ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
681. ஸ்ரீ பி3ரஹ்மணே நம:
ரித்விஜரு உள்ளந்த ‘பி3ரம்ம’ நமோ நமோ நினகெ3
வேத3 அத்3யயன கௌஶல்யவந்தரு யக்3ஞத3ல்லி
வேத3வாக்ய ஸ்தோத்ர மாள்ப ஸச்சேதனருள்ளவனு
வேத3 ஸர்வ பி3ரம்மமய ஹரே ஸர்வஜீவரொடெ3ய
ரித்விஜர்கள் உன்னை பிரம்ம என்று வணங்குகிறார்கள். உனக்கு என் நமஸ்காரங்கள். வேத அத்யயனம் செய்பவர்கள், யக்ஞத்தில், உன்னை வேத வாக்கியங்களால் ஸ்தோத்திரம் செய்கின்றனர். வேதம் அனைத்து பிரம்மமயமாகவே உள்ளது. அனைத்து ஜீவர்களின் தலைவனே. ஸ்ரீஹரியே.
682. ஸ்ரீ பி3ரம்மஞாய நம:
ஸ்தோத்ராதி3 ஸாத3ன அரிதவ ‘பி3ரம்மஞ’ நமோ எம்பெ3
பத்3மஸ்த2பி3ரம்ம தன்ன கோரிகெ நெரவேரிஸலு ஸ்தோத்ர
ஸாத3ன கைகொண்ட3 அத3ன்னரிது நாராயண நீ
போ4தி3ஸிதி3 ‘ஞானம் பரமகு3ஹ்யம் மே’ பா4க3வத
ஸ்தோத்திரம் முதலான ஸாதனங்களை ஜீவர்களுக்கு கொடுத்தவனே. பிரம்மஞனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பத்மத்தில் அமர்ந்திருந்த பிரம்மன், தன்னுடைய விருப்பம் நிறைவேறுவதற்காக ஸ்தோத்திரம் என்னும் ஸாதனத்தால் உன்னை வணங்கினான். அதனை ஏற்றுக் கொண்டு, நாராயணனே நீ, அவனுக்கு ஞானத்தை போதித்தாய். மற்றும் மிகவும் ரகசியமான பாகவதத்தை உபதேசம் செய்தாய்.
683. ஸ்ரீ பி3ராஹ்மண ப்ரியாய நம:
ரித்விஜர ஸந்தோஷிஸுவ ‘பி3ராம்ஹணப்ரிய’ நமோ
ரித்விஜரு விஶ்வாமித்ராதி3க3ளு பி3ராமணர்க3ளு
ஸ்ரீவர பி3ரம்மஞானிக3ளு வேத3வித்பன்னர்க3ளு
இவர்க3ளந்த2 பி3ராமணரப்ரிய பி3ராமணப்ரிய
பிராமணர்களை மகிழ்விக்கும் பிராமணப்ரியனே உனக்கு என் நமஸ்காரங்கள். ரித்விஜர்கள், விஸ்வாமித்ரர் முதலான ரிஷிகள், பிராமணர்கள், பிரம்மஞானிகள், வேத வித்பன்னர்கள் இவர்களே முதலான அனைவரின் பிராமண ப்ரியனே.
***
No comments:
Post a Comment