Friday, September 2, 2022

[பத்யம் #106] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #106] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 106]

ஹத்து கரணக3ளிந்த3 கெ3ய்வ

மஸ்த கர்மவ ஹத்து ரூபனு

தத்வரொளு தானிந்து1 ப்ரேரிஸி நித்ய நடெ3ஸுதிரெ |

ஸத்ய ஸத்யத3 நுடி3 இதெ3ம்ப3கெ3

ஹத்துவவெ மத்த13 2லக3ளு

ஹத்து மாதுக3ள்யாகெ ஹத்திரலித்3து3 ஹரி காய்வ ||106 

ஹத்து கரணகளிந்த - பஞ்ச கர்மேந்திரியங்கள் + பஞ்ச ஞானேந்திரியங்களால்; கெய்வ - செய்த; ஸமஸ்த கர்மவ - அனைத்து கர்மங்களையும்; ஹத்து ரூபனு - நீத, ஸாதாரண, விசேஷ, ஸஜாதி, நைஜ, அஹித, ஸஹஜ, விஜாதி, கண்ட, அகண்ட; தத்வரொளு தானிந்து - அனைத்து தத்வாபிமானி தேவதைகளில் தான் இருந்து; ப்ரேரிஸி - ப்ரேரணை செய்து; நித்ய நடெஸுதிரெ - எப்போதும் நடத்துகிறான்; ஸத்ய ஸத்யத நுடி - இதுவே உண்மையான பேச்சு; இதெம்பகெ - இது என்பவருக்கு; ஹத்துவவெ - வருமா?; மத்ததர பலகளு - வேறு (கெட்ட) பலன்கள்; ஹத்து மாதுகள்யாகெ - வேறு பேச்சுகள் எதற்கு?; ஹத்திரலித்து - அருகில் இருந்து; ஹரி காய்வ - ஸ்ரீஹரி அவனே காக்கிறான். 

பத்து என்னும் எண்ணின் சிறப்பினை விளக்கியவாறு, 10 கரணங்களால் செய்த கர்மங்களை, 10 ரூபங்கள் கொண்ட பகவந்தன் அருகில் நின்று அவனே காப்பான் என்று விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

இதையே ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு ஒரு பத்யத்தில் கூறியுள்ளார். 

தோத3கனு தானாகி3 மனமொத3

லாத3 கரணதொளித்து3 விஷயவ

நைது3வனு நிஜபூர்ண ஸுக2மய க்3ராஹ்ய க்3ராஹகனு | 

மனம் முதலான 10 கரணங்களில் இருந்து, அவனே அனைத்தையும் செய்கிறான், செய்விக்கிறான். இப்படி அறிபவர்களுக்கு ஸ்ரீஹரி அவனே காக்கிறான்.

***


No comments:

Post a Comment