Monday, September 12, 2022

[பத்யம் #115] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #115] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் 115]

பூஜிஸுவ ஸௌபா4க்3 லகுமிகெ3

வாஜிவக்த்ரன ஸ்தோத்ரகெ3ய்யுவ

நைஜ ஸுக2 ப்3ரம்மாதி3 ஸுரரிகெ3 மத்தெ ஹரி நமன

பூ4 ஜனாதி4பராதி3 ஸாத்விக

தேஜயுதரிகெ3 மீஸாலிகி3ரெ

மாஜத3லெ இத3னரிது1 நெனெவுதெ3 பரம ஸாத4னவு ||115 

லகுமிகெ - ஸ்ரீலட்சுமிக்கு; பூஜிஸுவ ஸௌபாக்ய - (ஸ்ரீஹரியை) பூஜிக்கும் ஸௌபாக்கியம் உள்ளது; ஸுக பிரம்மாதி ஸுரரிகெ - ஸுக மகரிஷி, மற்றும் பிரம்மாதி தேவதைகளுக்கு; வாஜிவக்த்ரன - (குதிரை முகம் கொண்டவனான) ஹயவதனனின்; ஸ்தோத்ரகெய்யுவ - ஸ்தோத்திரம் செய்யும்; நைஜ ஸுக - நிரந்தர சுகம் உள்ளது; மத்தெ - பிறகுபூ ஜனாதிபராதி - பூமியில் வசிப்பவர்களான; ஸாத்விக தேஜயுதரிகெ - ஸாத்விக குணத்தைக் கொண்டவர்களுக்கு; ஹரி நமன - ஸ்ரீஹரியை வணங்கும்; மீஸாலிகிரெ - வாய்ப்பு கிடைத்திருக்கிறது; மாஜதலெ - தவறாமல்; இதனரிது நெனெவுதெ - இதனை எப்போதும் சிந்தித்திருப்பதே; பரம ஸாதனவு - மிகச்சிறந்த ஸாதனம் ஆகும். 

பகவந்தனை எப்போதும் சிந்தித்திருக்க வேண்டும் என்பதை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீலட்சுமிக்கு மற்றும் பிரம்மாதி ஸுரர்களுக்கு ஸ்ரீஹரியை ஸ்தோத்திரம் செய்யும் நிரந்தர சுகம் உள்ளது. பிறகு இந்த பூமியில் வசிப்பவர்களான ஸாத்விக குணத்தைக் கொண்டவர்களுக்கு, ஸ்ரீஹரியை வணங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை தவறாமல் எப்போதும் சிந்தித்திருப்பதே, மிகச் சிறந்த ஸாதனம் ஆகும். 

இந்த அனுசந்தானத்தினை ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸார்த்தில் பல பத்யங்களில் சொல்லியிருக்கிறார். அவற்றில் ஒன்றினை இப்போது பார்ப்போம். 

மக்களாடிசுவாக மடதியொ

ளக்கரதி நலிவாக ஹய

ல்லக்கி கஜமொதலாத வாஹனவேரி மெரெவாக |

பிக்குவாக ஆகளிசுதலி தே

வக்கிதனயன நெனெவுதிஹ நர

சிக்கனெம தூதரிகெ ஆவாவல்லி நோடிதரு ||(13-1)

***


No comments:

Post a Comment