Saturday, March 26, 2022

ஸ்லோகம் #32: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #32: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 32]

அஜித பாராஷரியு கருணதி3 ரசிஸிருவ வரஸூத்ரனிகரகெ

ரஸிஸு ஷுப4தம பா4ஷ்யவனு ஸஜ்ஜனரனுத்34ரிஸு |

உசிதவல்லவித3ன்ய ஜனரிகெ3 ஷுசி யஷவ ஸ்ரேயஸவ பொந்து3வி

வசனவிதெ3 ஸ்ரீபதியு பேளித3 ஷிரதி3 4ரிஸித3ரு ||32 

அஜித - யாராலும் வெல்லப்பட முடியாதவரான; பாராஷரியு - பராஷரரின் புதல்வரான ஸ்ரீவேதவ்யாஸர்; கருணதி - கருணையுடன்; ரசிஸிருவ - இயற்றியிருக்கும்; வரஸூத்ர நிகரகெ - பிரம்மஸூத்ரங்களுக்கு; ஷுபதம - மங்களகரமான அர்த்தங்களை கொடுக்கக்கூடிய; பாஷ்யவனு - பாஷ்யத்தை; ரசிஸு - இயற்று; ஸஜ்ஜனரனுத்தரிஸு - சஜ்ஜனர்களை காப்பாற்று; அன்ய ஜனரிகெ - தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படும்; இது - உபதேசம்; உசிதவல்ல - வீணாகும்; ஷுசி - பவித்ரத்தை; யஷவ - வெற்றியை; ஸ்ரேயஸவ - சிறப்பினை; பொந்துவி - அடைவீர்கள்; ஸ்ரீபதியு - ஸ்ரீமன் நாராயணன்; பேளித - கூறிய; வசனவித - இந்த வசனத்தை; ஷிரதி தரிஸிதரு - சிரமேற்கொண்டார். 

ஸ்ரீமன் நாராயணனின் ஆணையை தொடர்ந்து இந்த ஸ்லோகத்திலும் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

யாராலும் வெல்லப்பட முடியாதவரான, பராஷரரின் புதல்வரான ஸ்ரீவேதவ்யாஸர், கருணையுடன் இயற்றியிருக்கும் பிரம்ம ஸூத்ரங்களுக்கு, மங்களகரமான அர்த்தங்களை கொடுக்கக்கூடிய பாஷ்யத்தை இயற்றுங்கள். சஜ்ஜனர்களை காப்பாற்றுங்கள். தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படும் உபதேசம் வீணாகும். இதனால் நீங்கள் வெற்றியை, சிறப்பினை, அடைவீர்கள். ஸ்ரீமன் நாராயணன் கூறிய இந்த வசனத்தை ஸ்ரீமதாசார்யர் சிரமேற்கொண்டார். 

தொடர்ந்து ஸ்ரீமன் நாராயணன் கூறிய வசனங்கள், மத்வ விஜயத்தில் 8-45 ஸ்லோகத்திலிருந்து உள்ளன. 

அபிதாய ஸுத்ர ஹ்ருதயம் ஸதாம் ப்ரியம்

ப்ரவிதாய பாஷ்யமதுனா நிஜேச்சயா |

அபரை: ஸ்ருதி ஸ்ம்ருதி நிஜார்த்த தூஷகை:

ஸுதராம் திரோபவதி ஸம்விதாஹதா || 8-45 

தற்காலத்தில் உள்ள பிரம்மஸூத்ர பாஷ்யங்கள், மிகவும் தவறானவர்களால், வேதங்களின், ஸ்ம்ருதிகளின் உண்மையான அர்த்தங்களை மறைத்து எழுதப்பட்டவை. இதனால் மக்களுக்கு உண்மையான ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. 

அபனேதுமேனமனயம் க்ருதம் கலை:

ப்ரதினேதுமாத்ம ஜனதாம் ஷுபாம் கதிம் |

குரு ஸூத்ர பாஷ்யமவிலம்பிதம் வ்ரஜே:

ஸுமதேன யோஜய கவே ஸ்ருதி ஸ்ம்ருதீ: ||8-46 

ஹே கற்றறிந்த மத்வாசார்யரே! இத்தகைய கெட்டவர்களின் துர்செயல்களை சரிப்படுத்தி, நம் பக்தர்களை அவர்களின் சரியான இலக்கினை அடையச் செய்ய, நீங்கள், ஸ்ரீவேதவ்யாஸர் நினைத்ததான சரியான அர்த்தத்தில், பிரம்மசூத்திரத்திற்கு ஒரு பாஷ்யத்தை இயற்ற வேண்டும். 

கலி கால காலித குணே தராதளே

சுஜனோ நூனமதுனாஸ்தி யோக்ய தீ: |

பரதத்வ வர்ணனமயோக்யதா வதே

நனு ஹவ்ய தானமிவ நிந்த்யதே ஷுனே || 8-49 

இந்த கலிகாலத்தில் தத்வஞானத்திற்கு அருகதையானவர் யாருமில்லை. அருகதையற்றவர்களுக்கு வழங்கப்படும் உபதேசம் வீணாகும். 

மதமித்ய மஹிதம் மஹதோ:

அபிதாய பாடமிதி தீர மதி: |

அனயோர் நியோகமதிரோ பிதவான்

ஸ்வ ஷிரஸ்யனன்ய ஸுவஹம் ப்ரணமன் || 8-53 

ஸ்ரீமன் நாராயணனின் மற்றும் ஸ்ரீவேதவ்யாஸரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட, திடமான மனதுடைய ஸ்ரீமத்வாசார்யர், இருவரையும் பக்தி மரியாதையுடன் வணங்கி, அவர்களது ஆணையை, வேறு யாராலும் செய்ய முடியாத செயலை, சிரமேற்கொண்டார். 

இத்துடன் மத்வ விஜயத்தின் எட்டாம் சர்க்கத்தின் விஷயம் முடிவடைந்தது. அடுத்த ஸ்லோகத்திலிருந்து ஒன்பதாம் சர்க்கத்தின் விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment