Saturday, March 5, 2022

ஸ்லோகம் #11: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #11: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

****

[ஸ்லோகம் 11]

ஸரிது33ருதிரெ கொ1ல்லலோஸுக3 உரக3ரூபிய தை3த்யனனு வர

சரணகமலத3 லீலெயலி ஸம்ஹரிஸித3னு க்‌ஷணதி3 |

ஸுரவரார்ச்சித சரணநாத3ரு த4ரணிஸுரனனு நமிஸி வேத3

நரியுவந்த3தி3 நட1னெ மாடி33 லோகஷிக்‌ஷகனு ||11 

கொல்லலோஸுக - தன்னை கொல்வதற்காக; ஸரிது பருதிரெ - பாய்ந்து வந்த; உரகரூபிய - பாம்பு வடிவிலான; தைத்யனனு - அசுரனை; வர சரணகமலத - தன் அழகான கால்களால்; லீலெயலி - விளையாட்டாக; க்‌ஷணதி - நொடிப்பொழுதில்; ஸம்ஹரிஸிதனு - வாசுதேவன் கொன்றான்; ஸுரவரார்ச்சித சரணநாதரு - தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்படும் சரணங்களைக் கொண்டவன் என்றாலும்; தரணிஸுரனனு நமிஸி - பூமியில் கற்றறிந்தவரான குருகளின் பாதங்களில் வணங்கி; வேதவ நரியுவந்ததி - வேதங்களை கற்க வந்திருப்பதாக; லோகஷிக்‌ஷகனு - உலகத்தையே திருத்துபவன்; நடனெ மாடித - நாடகம் ஆடினான். 

வாசுதேவனின் பாலலீலைகளை மேலும் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

தன்னை கொல்வதற்கு பாய்ந்து வந்த பாம்பு வடிவிலான அசுரனை, வாசுதேவன் தன் அழகான கால்களால் விளையாட்டாக நொடிப்பொழுதில் கொன்றான். தேவதைகளின் கூட்டத்தினால் வணங்கப்படும் சரணங்களைக் கொண்டவன் என்றாலும், பூமியில் கற்றறிந்தவரான குருகளின் பாதங்களில் வணங்கி, வேதங்களை கற்க வந்திருப்பதாக, உலகத்தையே திருத்துபவன், நாடகம் ஆடினான். 

வாசுதேவன், பாம்பினைக் கொன்ற மகிமை, மத்வ விஜயத்தில் 3-38, 39, 40 ஆகிய ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

அவிரளைர்கரளோஷ்மபிராகுலீ

க்ருத ஸமஸ்த ஜனோ விசசார ய: |

க்வசிதமும் நிஜிகாம்ஸூரஷாந்தி மான்

உப ஸஸர்ப ஸ ஸர்ப மயோsஸுர: ||3-38

...

 கருட துண்டமிவ ப்ரதி பன்னவான்

த்விஜ குமார பதம் ச மமார ச ||3-40 

மணிமந்தன் என்னும் அசுரன் பாம்பின் வடிவில் வந்து சர்வமயோSசுர:’, தன் விஷ ஜுவாலையினால் மக்களை அச்சுறுத்தி பயங்கரமாக உலவி வந்தான். ஒரு நாள் இந்த அசுரன், ஆகணாஷ்மசமரான (யாராலும் வெல்லப்பட முடியாதவர்) வாசுதேவனைக் கொல்லவேண்டி அவனின் காலைக் கடித்தான். அப்போது வாசுதேவன் தன் அழகான கால் கட்டைவிரல்களினால் அவனை மிதித்தான். அசுரன் மடிந்தான். இந்தச் செயல் வாயுதேவரால் சாத்தியமாகி, சஜ்ஜனர்களுக்கு பிரியமானதாக இருந்தது. தேவதைகள் மகிழ்ச்சியடைந்தனர். 

கர தளே கலு கந்துக வத் ஸதா

ஸகலயா கலயா ஸஹ வித்யயா |

அரி தரேண ஸமம் ஸ்புரிதம் குரோ:

மனஸி தஸ்ய விடம்பயதோ ஜனான் ||3-42 

வேதங்களால் புகழப்படும் இந்த எதிர்கால-பிரம்மன், உபநயன காரியத்தால் வேதங்களைப் படிக்கும் அதிகாரத்தைப் பெற்றார். ருத்ர, ப்ருஹஸ்பதி, இந்திர ஆகிய தேவதைகளால் எந்நேரமும் பூஜிக்கப்படலானார். ஆனால், மனித வடிவில் இருந்ததால் குருகளில் பாதங்களில் விழுந்து, பாடத்தைத் துவங்கினார். சாதாரணரைப் போல பாடத்தைப் படித்த வாசுதேவனின் மனதில் அனைத்து வித்யைகளும், அனைத்து பாடங்களும் கையிலிருக்கும் பந்து போல தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. ஞானஸ்வரூபரான வாயு அவதாரத்திற்கு, குருகுலவாசம் என்பது முரணாகத் தெரிந்தது. 

சிறுவன் வாசுதேவனின் மகிமைகளை ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர் மேலும் அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறார்.

 ***


No comments:

Post a Comment