Saturday, March 12, 2022

ஸ்லோகம் #18: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #18: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 18]

ஹேயவாதக3ளரித கெலரனு ந்யாயஷாஸ்திரதி3 சதுரரனு ஹொஸ

ந்யாயக3ள தோருதலி கெ3த்33ரு அதிஸுலப43லெ |

ஜீயபூர்ணப்ரமதி14ரெயொள ஜீயரெனிஸித3 பு3த்3தி3ஸாக3

ப்ரேயனீதகெ3 வாதி3ஸிம்ஹன கெ3லிது3 தா மெரெத3 ||18 

ஹேயவாதகளரித கெலரனு - மாயாவாதங்களை அறிந்த சிலரை; ந்யாய ஷாஸ்திரதி சதுரரனு - நியாய சாஸ்திரங்களில் பண்டிதர்களை; ஹொஸ ந்யாயகள தோருதலி - புதிய நியாயங்களை காட்டியவாறு; அதிஸுலபதலெ - மிகவும் சுலபமாக; கெத்தரு - (ஆனந்ததீர்த்தர்) வென்றார்; ஜீய - சர்வக்ஞரான; பூர்ணப்ரமதி - ஆனந்ததீர்த்தர்; தரெயொள ஜீயரெனிஸித - இந்த பூமியில் அறிஞர் எனப்படும்; புத்திஸாகர - புத்திஸாகர என்பவனை; ஈதகெ - இவருக்கு; ப்ரேய - நண்பனான; வாதிஸிம்ஹன - வாதிஸிம்மனை; கெலிது - வென்று; தா மெரெத - வெற்றி வாகை சூடினார். 

சர்வக்ஞ பீடத்தில் ஏறிய ஸ்ரீமதானந்ததீர்த்தரின் வாத திறமைகளை விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

மாயாவாதங்களை அறிந்த சிலரை, நியாய சாஸ்திரங்களில் பண்டிதர்களை, புதிய நியாயங்களைக் காட்டியவாறு, ஆனந்ததீர்த்தர் மிகவும் சுலபமாக வென்றார். சர்வக்ஞரான ஆனந்ததீர்த்தர், அறிஞர் எனப்படும் புத்திஸாகர என்பவனை மற்றும் இவனின் நண்பனான வாதிஸிம்மனை வென்று, வெற்றி வாகை சூடினார். 

பண்டிதர்களை, மாயாவாதிகளை ஸ்ரீமதானந்த தீர்த்தர் வாதத்தில் வென்றது மத்வ விஜயத்தில் 5-3 முதல் 5-7 வரை வர்ணிக்கப்பட்டுள்ளது. 

கதா சிதத்ரோப யயௌ யதி: ஸகா

கோவிந்த: புத்தேர்பஹு சிஷ்ய ஸம்வ்ருத: |

அமுஷ்ய சிஷ்யா அனுமான சிக்‌ஷிதா:

ததாsஜிகீஷன் குரு புத்திமுத்ததா: || 5-3 

ஒருமுறை அச்யுதப்ரேக்‌ஷரின் நண்பரான சன்யாசி ஒருவர், தனது சிஷ்யர்களுடன் ரஜதபீடபுரத்திற்கு வந்தார். தர்க்க சாஸ்திரங்களில் வல்லவரான அவரது சிஷ்யர்கள் அதில் வாதம் செய்ய மத்வாசார்யரை அழைத்தபோது, ஜீவர்களில் காணப்படும் வேறுபாட்டினை வெறும் தர்க்கத்தினால் நிரூபிக்க முடியும் என்று, அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினார். அதற்கு ஸ்ரீமதாசார்யர் பேத சத்ய’ (வேறுபாடு உண்மை). ஆனால் வேத புராணங்களின் உதவியில்லாமல், தனியாக வேறுபாட்டினை நிரூபிப்பது சாத்தியம் இல்லை என்று சொல்லி, அவரது வாதங்களை கண்டித்தார். 

அதற்கு பதிலளிக்கமுடியாத வாதிகள் உலகம் என்பது பொய். சிப்பிக்குள் முத்து என்பதுபோலஎன்று அடுத்த வாதத்தைத் துவக்க, ஸ்ரீமதாசார்யர் உலகம் உண்மை. பானையைப் போல காண்பதினால்என்று பதிலளித்து அவரை முழுமையாக வாயடைக்கச் செய்தார். தர்க்கம் என்றும் சுதந்திரமான (தனியான) ஆதாரம் என்று ஏற்றுக்கொள்ள முடியாததால், வெறும் தர்க்கத்தினால் எதையும் நிரூபிக்கமுடியாது என்று சொல்லி ஜகாம நாம்னாப்யனு மான தீர்த்ததாம் |’ (5-7) அனுமானத்தை (கேள்வி / தர்க்கம்) முழுமையான அறிந்தவராகையால் இவர் அனுமான் தீர்த்தர்என்று அழைக்கப்படுவார் என்று அங்கிருந்த அறிஞர்கள் அபிப்ராயப்பட்டனர். 

புத்திசாகர மற்றும் வாதிசிம்மரை தோற்கடித்தல்

(மத்வ விஜயத்தில் 5-8 முதல் 5-16 வரை உள்ள ஸ்லோகங்கள்) 

சமஸ்த வாதீந்த்ர கஜ ப்ரபக்னத:

சரன்னவன்யாம் ப்ரதிபக்‌ஷ காங்க்‌ஷயா |

வேதத்விஷாம் ய: ப்ரதம: ஸமாயயௌ

ஸ வாதிஸிம்ஹோsத்ர ஸ புத்திஸாகர: ||5-8 

பௌத்தத்தில் சிறந்தவரான, வேதங்களை வெறுப்பவரான வாதிசிம்மஎன்பவர், ‘புத்திசாகரஎன்பவருடன் சேர்ந்து அச்யுதப்ரேக்‌ஷரிடம் வாதம் செய்வதற்கு வந்தனர். (பாவபிரகாசிகையில், வாதிசிம்மன் பௌத்த பண்டிதனான புத்திசாகரனுடன் வாதிட்டு தோற்று, அவனின் சிஷ்யர் ஆனவர் என்று இருக்கிறது). இருவரும் பூர்ணப்ரக்ஞரை தோற்கடிப்பதற்கு வந்தனர். மிகுந்த கர்வம் கொண்டிருந்த அவர்களை வெல்வதற்கு ஆசைப்பட்டு, சத்சித்தாந்தத்தில் சிறந்தவரான, வாதிகளை வெல்லக்கூடியவரான (வேறொரு மடத்தில் இருந்த) பூர்ணப்ரக்ஞரை, அச்யுதப்ரேக்‌ஷர் ரஜதபீடபுரத்திற்கு வரச்செய்தார். 

வாதத்தில் வல்லவரான பூர்ணப்ரக்ஞர், எதிராளியின் கதையை (Mace) அம்பினால் அழிப்பதுபோல சுலபமாக தன் வாதத்தின் மூலம் வாதிசிம்மனின் வாதங்களை வீழ்த்தினார். அடுத்து வாதிசிம்மன், ஆசார்யரின் திறனைப் பார்த்து பொறாமையில், வேறொரு விஷயத்தைப் பற்றிய 18 மாற்று விஷயங்களைப் பற்றி பேசத்துவங்க, சூரியன் தனது கிரணங்களால் இருட்டினை விலக்குவதுபோல, ஸ்ரீமதாசார்யர் மிகச்சுலபமாக, அந்த எல்லா விஷயங்களையும் வியாசரின் வாக்கியங்களினால் கண்டித்தார். பண்டிதனும், கர்வம் கொண்டவனுமான புத்திசாகரனையும் இதே போல வென்றார். (இந்த சம்பவம், ஸ்ரீமதாசார்யர் பீடாதிபதியாகி சில மாதங்களிலேயே நடந்ததாகும்). 

வாதிசிம்மன் மற்றும் புத்திசாகரன், வேறு வழி இல்லாமல் வாதம் நாளை தொடரட்டும் என்றனர். அதற்கு ஸ்ரீமதாசார்யர் - உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால் இப்போதே சொல்லவும் எனவும், அதற்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப் போயினர். அவர்கள் இருவரும் இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிப்போயினர். இதை அறிந்த ஊர் மக்கள், ஆசார்யரே வென்றார் என்று அறிந்தனர். ஸ்ரீமதாசார்யரின் வாக்-சாதுர்யம், பாண்டித்யம் ஆகியவற்றைக் கண்டு அனைவரும் மெய் மறந்தனர். 

ஸ்ரீமதானந்ததீர்த்தரின் வாதத் திறமைகளை அடுத்த ஸ்லோகத்திலும் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

****


No comments:

Post a Comment