Tuesday, March 22, 2022

ஸ்லோகம் #28: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #28: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 28]

தனய ஷுகனிகு3 தொ3ரெயதி3 லாலனெய படெ33 மஹாத்மரனு அதி

வினயதி3ந்தா33ரிஸித3ரு முனிஜனரு விஸ்மயதி3 |

வனஜஸம்ப4 தனகெ3 ப்ரியதம ஜனகெ1 ஹரிஸத3னத3லிருவ பரி

முனிவரரு யதிவரரு பெ3ளகித3ராஸ்ரமவன்னெல்ல || 28 

தனய ஷுகனிகு - மகனான ஸுகருக்கும்; தொரெயதிஹ - கிடைத்திராத; லாலனெய படெத - அன்பினைப் பெற்ற; மஹாத்மரனு - ஸ்ரீமதாசார்யரை; முனிஜனரு - அங்கிருந்த முனிவர்கள்; விஸ்மயதி - மெய்மறந்து; அதி வினயதிந்தாதரிஸிதரு - மிகுந்த மரியாதையுடன் கௌரவித்தனர்; முனிவரரு - ஸ்ரீவேதவ்யாஸர்; யதிவரர் - ஸ்ரீமதாசார்யர்; பெளகிதாஸ்ரமவன்னெல்ல - ஆசிரமத்தில் பரமமங்கள ஸ்வரூபராக இருந்து, ஒளிர்வித்தனர்; வனஜஸம்பவ - பகவந்தன், தனகெ ப்ரியதம ஜனகெ - தனக்கு பிடித்தமான மக்களுக்கு; ஹரிஸதனதலிருவ பரி - மோட்சத்தையே கொடுப்பதாக இருந்தது (இந்தக் காட்சி). 

ஸ்ரீவேதவ்யாஸரின் மற்றும் ஸ்ரீமத்வரின் ஆலிங்கனக் காட்சியை தொடர்ந்து விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

மகனான ஸுகருக்கும் கிடைத்திராத அன்பினைப் பெற்ற ஸ்ரீமதாசார்யரை, அங்கிருந்த முனிவர்கள் மெய்மறந்து, மிகுந்த மரியாதையுடன் கௌரவித்தனர். ஸ்ரீவேதவ்யாஸர், ஸ்ரீமதாசார்யர் இருவரும் அந்த ஆசிரமத்தில் பரமமங்கள ஸ்வரூபராக இருந்து ஒளிர்வித்தனர். பகவந்தன், தனக்கு பிடித்தமான மக்களுக்கு, மோட்சத்தையே கொடுப்பதாக இருந்தது இந்தக் காட்சி. 

மத்வவிஜயத்தில் 7-55 ஸ்லோகத்தில் வரும் விஷயம் இதுவே. 

இதமாப ஷுகோsபி லாளனம் ஸமக்ரம் ஜகதாம் பிது: பிது: |

அலபிஷ்ட யதேஷ தன்ய இத்யதி கௌதூஹலமாபி தாபஸை: ||7-55 

ஸஹபோகத்தைப் போன்றதான, மகனான ஸுகாசார்யருக்கும்கூட கிடைக்காத ஸ்ரீவேதவ்யாஸரின் ஆலிங்கனத்தை, ஸ்ரீமதாசார்யர் பெற்றதைக் கண்டு, அங்கிருந்த முனிவர்கள் மிகவும் வியந்தனர். 

ஆஸ்யதாமித்யுதீர்யோபவிஷ்டே

ஸத்யவத்யா: ஸுதே ஸத்யவாசி |

நந்தயன் மந்த ஹாஸாவலோகை:

தான் முனீந்த்ரானிஹோபாவிஷத் : ||7-57 

புன்னகையுடன் கூடிய முகத்தைக் கொண்டவரான ஸ்ரீமதாசார்யரை, ஸத்யவதியின் மகனான ஸ்ரீவேதவ்யாஸர், தன் அருகில் அமரச் செய்தார். 

சஞ்ஞானாயானந்த விக்ஞான மூர்த்தி ப்ராப்தௌ ப்ருத்வீமாஸ்ரமே தத்ர தாவத் |

ஜாஜ்வல்யதே விஷ்ணு வாயுஸ்ம தேவௌ வேதவியாசானந்த தீர்த்தாபிதானௌ || (7-59) 

ஞானகாரியத்திற்காக அவதரித்து சஜ்ஜனர்களுக்கு ஞானோபதேசம் செய்து காப்பாற்ற வந்த இந்த இருவரும் விஷ்ணுவாயுகள். பூமியில் மக்களுக்கு தத்வஞானத்தை போதிப்பதற்கு அவர்களை கடைத்தேற்ற அவதாரம் செய்த ஹரிவாயுகள், ஆசிரமத்தில் பரமமங்கள ஸ்வரூபராக காட்சியளித்தனர். இந்த இருவரின் சந்திப்புக் காட்சி, மோட்சத்தையே தரவல்லதாக இருந்தது. 

இத்துடன் மத்வ விஜயத்தின் ஏழாம் சர்க்கத்தின் விஷயம் முடிவடைந்தது. அடுத்த ஸ்லோகத்திலிருந்து எட்டாம் சர்க்கத்தை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***

No comments:

Post a Comment