ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
705. ஸ்ரீ வஸுப்ரதா3ய நம:
வஜ்ரதி3ந்த3 அரிவிதா3ரண மாள்ப ‘வஸுப்ரத3’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 தா3ரித்3ர்ய நாஶ மாடு3வி
புருடமணி த்3ரவ்ய த4ன தாரக ஸக்ஞானவ
கருணதி3 இத்து அஞ்ஞானப3ந்த4 சே2தி3ஸுவியோ
உன்னுடைய வஜ்ரத்தினால் (வாள்) துன்பங்களை / கஷ்டங்களை அழிப்பவனே. வஸுப்ரதனே. உனக்கு தலைவணங்குகிறேன். ஏழ்மையை போக்குபவனே. தங்கம், தன, தானியம் ஆகியவற்றை அளிப்பவனே. யதார்த்த ஞானத்தை கருணையுடன் அளித்து, அஞ்ஞானத்தை அழிப்பாயாக.
706. ஸ்ரீ வஸுப்ரதா3ய நம:
ஸுக2 கொடு3வ ‘வஸுப்ரத3னே’ நமோ நமோ எம்பெ3
நிஷ்கமணி கனகாதி3 கொட்டு மத3 தூ3ரமாடி3
ஸஞ்ஞானவித்து மது4 வித்3யாத்3யுபாஸனா யோக்3யர்கெ3
நீ கருணதி3 இத்து நித்யஸுக2 ப்ராப்திய ஈவி
சுகத்தை கொடுக்கும் வஸுப்ரதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தங்கம் ஆகியவற்றைக் கொடுத்து, என் கர்வம் முதலானவற்றை விலக்கி, யதார்த்த ஞானத்தை அருளி, யோக்யதை உள்ளவர்களுக்கு கல்வி முதலானவற்றை கொடுத்து, நித்யஸுகமான முக்தியை நீ கருணையுடன் அருள்கிறாய்.
707. ஸ்ரீ வாஸுதே3வாய நம:
போ4க3ப்ராப்தி மாடு3வ ‘வாஸுதே3வ’ நமோ எம்பெ3
ஸுக2ஞான தேஜஸ்ஸுத்3ரேகதி3ந்த3 ஜக3ச்சேஷ்டா
ஸ்ரீகரனெ நீ மாடி3 யோக்3ய ஸத3னக3ளகெ3ய்ஸி
போ4க3 கொடு3வி ஞானனந்த3 ப3லலீலா ஸுதேஜா
மோட்சத்தைக் கொடுக்கும் வாஸுதேவனே உனக்கு என் நமஸ்காரங்கள். யதார்த்த ஞான, தேஜஸ் ஆகியவற்றைக் கொண்டு, ஸர்வோத்தமனாக, ஸ்ரீகரனே, நீ அனைத்து செயல்களையும் செய்து, யோக்யர்கள் மூலமாக ஸாதனைகளை செய்வித்து, அவர்களுக்கு தக்க பலன்களைக் கொடுக்கிறாய், ஞானானந்தமயனே. வலிமையானவனே. ஸுதேஜனே.
***
No comments:
Post a Comment