Friday, March 11, 2022

ஸ்லோகம் #17: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #17: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 17]

வேத3வித்யா ராஜ்யத3லி பரமாத3ரத3லபி4ஷேகவீதகெ3

கெ3ய்த3ரச்யுத மதிய தீமத்3ரரொந்து3 தி3|

பா34பா3ரத3 மோத3வனு தி3ன ஸாதி4ஸுவ ஷாஸ்த்ரக3ளானு ரசிஸலு

மோத3தீர்த்த2 ஸுனாமவிவரிகெ3 ஸார்த்த2கவாயிது ||17 

ஒந்து தின - ஒரு நாள்; அச்யுதமதி யதி - அச்யுதப்ரேக்‌ஷர்; ஈதகெ - பூர்ணபோதருக்கு; வேதவித்யா ராஜ்யதலி - வேதாந்த சாம்ராஜ்யத்தில்; பரமாதரதலி - மிகவும் பக்தி / மரியாதையுடன்; அபிஷேக கெய்தரு - பட்டாபிஷேகம் செய்தார்; பாதபாரத - சந்தேகம் வராத; மோதவனு - மகிழ்ச்சியை; தின ஸாதிஸுவ - தினமும் கொடுக்கக்கூடிய; சாஸ்த்ரகளானு - சாஸ்திரங்களை இவர்; ரசிஸலு - இயற்றுவதற்கு; மோததீர்த்த - மோத தீர்த்த / ஆனந்ததீர்த்த; ஸுநாமவிவரிகெ - என்னும் நற்பெயர் இவருக்கு; ஸார்த்தகவாய்து - பொருத்தமாகவே அமைந்தது. 

சன்யாச ஆசிரமம் ஏற்றுக்கொண்டு பூர்ணபோதர் ஆனவர், பட்டத்தில் ஏறி ஆனந்ததீர்த்தர் ஆனதை இங்கு விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

ஒரு நாள், அச்யுதப்ரேக்‌ஷர் பூர்ணபோதருக்கு வேதாந்த சாம்ராஜ்யத்தில் மிகவும் பக்தி மரியாதைகளுடன் பட்டாபிஷேகம் செய்தார். சந்தேகமற்ற, தினமும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய சாஸ்திரங்களை இவர் இயற்றுவதற்கு கொடுத்த ஆனந்ததீர்த்த என்னும் பெயர் பொருத்தமாகவே இருந்தது.

மத்வ விஜய 5ம் சர்க்கத்தின் துவக்கத்தில் - ஸ்ரீபூர்ணபிரக்ஞருக்கு வேதாந்த சாம்ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது வர்ணிக்கப்பட்டுள்ளது.  

வேதாந்த சாம்ராஜ்யத்தில் ஸ்ரீமன் மத்வாசார்யரை அதிபதி ஆக்கவேண்டுமென்று விரும்பிய அச்யுதப்ரேக்‌ஷர், அதனை நிறைவேற்றி அவருக்கு ஆனந்ததீர்த்தஎன்று பெயரிட்டார். 

ஆனந்த ரூபஸ்ய பரஸ்ய பாத்ரதீ: ஆனந்த சந்தாயிசு சாஸ்திர க்ருத்சயத் |

ஆனந்த தீர்த்தேதி பதம் குருதிதம் பபூவ தஸ்யாத்யனுரூப ரூபகம் || (5-2) 

ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய சாஸ்திரங்களைப் படைக்கக்கூடியவர், ஆனந்தரூபியான ஸ்ரீஹரியிடம் எப்போதும் தியானத்தில் இருப்பவர் மற்றும் ஆனந்தரூபனான ஸ்ரீஹரிக்கு ப்ரியமானவர் - ஸ்ரீபூர்ணப்ரக்ஞர். ஆகையாலே, அச்யுதப்ரேக்‌ஷரால் கொடுக்கப்பட்ட ஆனந்ததீர்த்தஎன்னும் பெயர் மிகப் பொருத்தமானதாகும். இது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் மத்வஎன்னும் பெயருக்கு சமமான பெயரே ஆகும். 

ஸ்ரீஸ்ரீபாதராஜர், மத்வ நாமாவில், மானநிதி மத்வாக்ய நெந்தெனிஸித (23) என்றார். அதாவது, 

வாயுதேவர் மத்யகேஹரிடம் அவதரித்தபோது அவருக்கு வைத்த பெயர் வாசுதேவ’. பிறகு சன்யாசம் வாங்கியபோது பெற்ற பெயர் பூர்ணப்ரக்ஞர்’. வேதாந்த சாம்ராஜ்யத்தில் அமர்ந்தபோது குரு கொடுத்த பெயர் ஆனந்ததீர்த்தர்’. உலகத்தில் புகழ்பெற்றது மத்வாசார்யர் என்ற பெயரினால். இதன் பின்னணி மற்றும் சிறப்பினையே ஸ்ரீஸ்ரீபாதராஜர் மானநிதிமற்றும் மத்வாக்யஎன்னும் சொற்களைப் பயன்படுத்தி சொல்லியிருக்கிறார். 

மத்வ விஜய ஐந்தாம் சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றி மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

வியாக்யான பா4ஷ்யம் மாயிக்ருதம் ஞாபயன் தஸ்ய து3ஷ்டதாம் |

ஸூசயன்னுத்தரம் பா4ஷ்யம் ஜிகா3ய ப்ரதிவாதி3ன: ||6|| 

ஸ்ரீசங்கராசார்யரால் இயற்றப்பட்ட பாஷ்யத்தை விளக்கியவாறு, அதில் இருந்த தவறான கருத்துகளை, பிழைகளை ஸ்ரீமதாசார்யர் சுட்டிக் காட்டினார். தாம் அடுத்து பிரம்மசூத்ரங்களுக்கு மிகப் பொருத்தமான பாஷ்யத்தை இயற்றப் போகிறோம் என்று குறிப்பிட்டவாறு, வாதத்திற்கு வந்த அனேக பிரதிவாதிகளை வென்றார். 

ஐந்தாம் சர்க்கம் : வேதாந்த சாம்ராஜ்யத்தில் அபிஷேகம் 

சர்வக்ஞ பீடத்தில் ஏறிய ஸ்ரீமதானந்ததீர்த்தரின் வாதத் திறமைகளை அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர்.

 ***


No comments:

Post a Comment