களின் யோக்யதைக்கேற்ப
அவர்களின் சாதனைகளை நிறைவேற்றுகிறாய். அன்று தக்ஷன் செய்த யாகத்தை பூர்ணம் ஆக்கினாய்.
பலிராஜன் செய்த யக்ஞத்தையும் நீ பூர்ணம் ஆக்கினாய்.
***
No comments:
Post a Comment