Saturday, September 10, 2022

[பத்யம் #113] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #113] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 113]

ரீரதி3 பரிவ நாடி33

ளா ஸுஷும்ன இடா3 ஸுபிங்க3

ஸாஸிரக3ளெப்பத்தெரடு3 அத3ரொளு ஸ்ரீ ஸிரி ஸஹித |

ஸூஸுதிரெ ஸ்த்ரீ புருஷ பே43தி3

மீஸலிந்தா3 நாடி3 நதி33ளொ

ளீஸி மஜ்ஜனகெ3ய்து3 ப்ரதிதி3 ஹரிய ஸேவிபரு ||113 

அடுத்து இந்த சரீரத்தில் பாயும் நாடிகளையும், அதில் அனுசந்தானம் செய்ய வேண்டிய விஷயத்தைப் பற்றியும் ஸ்ரீதாஸர் விளக்குகிறார். 

ஷரீரதி - இந்த சரீரத்தில்; பரிவ - பாயும்; நாடிகளு - நாடிகள்; ஸுஷும்ன இடா ஸுபிங்கள - ஸுஷும்ன, இடா, பிங்களா ஆகியவை; ஸாஸிரகளெப்பத்தெரடு - 72,000; அதரொளு - அவற்றில்; ஸ்ரீஷ ஸிரி ஸஹித - ஸ்ரீலட்சுமியுடன் ஸ்ரீஹரி; ஸூஸுதிரெ - வசித்திருக்க; ஸ்த்ரீ புருஷ பேததி - ஆண் நாடிகள் / பெண் நாடிகள் என்ற பேதத்தில்; மீஸலிந்த - இருக்க; நாடி நதிகளொளு - அந்த நாடி நதிகளில்; ஈஸி மஜனகெய்து - நீச்சல் / ஸ்னானம் செய்து; ப்ரதிதின - தினமும்; ஹரிய ஸேவிபரு - ஸ்ரீஹரியை வணங்குகிறார்கள்.  

இந்த சரீரத்தில் பாயும் நாடிகள், ஸுஷும்னா, இடா, பிங்களா ஆகியவை. அவை மொத்தம் 72,000. அவற்றில், ஸ்ரீஹரி ஸ்ரீலட்சுமிதேவியுடன் வசித்திருக்க, ஆண் நாடிகள் / பெண் நாடிகள் என்ற பேதத்தில் இருக்க; அந்த நாடி நதிகளில் நீச்சல் / ஸ்னானம் செய்து, தினமும் அந்த ஸ்ரீஹரியை அறிஞர்கள் வணங்குகிறார்கள். 

இதையே ஸ்ரீஜகன்னாததாஸர், ஒரு ஹரிகதாம்ருதஸார பத்யத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

ஸூரிக3ளு சித்தைஸுவுது3 பா4

கீ3ரதியெ மொத3லாத3 தீர்த்த23

ளீரதிv வெப்பத்து ஸாவிர நாடி3யொளகி3ஹவு |

ரஹஸ்யவனல்ப ஜனரிகெ3

தோரி பேளதெ3 நாடி3நதி3யொளு

தீ4ரரனுதி3 மஜ்ஜனவ மாடு3தலெ ஸுகி2ஸுவரு ||(12-9) 

மேற்சொன்ன 72,000 நாடிகளில் கங்கா, துங்கா முதலான அனைத்து தீர்த்தாபிமானி தேவதைகளும் வசிக்கின்றனர். இந்த விஷயம் மிகவும் ரகசியமானது. பாமரருக்குக் கூறினால் அவர்கள் நகைச்சுவை என்று சிரிப்பார்கள். அத்தகையவர்களுக்கு இதை சொல்லக்கூடாது. இந்த நம்பிக்கை உள்ளவர்கள், எப்போதும் தம் நாடிகளில் அனைத்து நதிகளும் இருக்கின்றன என்று சிந்தித்து, அவற்றில் ஸ்னானம் செய்கிறோம் என்று மனதில் நினைத்தால், அனைத்து தீர்த்தங்களில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.

***



No comments:

Post a Comment