Monday, March 7, 2022

ஸ்லோகம் #13: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

 ஸ்லோகம் #13: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

****

[ஸ்லோகம் 13]

4ரணிப4வ தி3திஸுதர த3ண்டி3ஸெ பரமஹம்ஸாஸ்ரமவ படெ3யலி

கு3ருக3ளனு ஹுடு3குதலி ஹொரட1னு ஸகலவ த்யஜிஸி |

பரமமங்க3ள வேதி3ஜெய கர ஸரஸிஜதி3 தொ3ரெதுது33 பு4ஞ்சிஸி

கரண ஷுத்3தி4யல்லித்த யதிவரனோலக3கெ13ந்த3 ||13 

தரணிபவ - பூமியில் வந்து பிறந்துள்ள; திதிஸுதர - திதியின் மக்களான அசுரர்களை; தண்டிஸெ - தண்டிப்பதற்கு; பரமஹம்ஸாஸ்ரவம படெயலி - யதி ஆசிரமத்தைப் பெறுவதற்காக; குருகளனு - ஒரு தக்க குருவை; ஹுடுகுதலி - தேடி; ஹொரடனு - புறப்பட்டான்; ஸகலவ த்யஜிஸி - அனைத்தையும் துறந்துவிட்டு; பரமமங்கள - மிகவும் பவித்ரமான; வேதிஜெய - திரௌபதியின்; கர ஸரஸிஜதி - அவளின் கரங்களால்; தொரெதுதுத - கிடைத்ததை; புஞ்சிஸி - உண்டதால்; கரண ஷுத்தியல்லித்த - சுத்தமான மனதினைக் கொண்டிருந்த; யதிவரனோலககெ - யதி வரேண்யரின்; ஓலககெ - சபைக்கு; பந்த - வந்தான். 

மத்வ விஜயத்தின் நான்காம் சர்க்கத்தின் விஷயங்களை விளக்கத் தொடங்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

பூமியில் வந்து பிறந்துள்ள, திதியின் மக்களான அசுரர்களை தண்டிப்பதற்கு, யத்யாஸ்ரமத்தை பெறுவதற்காக, ஒரு தக்க குருவைத் தேடி, வாசுதேவன் புறப்பட்டான். அனைத்தையும் துறந்து, (சென்ற பிறவியில்) திரௌபதியின் கரங்களால் கிடைத்ததை உண்டதால், சுத்தமான மனதினைக் கொண்டிருந்த யதிவரேண்யரின் சபைக்கு வந்தான். 

மத்வ விஜயத்தின் 4-2ம் ஸ்லோகம் இதை இவ்வாறு வர்ணிக்கிறது. 

அனன்ய சங்காத் குணசங்கிதா ஹரே: ஜனஸ்யமான் து விசிஷ்ட சேஷ்டிதம் |

அசங்கமஸ்மாத் ப்ரகடி கரோம்யஹம் நிஜம்பஜன் பாரமஹம்ஸ்யமாஸ்ரமம் || (4-2) 

சஜ்ஜனர்களின் மேலுள்ள கருணையினால், தேவதைகளுக்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்து மக்களைக் குழப்பும் மாயாவாதிகளைக் கண்டித்து, சஜ்ஜனர்களுக்கு சத்வைஷ்ணவ சித்தாந்தத்தை போதித்து உதவுவதற்கு அவதரித்த வாசுதேவன், மேற்கொண்டு செய்யவேண்டியதை யோசித்தான்.

ஸ்ரீஹரியிடம் பக்தி பெருகுவதற்கு உலகத்தின் மேல் விரக்தி வேண்டும். தேவனிடத்தில் அன்பு வருவதற்கு, தற்காலிக விஷயங்களின் மேல் வெறுப்பு வரவேண்டும். சஜ்ஜனர்கள் இவற்றை தங்கள் நடைமுறைக்கு கொண்டுவருவர். ஆகையால், தானும் வைராக்கியத்தைக் காட்டி சன்யாசி ஆவேன் என்றான் வாசுதேவன். 

புரைஷ கிருஷ்ணாகர ஸித்த ஷுத்திமத்

வரான்ன புக்த்யா கில பாண்டவாலயே |

விஷோதிதாத்மா மதுக்ருத் ப்ரவ்ருத்திமான்

சசார கான்ஸ்சித் பரி வத்ஸரான் முதா || 4-7 

விரக்தி கொண்ட ஒரு சன்யாசி. எப்போதும் அச்யுதனையே வணங்கியதால் அச்யுதப்ரேக்‌ஷர் என்று அழைக்கப்பட்டார். ஹம்ஸ நாமக பரமாத்மாவின் பரம்பரையில் வந்த மஹானுபாவர். இவர் முந்தையபிறவியில், பிக்‌ஷை பெற்று உண்ணும்போது, திரௌபதியின் கையில் தயாரான சுத்தமான அன்னத்தைப் பெற்று உண்ட சன்யாசி. ஆகையால் சுத்தமான மனது உடையவராக இருந்தார். 

வாசுதேவன் அச்யுதப்ரேக்‌ஷரின் வந்து சேர்தல் 

ப்ரதீக்‌ஷமாணம் தமனுக்ரஹம் முதா

நிஷேவமாணம் புனரம்புஜேக்‌ஷணம் |

ஸதாம் குரு: காரண மானுஷாக்ருதி:

பதிம் ப்ரஷாந்தம் தமுபா ஸஸாத ஸ: ||4-14 

பக்தரான அச்யுதப்ரேக்‌ஷருக்கு, பக்தவத்ஸலான ஸ்ரீஹரி இன்னொருவர் மேல் ஆவேசம் கொண்டு ஒரு செய்தியைக் கூறினார். ஒரு சிஷ்யர் கிடைப்பார், அவன் மூலமாக என்னை அறி’. பொறுமையுடன் காத்திருந்த அச்யுதப்ரேக்‌ஷரிடம், சர்வக்ஞரான வாயுதேவர் சிஷ்யராக சேர்வதற்கு வந்து சேர்ந்தார். 

மத்வ விஜய நான்காம் சர்க்கத்தைப் பற்றியும், இந்த சர்க்கத்தைப் படிப்பதால் வரும் பலன்களைப் பற்றியும் மாதனூரு ஸ்ரீவிஷ்ணு தீர்த்தர், தமது ஸ்ரீமத் ஸுமத்வவிஜய ப்ரமேய பல மாலிகா கிருதியில் இவ்வாறு கூறுகிறார். 

துர்யாஷ்ரம மனுப்ராப்ய வேதா3ந்த நிரதோs4வத் |

ஷிஷ்யானத்4யாப யாமாஸ ஸம்ப்ரதா3ய மஹாபயன் ||5|| 

முந்தைய பிறவியில், பாரதிதேவியரின் அவதாரரான த்ரௌபதி தேவியரின் பவித்ர கைகளால் உணவு உண்டு, சுத்தாந்தகரணரான ஸ்ரீஅச்யுதப்ரேக்‌ஷர் மூலமாக சன்யாச ஆசிரமத்தை ஏற்றுக்கொண்டு, வேதாந்தத்தில் தன்னுடைய விருப்பத்தைக் காட்டினார். அதாவது, உத்தம ரீதியில் சன்யாச தர்மத்தை பின்பற்றினார். சன்யாசிகளின் முக்கிய கடமைகளான அத்யயனம், பிரவசனங்களை சம்பிரதாயத்திற்கேற்ப பின்பற்றினார். 

நான்காம் சர்க்கம் : நற்சாதனையால் புகழ் 

வாசுதேவன் சன்யாசம் ஏற்றுக் கொள்வதான விஷயங்களை அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment