Tuesday, March 29, 2022

ஸ்லோகம் #35: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #35: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 35]

ஸரிது3 கோ3தா3வரிய தடத3லி முரிது1 ஷட்ஸமயக3 ஸுலப4லி

ஷரணு ஹொடெ3ஸித3ரெல்லர விது3ஷர ஸபெ4ஸபெ43ளல்லி |

ஹிரிய ஷோப4னப4ட்டரலி 3லு ஸரளதெய தோருதலி பா4ஷ்யத3

திருளுக3 தோரித3ரு யதிவரராதனிகெ3 3யதி3 ||35 

ஸரிது - மேலும் பயணத்தில்; கோதாவரிய தடதலி - கோதாவரி நதிக்கரைக்கு வந்து, அங்கு; ஷட்ஸமயகள = (சார்வக முதலான) ஆறு தத்வங்களையும்; ஸுலபலி - சுலபமாக; முரிது - கண்டித்து, வென்று; ஸபெஸபெகளல்லி - அனைத்து சபைகளிலும்; விதுஷர - கற்றறிந்தவர்களை; எல்லர - அனைவரையும்; ஷரணு ஹொடெஸிதரு - வென்று காலில் விழ வைத்தார். யதிவரரு - ஸ்ரீமதாசார்யர்; தயதி - மிகவும் அன்புடன்; ஹிரிய ஷோபனபட்டரலி - பண்டிதரான ஷோபனபட்டருக்கு; பலு ஸரளதெய தோருதலி - மிகவும் கருணையைக் காட்டியவாறு; பாஷ்யத - பாஷ்யத்தின்; திருகுகள தோரிதரு - ரகசியங்களை விளக்கினார். 

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீமதாசார்யரின் திக்விஜயத்தை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஸ்ரீமதாசார்யர், தமது பயணத்தில், கோதாவரி நதிக்கரைக்கு வந்து, அங்கு சார்வக முதலான ஆறு தத்வங்களையும் சுலபமாக கண்டித்து வென்றார். அனைத்து சபைகளிலும், கற்றறிந்தவர்களையும் வென்று காலில் விழ வைத்தார். பண்டிதரான ஷோபனபட்டருக்கு, மிகவும் கருணையைக் காட்டியவாறு, அன்புடன், பாஷ்யத்தின் ரகசியங்களை விளக்கினார். 

தத்ர தேவமபிவந்த்ய யாதவான்

ஸ்வாமினோ வசன கௌரவாத்த்ருதம் |

ஸானு கோ விவித பூரதீத்ய

கோதாவரி தடமகாதலேஷதீ: ||9-14 

பூர்ணப்ரக்ஞர் தமது சிஷ்யர்களுடன் அனந்த மடத்திலிருந்து கிளம்பி, பயணத்தில் கோதாவரி நதிக்கரைக்கு வந்தார். 

ப்ராக்ஞ வித்தமமயமாப்துமாகதை:

பண்டிதைர்த்வினவ ஷாகிபி: ஸ்ருதீ: |

ப்ரஸ்துதா அபிததௌ பரீக்ஷகை:

ஷட் தத்ர ஸமயானகண்டயன் || 9-15 

தே ப்ருதக் ப்ருதகமு ஸ்வ ஷாகயா

தர்ஷனேன பரீக்ஷ்ய நிர்ஜிதா: |

ஸர்வவித் த்வமஸி முக்யத: கவே

நாஸ்தி தே ஸத்ருஷ இத்யதாப்ருவன் ||9-16 

ஆசார்யர். ரிகாதி அனைத்து வேதங்களிலும் வல்லவர்களான சில பண்டிதர்கள், ஆசார்யரை சோதிக்க வேண்டி சில வேத மந்திரங்களைக் கூறினர். ஆசார்யர் அந்த வேத மந்திரங்களை சரியாக உச்சரித்து, அவற்றின் பொருளை விளக்கியவாறு, சார்வக முதலான ஆறு தத்வங்களையும் கண்டித்தார். ‘ஆசார்யரே, நீங்கள் சர்வக்ஞர். உங்களுக்கு சமமானவர் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லைஎன்று அந்த பண்டிதர்கள் புகழ்ந்தனர். 

ஷோபனபட்டர், பத்மனாப தீர்த்தராக ஆகுதல் 

மத்வ விஜயத்தில் ஷோபன பட்டர், ஆசார்யரை சந்திக்கும் படலம் 9-17 ஸ்லோகத்திலிருந்து 9-27 ஸ்லோகம் வரை வர்ணிக்கப்பட்டுள்ளது. 

யஸ்த்ரயீ ஸகல பக் சிக்ஷக:

தத்ர ஸம்ஸதி வரிஷ்ட ஸம்மத: |

ஷோபனோப பத பட்ட நாமக: பூர்ண

ஸங்ஞாமன மன்முஹுர்முதா ||9-17 

அப்ரமேய மதி ஷாஸ்த்ரமீத்ருஷம்

யஸ்த்வமஜத்யுபனதம் ஸு துர்லபம் |

தஸ்ய துல்ய மதிரேஷ துர்ஜனோ

நாதவாsஸ்ய ஸத்ருஷோsஸ்தித நீச தீ: || 9-22 

அந்த சபையில், தர்க்கத்தில் வல்லவரான, வேத புராண பாரதம் முதலான சாஸ்திரங்களில் சிறந்தவரான, சோபன பட்டர் என்னும் பண்டிதர் இருந்தார். மத்வரின் முக-கமலத்திலிருந்து வெளிவந்த பாஷ்யம் என்னும் அமிர்தத்தைப் பருகி, மத்வர் கூறிய தத்வவாதத்திற்கு மனதைப் பறிகொடுத்து, அவரின் சிஷ்யரானார். பின்னர் மத்வரின் சித்தாந்த பிரசாரத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். பின்னர் ஆசார்யரிடம் உபதேசம் பெற்று, பத்மனாப தீர்த்தர் ஆகி, துர்வாதிகளைக் கண்டித்தார். மத்வசாஸ்திரத்தை சிறந்ததான வலம்புரி சங்கிற்கு ஒப்பிட்டு, அந்த சித்தாந்தத்தை பிரசாரம் செய்யத் துவங்கினார். இவரே இந்த சித்தாந்த சாம்ராஜ்யத்தின் முதல் சிஷ்யரும் ஆனார். 

சுண்ணாம்பு செய்பவர் வலம்புரி சங்கின் சிறப்பினை அறியாமல் அது பயன்படாது என்று தூக்கி எறிவதைப் போல, மத்வ சாஸ்திரத்தின் சிறப்பினை அறியாமல் அதை நிராகரிப்பவன் அதமன் (தாழ்ந்தவன்). அவனைவிட குறைந்த புத்தி உள்ளவன் வேறு யாருமில்லை. வலம்புரி சங்கின் சிறப்பை அறிந்த இன்னொருவன், அதை நல்ல விலைக்கு விற்று லாபத்தை அடைவான். ஆனால் அவனும் அந்த சங்கின் முழுமையான பலனை அனுபவிக்கவில்லை. இதுபோல் மத்வ சாஸ்திரத்தை பின்பற்றி அதிலிருந்து கிடைக்கும் ஞான, பக்தி, ஸ்ரீஹரியின் அருளிற்கு முயலாமல், வெறும் பணம் மற்றும் புகழுக்காக இந்த சாஸ்திரத்தை பயன்படுத்துபவன் முட்டாள் ஆவான். 

வலம்புரி சங்கின் முழுமையான பலனை அறிந்த ஒருவன், அதை தனது பூஜையில் வைத்து பூஜித்து, நற்பலன்களைப் பெறுவது போல், கல்பவிருட்சத்தைப் போலிருக்கும் மத்வ சாஸ்திரத்தை சிரத்தையுடன் படித்து, அதன் நற்பயனான ஸ்ரீஹரியின் அருள் மற்றும் அதிலிருந்து மோட்சத்தைப் பெறுகிறான். ’பாக்ய தெய்வமிஹ யோக்யதானுகம் |’ (9-23) - ஸ்ரீஹரி அவரவர்களின் தகுதிக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறான். சோபன பட்டர் இவ்வாறு வலம்புரி சங்கின் ஒப்பீட்டினைக் கொடுத்து, மத்வ மதத்தின் சிறப்பினை விளக்கி, சபையினரை ஆனந்தப்படுத்தினார். 

இப்படி மத்வசாஸ்திரத்தின் அருமை பெருமைகளை எவ்வளவு சிரத்தை பக்தியுடன் அறிவரோ அவ்வளவு புருஷார்த்தங்களை, ஞான பக்திகளை அடைவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று சொல்லி பட்டர் மக்களை சமாதானம் செய்தார். இந்த சித்தாந்தத்தை தமது பாஷ்யத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஸ்ரீமதாசார்யர், ருத்ர, இந்திர, பிருஹஸ்பதி ஆசார்யர்களாலும் பூஜிக்கப்படுகிறார். சோபனபட்டர் (பத்பனாப தீர்த்தர்), மத்வ சாஸ்திரத்தை (த்வைத சித்தாந்தத்தை) அனைத்து பண்டித சபைகளில் பரப்பியதாலேயே, ஸ்ரீமதானந்த தீர்த்தர், அவரை பீடத்தில் அமர்த்தி சித்தாந்தத்தை பரப்புவதற்காக நியமித்தார் என்று அறியலாம். 

ஸ்ரீமதாசார்யர், தமது குருகளுக்கு அருளியதை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.

***

No comments:

Post a Comment