Tuesday, March 8, 2022

ஸ்லோகம் #14: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #14: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 14]

தாளித3ரெ யத்யாஸ்ரமவ நீ பா1லகரு யாரெமகெ3 பு4வியலி

லாலிஸெம்மய வசனவெந்த3ரு ஜனகஜனனியரு |

பாலிஸுவனென்னனுஜ நிம்மனு கேளிதி3த்33ரெ என்ன நுடி3யனு

தாளலாரிரி ஸதத து3க்க2வனெந்து3 த்3ருட4மனதி3 ||14 

நீ - நீ; யத்யாஸ்ரமவ - யதி ஆசிரமத்தை; தாளிதரெ - ஏற்றால்; புவியலி - இந்த பூமியில்; பாலகரு - காப்பாற்றுபவர்கள்: யாரமகெ - எங்களுக்கு யார் இருக்கிறார்கள்?; எம்மய வசன - எங்கள் பேச்சை; லாலிஸு - கேள்; எந்தரு - என்றனர்; ஜனகஜனனியரு - பெற்றோர்; நிம்மனு - உங்களை; என்னனுஜ - என் தம்பி; பாலிஸுவ - காப்பாற்றுவான்; என்ன நுடியனு - என் பேச்சை; கேளிதித்தரெ - கேட்கவில்லையென்றால்; ஸதத துக்கவ - நிரந்தரமான துக்கத்தை; தாளலாரிரி - தாங்க மாட்டீர்கள்; எந்து - என்றான்; த்ருடமனதி - திடமான மனதினால். 

வாசுதேவனின் சன்யாச ஆசிரம ஸ்வீகரிக்கும் பகுதியை விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

நீ யதி ஆசிரமத்தை ஏற்றால், இந்த பூமியில் எங்களை காப்பாற்றுபவர்கள் யார் இருக்கிறார்கள்? எங்கள் பேச்சைக் கேள் - என்றனர் வாசுதேவனின் பெற்றோர். ஆனால் வாசுதேவனோ, உங்களை என் தம்பி காப்பாற்றுவான். என் பேச்சை நீங்கள் கேட்கவில்லையென்றால், வரும் நிரந்தரமான துக்கத்தை தாங்க மாட்டீர்கள் என்று திட மனதுடன் கூறினான். 

மத்வவிஜயத்தில் இந்த படலம் 4-15 ஸ்லோகத்திலிருந்து வர்ணிக்கப்பட்டுள்ளது. 

ஸுதம் யதீந்த்ரானு சரம் விராகிணம்

நிஷம்ய ஸன்யாஸ நிஷண்ண மானஸம் |

ஸுவத்ஸலௌ ரூப்ய தளாலயா ஸ்திதம்

வியோக தாந்தௌ பிதரௌ ஸமீயது: ||4-15 

தங்கள் மகனான வாசுதேவன் அச்யுதப்ரேக்‌ஷரின் சிஷ்யன் ஆகிவிட்டதையும், சன்யாசி ஆகப்போவதையும் கேட்டு, பாசம் மிக்க பெற்றோர், அவனைப் பார்க்க உடுப்பிக்கு விரைந்தனர். 

வராஸ்ரமாப்திம் மம ஸம்வதஸ்வ

மாம் கதாசிதப்யம்ப யதீச்சஸீக்‌ஷிதும் |

யதன்யதா தேஷமிமம் பரித்யஜன்

ந ஜாது த்ருஷ்டேர்விஷயோ பவாமி வ: ||4-28 

அம்மா, என்னை எப்போதாவது பார்க்க வேண்டும் என்றால், நான் சன்யாசி ஆவதற்கு ஒப்புதல் கொடுங்கள். அனுமதி இல்லையெனில், இந்த தேசத்தையே விட்டு, அடுத்து உங்கள் கண்ணிலேயே தென்படமாட்டேன் - என்றான் வாசுதேவன். 

வாசுதேவன் சன்யாச ஆசிரமம் ஏற்று பூர்ணபோதர் ஆனதை, அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment