Thursday, March 10, 2022

ஸ்லோகம் #16: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #16: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 16]

ரஜதபுரவல்லப4ன ஸேவெகெ3 விஜயவெம்பு3வ தோருவந்த3தி3

பு4ஜபிடி3து3 தா கொட்டநீத1னு அச்யுதேக்‌ஷரிகெ3 |

அஜிதனாக்3ஞெய படெ33 ஸுரநதி3 பிஜயிஸித3ளாஸ்த2ளகெ கீர்த்திய

த்4வஜவு ஹாரிது1 வாத33லி ஸுஜனார்த்தி1 மரெயாய்து1 ||16 

ரஜதபுர வல்லபன - உடுப்பியின் தலைவனான அனந்தேஸ்வரனுக்கு; ஸேவெகை - செய்த சேவைக்கு; விஜயவெம்புவ தோருவந்ததி - தக்க பலன் கிடைத்தது என்பதைப் போல; அச்யுததேக்‌ஷரிகெ - அச்யுதப்ரேக்‌ஷரின்; புஜபிடிது - தோள்களைப் பிடித்து; தா கொட்டநீதனு - இவனை நான் கொடுத்தேன்; அஜிதனாக்ஞெய படெத - ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற; ஸுரநதி - கங்கை; பிஜயிஸிதளாஸ்தளகெ - அனந்த ஸரோவரத்தில் பாய்ந்தாள்; வாததலி - வாதங்களில்; ஸுஜனார்த்தி - சஜ்ஜனர்களின் சந்தேகங்கள் / குழப்பங்கள்; மரெயாய்து - மறைந்தன; கீர்த்திய த்வஜவு - வெற்றிக்கொடி; ஹாரிது - பறந்தது. 

வாசுதேவன் பூர்ணபோதர் ஆன சமயத்தில் நடந்த விஷயங்களை இங்கே விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

உடுப்பியின் தலைவனான அனந்தேஸ்வரனுக்கு செய்த சேவைக்கு தக்க பலன் கிடைத்தது என்பதைப் போல, அச்யுதப்ரேக்‌ஷரின் தோள்பிடித்து, இவனை நான் உனக்குக் கொடுத்தேன் (என்று ஒரு பிராமணர் மூலம் சொல்ல வைத்தான்). ஸ்ரீஹரியின் ஆணையைப் பெற்ற கங்கை, அனந்த ஸரோவரத்தில் பாய்ந்தாள். வாதங்களில் சஜ்ஜனர்களின் சந்தேகங்கள் / குழப்பங்கள் மறைந்தன. பூர்ணபோதரின் வெற்றிக்கொடி எங்கும் பறந்தது. 

இந்த சந்தர்ப்பத்தை மத்வவிஜயத்தில் 4-37, 4-38 ஸ்லோகங்களில் பார்க்கலாம். 

ஸ ரூப்ய பீடாலய வாஸினே யதா

நனாம நாதாய மஹா மதிர்முதா |

ததாsமுனாsக்ராஹி நர ப்ரவேஷினா

புஜே புஜேனssஷு புஜங்க ஷாயினா ||4-37 

சிராத் ஸு தத்வம் புபுத்ஸுனா த்வயா

நிஷேவணம் மே யதகாரி தத் பலம் |

இமம் ததாமீத்யபிதாய ஸோமுனா

ததா பிரணீய ப்ரததேsச்யுதாத்மனே ||4-38 

(4-37) மிக்க மகிழ்ச்சியுடன் பூர்ணபிரக்ஞர் அனந்தாஸனனை விழுந்து வணங்கியபோது, அனந்தாஸனன் ஒரு பிராமணரில் புகுந்து, பூர்ணபிரக்ஞரை எழுப்பி, அவரை அச்யுதப்ரேக்‌ஷரிடம் ஒப்படைத்து, (4-38) பலகாலமாக எனக்கு நீங்கள் செய்த சேவையின் பலனாக இந்த தக்க பரிசினை நான் உங்களுக்கு அளிக்கிறேன் என்று கூறினான். 

அனந்த ஸரோவரத்தில் கங்கை பாய்ந்த விஷயம், மத்வவிஜயத்தில் 4-40, 41, 42 ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

இதஸ்த்ருதீயே திவஸே த்யு நிம்னகா

த்வதர்த்தமாஸ்மாக தடாகமாவ்ரஜேத் |

அதோ ந யாயா இதி தம் ததாsவதத்

ப்ரவிஷ்ய கஞ்சித் கருணா கரோ ஹரி: ||4-41 

ஸ்ரீமன் நாராயணன் ஒரு பிராமணரில் புகுந்து, பூர்ணப்ரக்ஞரிடம் இவ்வாறு கூறினார். இன்றிலிருந்து மூன்றாம் நாள், பவித்ரளான கங்கை உங்களுக்காக இந்த ஸரோவரத்தில் பாய்வாள். 

ததாஞயோபாகத ஜான்ஹவி ஜலே

ஜனோsத்ர ஸஸ்னௌ ஸஹ பூர்ண புத்தினா |

தத: பரம் த்வாதஷ வத்ஸராந்தரே

ஸதாssவ்ரஜேத் ஸா ததனுக்ரஹாங்கினீ ||4-42 

பகவந்தனின் வாக்கின்படி, அனந்த ஸரோவரத்தில் கங்கை பாய்ந்தபோது, பூர்ணப்ரக்ஞர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த ஸரோவரத்தில் ஸ்னானம் செய்தனர்.  

இத்துடன் மத்வ விஜய நான்காம் சர்க்கம் முடிந்தது. அடுத்த ஸ்லோகத்தில் ஐந்தாம் சர்க்கத்தின் விஷயங்கள் துவங்குகின்றன. 

பின், பூர்ணபோதர், ஆனந்ததீர்த்தர் ஆன விஷயத்தை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment