Sunday, September 4, 2022

[பத்யம் #108] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #108] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 108]

ஊட மாடு3 3ரிதெ3 லௌகிக

பூ31கவ ஹரடத3லெ விவித2

ராட மூர்த்தி த்4யான மனதொ3ளகா3ந்து மோதி3புத3 |

பாடு1 பட33லெ கால காலகெ

கோ4டகாஸ்யனு இத்துத3கெ மிகெ3

ஸாடி1 இல்லெந்த3ரிது பு4ஞ்சிஸெ 4வவ தா3டிபனு ||108 

ஊட மாடுத - சாப்பிடும்போது; பரிதெ - வெறும்; லௌகிக - லௌகிகமான; பூடகவ - கடப பேச்சுக்களை; ஹரடதலெ - அரட்டை அடிக்காமல்; விவித - பற்பல; ராட மூர்த்தி த்யான - விராட மூர்த்தி தியானத்தை; மனகொளகாந்து - மனதில் கொண்டு வந்து; மோதிபுத - மகிழ்ச்சி அடைந்தவாறு; கால காலகெ - அனைத்து காலங்களிலும் (எப்போதும்); கோடகாஸ்யனு - ஸ்ரீஹரி; பாடு படதலெ - கஷ்டப்படாமல்; இத்துதகெ - கொடுத்ததற்கு; மிகெ ஸாடி - சரிசமம்; இல்லெந்தரிது - இல்லை என்று அறிந்து; புஞ்சிஸெ - உண்டால்; பவவ தாடிபனு - சம்சாரக் கடலை தாண்டச் செய்வான். 

உணவு உண்ணும்போது, வீணான லௌகிக அரட்டைகளில் ஈடுபடாமல், பகவந்தனின் விராட மூர்த்தி தியானத்தை மனதில் கொண்டு வந்து, மகிழ்ச்சி அடைந்தவாறு எப்போதும் ஸ்ரீஹரி கொடுத்ததற்கு சமமாக வேறு எதுவும் இல்லை என்று அறிந்து உண்டால், ஸ்ரீஹரி நம்மை சம்சாரக் கடலை தாண்டச் செய்வான்.

இதையே ஸஜ்ஜனர்களின் குணங்களாக ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு ஒரு பெரிய பட்டியலையே கூறுகிறார். வீண் அரட்டைகளில் ஈடுபடாமல், இத்தகைய பட்டியலில் சிலவற்றையாவது செய்தால், பகவந்தன் நம்மை பவ ஸாகரத்தை கடக்கச் செய்கிறான் என்கிறார் ஸ்ரீதாஸர். 

ஞான 4க்தி விரக்தி வினய புராண

ஷாஸ்திர  ஸ்ரவண சிந்தன

தா3 ஷம 3 யக்ஞ ஸத்ய அஹிம்ஸ பூ4தத3 |

த்3யான 43வன்னாம கீர்த்தன

மௌன ஜப தப வ்ரத ஸுதீர்த்த2

ஸ்னான மந்த்ர ஸ்தோத்திர வந்த3 ஸஜ்ஜனர கு3ணவு ||

(ஸர்வ ஸ்வாதந்த்ர்ய ஸந்தி #18)

***

No comments:

Post a Comment