Friday, March 18, 2022

ஸ்லோகம் #24: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #24: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[ஸ்லோகம் 24]

ஹிமகி3ரிய தலத3ல்லி நெலெஸிஹ கமலெரமணன கண்டு3 வந்தி3ஸி

விமலமதிக3ளு கீ3தெக3வர ப்4யாவனர்ப்பிஸலு |

ஹிமனிலய ஷ்ருங்கத3லி 3தரீத்3ரும பு33தி3 ராஜிஸுவ வ்யாஸா

ஸ்ரமவ ஸேரலு தெரளித3ரு ஹரியாக்3ஞெயனுஸரிஸி || 24 

ஹிமகிரிய தலதல்லி - இமாலயத்தில், ஹிமவத் பர்வதத்தில்; நெலெஸிஹ - நிலைத்திருக்கும்; கமலெரமணன - வேதவ்யாசரை; கண்டு வந்திஸி - கண்டு வணங்கி; விமலமதிகளு - பவித்ரமான மதியைக் கொண்டவரான (ஆனந்ததீர்த்தர்) கீதெகெ - பகவத் கீதைக்கு; அவர ப்யாவனர்ப்பிஸலு - அவருடைய பாஷ்யத்தை சமர்ப்பிக்க; ஹிமனிலய ஷ்ருங்கதலி - இமாலய மலையில்; பதரித்ரும புடதி - பதரி மரத்தின் அடியில்; ராஜிஸுவ - வீற்றிறுக்கும்; வ்யாஸாஸ்ரமவ ஸேரலு - வ்யாஸ ஆசிரமத்தை சென்று அடைய; ஹரியாக்ஞெயனுஸரிஸி - ஸ்ரீஹரியின் ஆணைக்கேற்ப; தெரளிதரு - கிளம்பினார். 

ஸ்ரீமதாசார்யரின் பதரிகாசிரம பயணத்தை இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இமாலயத்தில் நிலைத்திருக்கும் வேதவ்யாஸரை கண்டு வணங்கி, பவித்ரமான மதியைக் கொண்டவரான ஸ்ரீமதாசார்யர், பகவத் கீதைக்கு அவருடைய பாஷ்யத்தை சமர்ப்பிக்க, இமாலய மலையில் பதரி மரத்தடியில் வீற்றிருக்கும் வ்யாஸ ஆசிரமத்தை சென்று அடைய, ஸ்ரீஹரியின் ஆணைக்கேற்ப கிளம்பினார்.

ஸ்ரீமதாசார்யரின் இந்த பயணம், மத்வ விஜயத்தில் 6-34 முதல் 6-37 வரையிலான ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீஹரியின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, தான் க்ஷேத்திரப் பயணம் மேற்கொள்வதாக, ஆசார்யர் தம் குருவிடம் (அச்யுதப்ரேக்ஷருக்கு, புருஷோத்தம தீர்த்தர் என்னும் பெயர் இருந்தது என்று கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது) அனுமதியைப் பெற்றார். ஸ்ரீஹரி எப்போதும் பூர்ணப்ரக்ஞரை அருளட்டும் என்று அச்யுதப்ரேக்ஷர் வேண்டினார். பின், ஆசார்யர் தம் சிஷ்யர்களுடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பயணத்தில், தவறான உரைகளைக் கண்டித்தவாறு, வேத சாஸ்திரங்களில் உண்மையான பொருளை உபதேசித்தார். 

புத்திஷுத்தி கரகோ நிகராட்யம்

தீர்த்த சாதமுபயம் தரண்யாம் |

ஆத்ம மஜ்ஜனத ஏவ நிகாமம்

பர்யஷோதயத மந்தமனீஷ: || (6-35) 

தத்ர தத்ர ஜகத்ரய சித்ரம்

கர்ம ஷர்ம தமனுஸ்ம்ருதி மாத்ராத் |

ஸஞ்சரன் விதததாப நராணாம்

கோசரம் பதரிகாஸ்ரம பார்ஷ்வம் ||6-37 

ஸ்வயம் பவித்ரரான ஆசார்யர், கங்காதி நதிகளில் குளித்து அவற்றையும் பவித்ரமாக்கினார். ஹரிபாதோதகமான கங்கையை தலையில் தெளித்துக்கொண்டு, தமது சிஷ்யர்களுடன் கங்கையை கடந்து பதரிகாஸ்ரமத்தை அடைந்தார். 

ஸ்ரீஸ்ரீபாதராஜரின் மத்வ நாமாவில் ஸ்ரீமதாசார்யரின் இந்த பயணம், ஸ்லோகம் #25 இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. 

ஆர்பகதவனைதி பதரியலி மத்வமுனி

நிர்பயதி சகல சாஸ்திரவ படிசித |25 

வட இந்தியப் பயணத்தில், தனது தேகம் மற்றும் கூர்மையான புத்தியினால் கங்காதி தீர்த்தங்களை மற்றும் சாஸ்திரங்கள் என்னும் தீர்த்தங்களை சுத்தம் செய்தவாறு பதரிக்ஷேத்திரத்தை சென்று அடைந்தார். 

இத்துடன் மத்வவிஜயம் ஆறாம் சர்க்கம் முடிவடைந்தது. அடுத்து ஏழாம் சர்க்கத்தில் வரும், ஸ்ரீமதாசார்யர் ஸ்ரீவேதவ்யாஸரை தரிசனம் செய்த படலத்தை, அடுத்த ஸ்லோகத்தில் விவரிக்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

****

No comments:

Post a Comment