ஸ்லோகம் #27: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ
இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்
தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[ஸ்லோகம் 27]
ப4குதியலி பா3கி3த3ரு
ஷிரவனு ஸுக்ருதஷாலிக3ளாக்ஷணதி3 நகு3
முக2தி3ந்த3 ப3ந்தெ3த்தித3ரு வ்யாஸரு ப்ரதம ப4குதரனு |
ஷுகபிதரு ப4குதாக்3ரணிக3ளீ ஸுக2கராலிங்க3னத3லிருதிரெ
ப்ரகடவாயிது ரவிஸுதெய ஸுரநதி3ய ஸங்க3மவு ||27
ஸுக்ருதஷாலிகளு - தன்யன் ஆன ஸ்ரீமதாசார்யர்; ஆக்ஷணதி - (ஸ்ரீவேதவ்யாஸரை கண்ட) அந்த நொடியில்; பகுதியலி - மிகவும் பக்தியுடன்; ஷிரவனு பாகிதரு - சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்; வ்யாஸரு - ஸ்ரீவேதவ்யாஸர்; நகுமுகதிந்த - புன்னகையுடன் கூடிய முகத்தினால்; ப்ரதம பகுதரனு - தன் முதல் (உத்தம) பக்தரை; வந்தெத்திதரு - வந்து எழுப்பினார்; ஷுகபிதரு - ஸுக ரிஷியின் தந்தையான (வேதவ்யாஸர்); பகுதராக்ரணிகள - பக்தர்களில் சிறந்தவரின் (ஸ்ரீமத்வர்); ஈ ஸுககராலிங்கனலிருதிரெ - இப்படியான சுகமான அரவணைப்பில் இருப்பது; ரவிஸுதெய - சூரியனின் மகளான யமுனை; ஸுரநதிய - கங்கையின்; ஸங்கமவு - சங்கமம்; ப்ரகடவாயிது - போல இருந்தது.
ஸ்ரீமத்வரின் மற்றும் ஸ்ரீவேதவ்யாஸரின் சந்திப்பினை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
தன்யர் ஆன ஸ்ரீமதாசார்யர், ஸ்ரீவேதவ்யாஸரைக் கண்ட அந்த நொடியில், மிகவும் பக்தியுடன், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ஸ்ரீவேதவ்யாஸர் புன்னகையுடன் கூடிய முகத்தினால், தன் முதல் (உத்தம) பக்தரை வந்து எழுப்பினார். ஸுக ரிஷியின் தந்தையான வேதவ்யாஸர் மற்றும் பக்தர்களில் சிறந்தவரான ஸ்ரீமத்வர், இப்படியான சுகமான அரவணைப்பில் இருப்பது, சூரியனின் மகளான யமுனை மற்றும் ஸுரநதியான கங்கையின் சங்கமத்தைப் போல இருந்தது.
வேதவ்யாஸ-மத்வரின் சந்திப்பு, மத்வவிஜயத்தில் 7-49 ஸ்லோகத்திலிருந்து வர்ணிக்கப்பட்டுள்ளது.
வேதவேத்யரான, தியானத்தால் அடைபவரான வேதவியாசரை, ஸ்ரீமதாசார்யர் நெருங்கினார். குருபக்தியுடன், கலங்கிய கண்களுடன், பக்தி பரவசத்துடன், கைகளை கூப்பியவாறு ஸ்தோத்திரம் செய்தார். ‘வினயாபரணேன பூஷித: ... ப்ரணநாம பாக்யவான் ‘ (7-50) - புண்யபுருஷர், பரமபாவன சரிதரான மத்வர், சிறந்தவரான வியாசரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
நற்குணங்களைப் பெற்றவரான மத்வரை ‘கரயோர்யுகளேன வல்குனா தமுதஸ்தாபயதாஷு பாதினா’ (7-51) வேதவியாசர் உடனடியாக, மென்மையான தமது கைகளினால் தொட்டு எழுப்பினார். அதே கைகளினால் அவரை இறுகத் தழுவினார். வேதங்களின் தலைவரான வியாசரின், தசபிரமதிகளான மத்வரின் இந்த சந்திப்பு அற்புதக் காட்சியாக இருந்தது.
யமுனாம்யுதவாஸ ஊர்ஜிதோ
யதி ஜாம்பூனத வாரி ஸம்வ்ரஜேத் |
கனக த்யுதி மத்வ ஸங்கவான்
உபமீயேத ஸ தேன நீல பா: ||7-53
நீல வண்ணம் கொண்ட ஸ்ரீவேதவ்யாஸரும்; தங்கமயமான ஸ்ரீமத்வரும் கட்டித் தழுவிக் கொண்ட காட்சி, நீல யமுனையும், தங்க கங்கையும் சேர்ந்து பாய்ந்ததைப் போல இருந்தது.
இந்த காட்சியை மேலும் அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்ந்து விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.
***
No comments:
Post a Comment