Thursday, September 1, 2022

[பத்யம் #105] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #105] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 105]

நவனவ ஞானத3லி தி3னதி3

நவவித33 4க்தியனு வ்ருத்3தி4ஸி

நவயுத த்3வாரக3 தனுவனு ரத2வனெந்த3ரிது |

தி3விஜபதி ஸிரிப1வன மிக்கா

தி3விஜத1தி1 விவரத3லி சிந்திஸி

அவனியொளு நவமாஸத3னுப4 ஜரிது3 ப்ரார்த்திபரு ||105 

நவனவ ஞானதலி - புதிது புதிதாக ஞானம் பெற்று; தினதின - தினம்தோறும்; நவவித பக்தியனு - ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம் என்னும் பக்தியை; வ்ருத்திஸி - வளர்த்துக் கொண்டு; நவயுத த்வாரகள - நவ த்வாரங்களைக் கொண்ட; தனுவனு - இந்த தேகத்தினை; ரதவனெந்தரிது - ரதம் என்று அனுசந்தானம் செய்து கொண்டு; திவிஜபதி - தேவதைகளின் தலைவனான ஸ்ரீஹரி; ஸிரிபவன - ஸ்ரீமுக்யபிராண தேவர்; மிக்கா திவிஜததி - மற்றும் மற்ற அனைத்து தேவதைகளின் (இருப்பிடம் என்பதை); விவரதலி சிந்திஸி - விவரமாக சிந்தித்து; அவனியொளு - இந்த பூமியில்; நவமாஸதனுபவ ஜரிது - பிறப்பு என்னும் அனுபவத்தை விலக்குமாறு; பிரார்த்திபரு - பிரார்த்தனை செய்வார்கள். 

ஒன்பது என்னும் எண்ணின் சிறப்பினை விளக்கியவாறு, இந்த பத்யத்தில் ஹரிபக்தர்கள் செய்ய வேண்டிய நவ வித பக்திகளை விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.

***


No comments:

Post a Comment