Saturday, March 19, 2022

ஸ்லோகம் #25: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #25: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 25]

துஹிமஹிதுதி3யல்லி ராஜிஸுதிஹ 33ரிஷண்டக3 மத்4யதி3

அஹிபதிய போ433லி ரமிப ஸ்ரீபதிய தெரதி3 |

3ஹுள தேஜவ நோடி33ரு பூ4 ஸுரர ஸமீபகெ 3ரலு தாபஸ

நிவஹ விஸ்மயதி3ந்த3 நோடி33ராவரிவரெந்து3 ||25 

துஹிமஹி - இமாலயத்தின்; துதியல்லி - அடியில்; ராஜிஸுதிஹ - வளர்ந்திருக்கும்; பதரிஷண்டகள மத்யதி - பதரி மரங்களின் கூட்டங்களின் நடுவில்; அஹிபதிய - சேஷதேவரின்; போகதலி ரமிப - சேவையில் வீற்றிருக்கும்; ஸ்ரீபதிய தெரதி - ஸ்ரீபதியான வேதவ்யாஸரிடம் (வந்தார்); பஹுள தேஜவ நோடிதரு - அபாரமான தேஜஸ்ஸினை கண்டனர்; பூ ஸுரர ஸமீபகெ பரலு - முனிவர்களின் அருகில் வர; தாபஸ நிவஹ - அந்த ஞானிகளின் குழு; விஸ்மயதிந்த - மனம் மயங்கியவாறு; ஆவரிவரெந்து - இவர் யாராக இருக்கும் என்று; நோடிதரு - பார்த்தனர். 

மத்வ விஜயம் ஏழாம் சர்க்கத்தில் வரும் ஸ்ரீமதாசார்யர் ஸ்ரீவேதவ்யாஸரை தரிசனம் செய்த படலத்தை, இந்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இமாலயத்தின் அடியில், வளர்ந்திருக்கும் பதரி மரங்களின் கூட்டங்களின் நடுவில், சேஷதேவரின் சேவையில் வீற்றிருக்கும் ஸ்ரீபதியான வேதவியாஸரிடம் வந்தார் ஸ்ரீமதாசார்யர். அங்கிருந்த முனிவர்கள், இவருடைய அபாரமான தேஜஸ்ஸினைக் கண்டு, மயம் மயங்கியவாறு, இவர் யாராக இருக்கும் என்று பார்த்தனர். 

அத ஹைமவதே தடாந்தரெ

பதரி ஷண்ட விசேஷ மண்டிதம் |

பரமாஸ்ரமமாஸ்ரயம் ஸ்ரிய:

ஸகலக்ஞ: ததர்ஷ விஸ்ருதம் ||7-1 

இமாலயத்தின் அனந்தமடத்திலிருந்து இன்னும் முன்னேறினார் பூர்ணப்ரக்ஞர். பதரி மரங்களினால் சூழப்பட்ட வேதவியாசரின் ஆசிரமத்தைக் கண்டார். இதுவே உத்தர-பத்ரி. இந்த ஆசிரமம் பற்பல மரங்களினால் சூழப்பட்டு, பசு-பறவைகளினால் கூடி, வேதங்களைப் படித்த அறிஞர்களின், ரிஷிகளின்  இருப்பிடமாக இருந்தது. எந்தவொரு குறைகளும் இல்லாத இந்த தபோபூமி, எப்போதும் ஸ்ரீஹரியிடம் வேண்டியவாறு இருக்கும் பரமஹம்ஸர்களால், மகரிஷிகளால் தன் அழகினைப் பெற்றது. சுக, ஹம்ஸ முதலான பறவைகள் இங்கு வசித்திருந்தன. பொறாமை, கர்வம், காமம், கோபம் முதலான தோஷங்கள் இல்லாத ஞானிகள் இருந்து, ’வைகுண்டமிவாச்யுதாலயம் (7-4), வைகுண்டத்திற்கு ஈடான ஸ்ரீஹரி வசிக்கும் பரந்தாம என்றே அழைக்கப்பட்டது. 

கனகாதுல தால சன்னிப: கமலாக்ஷோ விமலேந்து சன்முக: |

கஜராஜ கதிர்மஹாபுஜ: ப்ரதியான் கோயமபூர்வ புருஷ: || (7-6) 

கஜரானைப் போல கம்பீர நடை. தங்கத்தினாலான பனை மரம் போன்ற உயரம், தாமரைக் கண்கள், முழு நிலவின் ஒளியைப் போன்ற முகம், ஆஜானுபாஹு உருவம், பயம் சோர்வு இல்லாதவர், அனைத்து லட்சணங்களையும் கொண்டவர், தண்ட கமண்டலத்தைப் பிடித்தவர், காஷாய வஸ்திரம் தரித்தவர் என வரும் இவர் யாராக இருக்கக்கூடும்? என்று அங்கிருந்த முனிவர்கள் வியந்தனர். 

மத்வ விஜய ஏழாம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

மனஸா மானயன் முக்2யகு3ரும் வ்யாஸம் ஹ்ருத3ம்ப3ரே |

அபஷ்யஸ்சக்ஷுஷாsப்யத்ர ஸ்தி2தம் முனிக3ணைர் வ்ருதம் ||8|| 

பெரிய பதரிக்குச் சென்று, அங்கு அனேக முனிவர்களின் நடுவில் அமர்ந்திருந்த, முக்கிய குருகளான வேதவியாசரைக் கண்டு, அந்த வியாசரின் அனேக குணரூபங்களை தம் மனதில் சிந்தித்தார். 

விசார: ஸாத4னௌக4ஸ்ய ஞேயரூப ப்ரபோ34னம் |

உபாஸாயாமதிஷயோ தா3ர்ட்4யம் 4க்திர்ஹரௌ கு3ரௌ ||19|| 

ஏழாம் சர்க்கம் படிப்பதால் வரும் பலன் : பிம்பரூபியின் ஞானம் 

ஸ்ரீமதாசார்யர் தரிசிக்கும் ஸ்ரீவேதவ்யாஸரின் தோற்ற வர்ணனையை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

****


No comments:

Post a Comment